ஓங்காரச் சுனையில் மிருதங்க ஒலி.
களத்திர தோஷமும், புத்திர தோஷமும், காலசர்ப்பதோஷமும் இருந்தாலும்,
ஏழிலும் எட்டிலும் ராகுவோ கேதுவோ அமர்ந்திருந்தாலும்,
ஒன்பது கிரகங்களும் லக்னத்திலிருந்து ( ராகுவிலிருந்து கேதுவரை ) தலையும் வாலுமாய்ப் பக்கம் பக்கம் அமர்ந்திருந்தாலும் ( காலசர்ப்ப தோஷம் )
இம்மாதிரித் தகராறு செய்யும் களத்திரன் ராகுவையும், ஞானகாரகன் கேதுவையும் கார்வார் செய்யணும்னா புகார் செய்யவேண்டிய கடவுள் பேரையூர் நாகநாத சுவாமிதான்.!
இக்கோயில் 1878 இல் ஆவணிமாதம் திங்கட்கிழமை திருவோண நட்சத்திரத்தில் இராமச்சந்திர மகாராஜா அவர்கள் உத்தரவுப்படி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அதன்பின் 99 ஆண்டுகள் கழித்து 1977 இல் மகராஜன் என்பவராலும், 1989 இல் அய்யாக்கண்ணு என்பவராலும் திருக்குடமுழுக்குப் பெருஞ்சாந்திவிழா நடைபெற்றிருக்கிறது.
காரைக்குடியிலிருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் நமுணசமுத்திரம் தாண்டி அமைந்துள்ளது பேரையூர் அருள்மிகு நாகநாத சுவாமி ஆலயம் . 42 கிமீ தூரம். இக்கோயிலைப் பார்த்தவுடன் எங்கெங்கும் நாகம் கண்டு ஒரே மிரட்சியாகிவிட்டது. தரையில், மதிலில், கோபுரவாசலில், நந்தவனத்தில் எங்கெங்கும் நாகர்கள்.
ஒவ்வொரு ஞாயிறும் மாலை நாலரையிலிருந்து ஆறு மணிக்குள் ராகுகாலத்தில் அங்கே இருக்கும் நாகர் சிலைக்கும் நாகராஜனுக்கும் பால் அபிஷேகம் செய்து நெய்விளக்கு ஏற்றுகின்றார்கள். அழகழகான இளையவர்கள் கூட்டம் அதிகம். பார்த்ததும் அவர்கள் அழகுக்கு இன்னும் ஏன் திருமணமாகவில்லை என்று ஆச்சர்யம் ஏற்பட்டது. எவ்வளவு கூட்டம் இருந்தாலும் அர்ச்சகர்கள் ஆறு மணிக்குள் பாலாபிஷேகம் செய்து முடித்து விடுகிறார்கள்.