எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 10 ஜூன், 2020

கும்பக்கலசம் இல்லாத தரங்கம்பாடி மாசிலாமணிநாதர் கோயில்

கும்பக்கலசம் இல்லாத தரங்கம்பாடி மாசிலாமணிநாதர் கோயில்


கோபுரம் இருக்கு ஆனா கும்ப கலசம் இல்லை. இப்பிடி ஒரு கோயிலைத் தரங்கம்பாடிக் கடற்கரையில் பார்த்தேன். கோபுரம் முழுமையா இதே அமைப்புலதா கும்பம் இல்லாமக் கட்டப்பட்டிருக்கு. 

கோயிலுக்குப் பின்னாடி வேற பிட்டு பிட்டா கோயில் மண்டபங்கள் இருக்குறமாதிரி தனித்தனிக் கட்டிடங்கள் இருக்கு.


பதிமூன்றாம் நூற்றாண்டில் மன்னன் மாறவர்மன் காலத்துல கட்டப்பட்ட சிவன் கோயில் இது. பெரும்பாலும் பள்ளிப்படைக் கோயில்கள் கோபுரம் இல்லாம முன்பக்கம் மட்டும் சிலை வைக்கப்பட்டு சமணர் படுக்கை ஸ்டைல்ல மேங்கோப்பு அமைக்கப்பட்டிருக்கும். ( தற்கால சீலிங்ஸ் ரூஃப் மாதிரி ) 



இந்தக் கோயிலில் கோபுரம் கும்பக் கலசம் இல்லாம அமைக்கப்பட்டிருக்கு. அதுவும் கோயில் கடற்கரையிலேயே சுமார் பத்தடி தூரத்தில் இருக்கு. அப்பர், சுந்தரர் தேவாரம் பாடிய திருத்தலம்கிறாங்க. ஒரு வேளை கடல் கொண்டு அதன்பின் எஞ்சிய கோயிலோ என்னவோ


கடல் அலைகள் இசை பாடுவதுபோல் இருப்பதால் இந்த ஊருக்கே தரங்கம்பாடின்னு பேர் வந்திச்சாம் ! 

மூலவர் மாசிலாமணி நாதர், அம்பாள் அகிலாண்டேஸ்வரி 

மேலே விநாயகர், முருகன், நடுவில் ரிஷபாரூடருடன்.




வாயிற்காப்போனே என்ன ஒரு கம்பீரம். கரவுசெறிவு. மூலவரைப் பார்க்கக் கொடுத்து வைக்கலை.



நிறைய மசூதிகளும் சர்ச்சுகளுமே இருக்கும் ஊரில் இந்த ஒரே ஒரு சிவன் கோயில் மட்டும் இருக்குதுன்னு சொல்றாங்க. சுத்தி இருக்குற கும்பகோணம் சிதம்பரம் ஆகிய இடங்களில் ஏகப்பட்ட இந்துக் கோயில்கள் இருக்குது, ஆனா இங்கே குடியேறிய மக்களுக்கேற்ப மசூதிகள், சர்ச்சுகள் அமைந்திருக்கலாம். 

1 கருத்து:

  1. வெங்கட் நாகராஜ்7 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 8:07
    படங்கள் அழகு. தகவல்களுக்கு நன்றி. தரங்கம்பாடி செல்லும் ஆசையுண்டு.

    பதிலளிநீக்கு

    Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University7 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 10:13
    எங்களது கோயில் உலாவில் பார்க்கவேண்டிய கோயில்களின் பட்டியலில் இதுவும் உள்ளது. உங்கள் பதிவால் இன்றே பார்க்கும் வாய்ப்பு. நன்றி.

    பதிலளிநீக்கு

    திண்டுக்கல் தனபாலன்7 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 10:47
    அழகிய படங்கள்... அருமையான தகவல்கள்...

    பதிலளிநீக்கு

    Anuprem7 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 11:17
    அழகிய படங்களுடன்..ஒரு புதிய அறிமுகம்...தரங்கம்பாடி

    பதிலளிநீக்கு

    G.M Balasubramaniam7 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 4:03
    தரங்கம்பாடி போனதில்லை

    பதிலளிநீக்கு

    Ravi7 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 9:31
    During danish period the temple had extensive area and over a period of time slowly swallowed by the sea and what we see is the salvaged portions

    பதிலளிநீக்கு

    Unknown11 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 7:04
    நீங்கள் சந்தேகப்படும் சிலையானது 1600களில் பிற்பகுதியில் ஜெர்மனியில் இருந்து வந்த ப்ராட்டஸ்டண்ட் மத போதகரான சீகன்பால்க் என்பவரின் சிலை. அவர் வந்த கப்பல் புயலில் சிக்கி தரங்கம்பாடியில் ஒதுங்கியது. தரங்கம்பாடியை அடைந்த அவர் டேனிஷ் ஆட்சியாளர்களின் உதவியுடன் மத பிரச்சாரத்தில் ஈடுபட்டார், அப்பொழுது தமிழ் கற்று அதன் சுவையும் இலக்கண இலக்கிய செறிவையும் கண்டு, மீண்டும் ஜேர்மன் சென்று அங்கு தமிழ் எழுத்து அச்சுகளையும் ஆச்சு இயந்திரத்தையும் தரங்கம்பாடி கொண்டு வந்து பைபிளை அச்சேற்றினார். இந்திய மொழிகளில் முதலில் அச்சு கண்ட மொழி தமிழுக்கு உண்டு. நீங்கள் படம் பிடித்துள்ள மணிக்கூண்டு உள்ள ஆலயத்தில் அவருடைய விருப்பப்படி அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. தரங்கமபடிதான் பிரட்டஸ்டண்ட் மதத்தின் தலைமையிடமாக இன்று வரை உள்ளது. திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் தரங்கை வாசம் எனும் பலகையை காணலாம். அங்கிருந்தற்றதுதான் அதன் பிஷப் இயங்குகிறார்.

    பதிலளிநீக்கு

    Unknown11 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 7:13
    தற்பொழுது நீங்கள் கண்ட மாசிலாமணி நாதர் கோவிலானது சில ஆண்டுகளுக்கு முன்னர் புதுப்பிக்கப்பட்டு இன்னும் கும்பாபிசேகம் நடக்காமல் உள்ளது. பழைமை வாய்ந்த கோவிலின் முகப்பில் இருந்து சுமார் ஒரு மைல் தொலைவில் கடல் இருந்துள்ளது. காலப்போக்கில் கடல்சூழலில் கருவறை வரை வந்தது. சுனாமியின் பொழுது கடல் ஊருக்குள் ஒரு கிலோமீட்டருக்கு மேல் வந்தது ஆயினும் கருவறை மட்டும் எப்பொழுதும் எதுவும் ஆவதில்லை.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan5 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 8:02
    nandri Venkat sago

    nandri Jambu sir

    nandri DD sago

    nandri Anu

    kattayam oru murai poivangka Bala sir

    thagavalukku nandri Ravi

    thagavalkalukku nandri KK KK

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.