எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஆவுடைநாயகியம்மன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆவுடைநாயகியம்மன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 10 செப்டம்பர், 2020

சூரக்குடி தேசிகநாதர் ஆவுடைநாயகியம்மன் திருக்கோயில்.

சூரக்குடி தேசிகநாதர் ஆவுடைநாயகியம்மன் திருக்கோயில்.

காரைக்குடியில் இருந்து கழனிவாசல் வழியாக கானாடுகாத்தான் செல்லும் ஹைவேஸ் சாலையில் இடதுபுறம் அமைந்துள்ளது இக்கோயில். காரைக்குடியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும். பூவாண்டிப்பட்டி என்னும் இடத்தில் அமைந்துள்ளது. கோவில் வாசலுக்கு முன்பே உள்ள  16 கால்  மண்டபம் இங்கே வித்யாசமான ஒன்று.

கிழக்கு பார்த்த ஐந்து நிலைக் கோபுரம். ஒரு நாள் மாலையில் சென்றபோது கோயில் திறந்திருக்காததால் ( இது மட்டும் ஒன்பது நகரத்தார் கோயில் உலாவின்போது தப்பித்துவிட்டது. இதற்குப் பதிலாக நகரச் சிவன் கோயிலுக்குச் சென்று தரிசித்திருந்தோம் ). இன்னொருநாள் காலையில் சென்று தரிசித்தோம்.

ஆரவாரமில்லாத அமைதியான கோயில்கள் அனைத்துமே. ஆறுகாலபூஜையும் நித்யப்படி கட்டளைகளும் குறைவில்லாமல் நடந்துவருகின்றன.
சூரை மரங்கள் நிறைந்திருந்த ஊராதலால் இது சூரைக்குடி என வழங்கப்பட்டிருக்கிறது.

யூ ட்யூபில் 3621 - 3630 வீடியோக்கள். பிறனில் விழையாமை. தினம் ஒரு திருக்குறள்.

யூ ட்யூபில் 3621 - 3630 வீடியோக்கள். பிறனில் விழையாமை. தினம் ஒரு திருக்குறள். 3621.தினம் ஒரு திருக்குறள் - 141 l திருவள்ளுவர் l  தேனம்மைலெக்...