அஃகன்னா அமைப்பில் தமிழ்த்தாய் திருக்கோயில்.
திராவிடக் கட்டிடக் கலையின் உயர்ந்த எடுத்துக்காட்டாய் காரைக்குடியில் அமைந்துள்ளது தமிழ்த்தாய் திருக்கோயில்.
உலகிலேயே தமிழ்த்தாய்க்குக் கோயில் கட்டப்பட்டுள்ள ஒரே இடம் காரைக்குடி மட்டும்தான். அஃகன்னா வடிவில் கேடயத்தின் எஃகைப்போல கம்பன், வள்ளுவன், இளங்கோ என்கின்ற முப்பெரும் புள்ளிகள் சூழ, தமிழ்த்தாய் வரித்தாய், ஒலித்தாய் என்னும் வாட்களுக்கு மத்தியில் வீரத்தாயாய்க் குடிகொண்டிருக்கிறாள்.
இக்கோவில் காரைக்குடி கம்பன் கற்பகம் பள்ளியின் உள்ளே கம்பன் கழகத்தாரின் ( கம்பன் அடிசூடி திரு பழ பழனியப்பன் அவர்களின் ) பெருமுயற்சியால் கட்டப்பட்டது. இதற்கு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தவர் கலைஞர் டாக்டர் மு கருணாநிதி அவர்கள். இது முழுமையாய்க் கட்டிமுடிக்கப்பட்டபின் இதைத் திறந்து வைத்தவரும் அவரே.
தஞ்சைப் பெருவுடையார் கோவில் அமைப்பில் இருக்கிறது தமிழ்த்தாயின் கருவறைக் கோபுரம். அன்றலர்ந்த தாமரைபோல் மலர்ந்தும் இருக்கிறது.
கம்பன் மணிமண்டபத்தின் பக்கவாட்டில் அமைந்துள்ளது இக்கோவில்.