எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 30 ஜூலை, 2020

நகரச்சிவன் கோயில் சூரக்குடி.

 நகரச்சிவன் கோயில் சூரக்குடி.

காரைக்குடியில் இருந்து கானாடுகாத்தான் செல்லும் பைபாஸ் சாலையில் பத்து கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். ஐந்து நிலை ராஜகோபுரம் தென்புறமும் அமைந்திருக்க கிழக்குப் பக்கம் ரிஷபாரூடராகவும் நிலையில் காட்சி தருகிறார் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் - சிவபெருமான்.



பதினாறு கால் மண்டபம் அழகாக இருந்தாலும் அதன் முன் பக்கம் பக்கவாட்டில் எல்லாம் ஒரே மண் தரைதான். நடைபாதை போடவேண்டும். மழைக்காலம் என்றால் சேறு சகதி ஆகிவிடும். கோயில் புனருத்ராதாரணம் செய்யவேண்டிய கட்டம் என நினைக்கிறேன்.


 அந்தப் பதினாறு கால் மண்டபத்தில் தூண்களில் காட்சி அளிக்கும் ஊர்த்துவ தாண்டவரும், காளியும் மிக அழகு.
நிமிர்ந்தால் உச்சியில் மட்டும் வண்ணம் கரையாமல் பன்னிரண்டு ராசிகளும் ஈசனின் திருமுன் விதானத்தில் அடக்கமாகி இருக்கின்றார்கள்.
  மீனாட்சி சந்நிதி.
இவ்வூரில் சூரை மரங்கள் அதிகம் இருந்ததால் இது சுரைக்குடி என வழங்கப்படுகிறது.
நாங்கள் சென்றபோது அர்ச்சகர் பள்ளத்தூரில் இருந்து வருவார் என்றார்கள். வைராகியும் இன்னும் சிலரும் இருந்தார்கள்.
இங்கே தெற்கு வாயிலை முனீஸ்வரர் காக்கிறார். அவருக்கான ஆயுதங்கள் வாயில் பக்கம் வைத்து ஆராதிக்கப்படுகின்றன.
கோஷ்ட தெய்வங்கள் பெருமாளும் ஸ்ரீதேவியும் பூதேவியும்  தனியே இருக்கிறார்கள். தொலைவில் சில சந்நிதிகள்  இடிந்து கிடக்கின்றன. அங்கே இருந்தவர்கள்தானோ என்னவோ இவர்கள்.
லிங்ககோத்பவர்.
வடக்குப் பக்கம் வெளியே இன்னொரு நந்தி. 
இங்கே இன்னொரு சிவன் அம்பாள் இருக்கின்றார்கள். புராதனக் கோயிலோ என்னவோ. அநேகக் கோயில்களில் வடக்கு வாயிலே இல்லை.

வெளிப்பிரகாரத்தில் மண்டிக்கிடந்த செடி கொடி குத்துப் புதர்களை பார்த்ததும் பாம்பெல்லாம் இருக்குமோ என்று சிறிது அச்சமாகவே இருந்தது.

பள்ளியறை என நினைக்கிறேன். 
இங்கே உள்ள பைரவர் ரொம்ப பிரசித்தம். தனிச்சந்நிதியில் இரு பைரவர்கள் இருக்கிறார்கள்.
நவக்கிரக சந்நிதியில் சனிபகவானுக்கு தனிச்சந்நிதியும் உண்டு.
மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலைத் தரிசனம் செய்து வந்தோம். இங்கே உள்ள நகரத்தார் சிவன் ( ஆவுடைய நாயகி, தேசிக நாதர். ) கோயிலைப்பற்றி இன்னொரு இடுகையில் எழுதுவேன்.

1 கருத்து:

  1. Thulasidharan V Thillaiakathu20 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 4:48
    படங்கள் அழகாக இருக்கின்றன. கோயில் பற்றிய தகவல்களுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு

    G.M Balasubramaniam22 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 3:28
    இது நகரத்தாரின் ஒன்பது கோவில்களில் ஒன்றா நினைவு சரியில்லை நேராக்க எழுதி வைத்திருந்ததை நாட வேண்டும்

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan28 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 7:32
    nandri Geeths.

    Balasir nanum recheck seyyanum. ithu athey ooril irukkum nagara sivan koila illa nagarathar koil aannu therila.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.