எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 22 ஜூலை, 2020

இலுப்பைக்குடி தான்தோன்றீசுவரர் , சவுந்தரநாயகியம்மன் திருக்கோயில் :-

இலுப்பைக்குடி தான்தோன்றீசுவரர் , சவுந்தரநாயகியம்மன் திருக்கோயில் :-

மாத்தூரில் இருந்து ஒரு கிமீ தொலைவிலும் காரைக்குடியில் இருந்து ஐந்து கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது இலுப்பைக்குடி தான்தோன்றீசுவரர் கோயில். கிபி ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் இது.
ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம். மூன்று சுற்றுப் பிரகாரங்கள். வெளியே ஒரு கோபுரம், உள்ளே ஒரு கோபுரம்.
கொங்கணச்சித்தர் ஈசனை வழிபட்டு இங்கே இருந்த பைரவர்  உதவியால் ஐநூறு மாற்றுத் தங்கத்தில் இருந்து ஆயிரம் மாற்றுப் பொன்  தயாரித்தபோது அது பூமியில் ஜோதி ரூபமாக அழுந்தி பொன்னிற லிங்க வடிவில் காட்சி அளித்தது. பிரகாசமாக இறைவன் இவ்வுருவில் சுயம்புவாகத் தோன்றியதால் இவ்வூர் இறைவனுக்குத் தான்தோன்றிறீசுவரர் என்றும் சுயம்பிரகாசேசுவரர் என்றும்  பெயர்.


இறைவி சவுந்தர்யநாயகி . ஸ்தல விருட்சம் இலுப்பை மரம். இந்தப் பகுதி இலுப்பைக்காடாக இருந்ததால் இலுப்பைக்குடி என இவ்வூர் வழங்கப்படுகிறது. இந்த இலுப்பை மரங்களின் மத்தியில் இருந்து ஈசன் காட்சி அளித்த ஸ்தலம் இது.
மக்கள் தூண்களில் விபூதியைக் கொட்டி விளக்கேற்றியபின் கையிலிருக்கும் எண்ணெயைத் தடவி வைத்திருக்கிறார்கள்.
சிவன் சந்நிதியின் முன்பு  இரட்டை நந்தியம்பெருமான்கள் காட்சி அளிக்கிறார்கள்.
தீர்த்தம் பைரவ/பிரம்ம தீர்த்தம்.

விநாயகர்
.துர்க்கைச்சித்தர் இயற்றிய சவுந்தர்யநாயகி மாலை "பொங்கிடும் அழகி பொன்னகை எழிலி " & "இன்பத்தின் தேனே".

இங்கே இருக்கும் சொர்ணாகர்ஷண பைரவர் வெகு சிறப்பு.
தூண்களில் முப்பக்கமும் சிம்மங்கள்  கர்ச்சிக்கின்றன.இக்கோவிலின் கொடுங்கைகள் சிறப்பு.

சநீஸ்வரருக்குத்  தனி சந்நிதி 

பிரகாரத்தில் ஓரிடத்தில் லிங்கமும் நாங்களும் காட்சி அளிக்கின்றார்கள். இவர்கள் மேல் மஞ்சள் காட்டப்பட்டுள்ளது.
ஐப்பசி அன்னாபிஷேகம், சித்திரைத் திருவிழா விசேஷம்

பிரகாரத்தில் இந்தக்  கல்யானைகள் கிளம்பி வருவது அழகாக இருந்தது.
ஆமா இது என்ன. ?

நகரத்தார்களில் இலுப்பைக்குடிக் கோயிலைச்சார்ந்தவர்கள் இங்கு அதிகம் வருவார்கள்.  (இலுப்பைக்குடிக் கோயில். கேரள சிங்கவள நாடாகிய பிரம்பூர் நாட்டில் இலுப்பைக்குடியான புகலிடம் கொடுத்த பட்டினத்தில் சூடாமணிபுரமுடையார்.) மற்றவர்களும் வழிபாடு செய்ய வருவார்கள்.


 தேர்க்கொட்டகை

புத்திர தோஷம் கிரகதோஷம் நீக்கும் ஸ்தலம் இது.  திருமணத்தடை நீக்க வாராஹிக்கு சந்தனக்காப்பு பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு, புஷ்காரணியின் நீராடி இக்கோயில் தூணில் கட்டியுள்ள நாய்க்கடி பலகையை சுற்றி வந்து வணங்க நாய்க்கடி விஷம் நீங்குதல் ஆகியன சிறப்பு.
டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. மாத்தூர் ஐந்நூற்றீசுவரர்  பெரியநாயகியம்மன் திருக்கோயில்

2. இலுப்பைக்குடி தான்தோன்றீசுவரர் சவுந்தரநாயகியம்மன் திருக்கோயில் :- 

3. வேலங்குடி கண்டீஸ்வரர், காமாட்சியம்மன் திருக்கோயில் 

4. இளையாற்றங்குடிக்கோவிலில் அபூர்வ ஓவியங்கள்:- .நர்த்தன நடராஜரும், கங்காதரரும். 

5. சூரக்குடி தேசிகநாதர் ஆவுடைநாயகியம்மன் திருக்கோயில்.

6. இளையாற்றங்குடி கைலாசநாதர் நித்யகல்யாணியம்மன் திருக்கோயில்

7. இரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவியம்மன் திருக்கோயில்.

8. நேமம் ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் சௌந்தரநாயகியம்மன் திருக்கோயில்.

9. வைரவன்பட்டி வளரொளிநாதர் வடிவுடையம்மன் திருக்கோயில்.

10. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், மருதீசர், வாடாமலர் மங்கையம்மன் திருக்கோயில்.

1 கருத்து:

  1. G.M Balasubramaniam15 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 3:41
    ஒரு முறைதான் நகரத்தாரின் ஒன்பது கோவில்களுக்கும் சென்று வந்தோம் என்றாலும் உங்கள் பதிவுகள் அவற்றை அசைபோட வைக்கின்றன

    பதிலளிநீக்கு

    Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University16 செப்டம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 8:25
    அருமையான கோயில் உலா இப்பதிவு மூலமாக. நன்றி.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan28 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 7:22
    nandri Bala sir

    nandri Jambu sir.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

நவராத்திரிக் கோலங்கள்

  நவராத்திரிக் கோலங்கள்