எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கார்த்திகை வேல் பூசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கார்த்திகை வேல் பூசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 21 ஜனவரி, 2021

வெள்ளி மயிலில் வேல் முருகன்.

வெள்ளி மயிலில் வேல் முருகன்.

கார்த்திகை பூசையின்போது வெள்ளி மயிலில் வேல்முருகன் எழுந்தருளுவார். கார்த்திகை சோம வாரங்களில் நடைபெறும் பூசையின்போது தண்டாயுதத்துக்கும் வேலுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அதன்பின் வெள்ளிமயிலில் வேல்முருகனை வைத்து அலங்கரிப்பார்கள். இருபக்கமும் மயில்தோகையும் தண்டாயுதமும் வேலும் வைக்கப்படும். இரு குத்துவிளக்குகளும் ஏற்றி வைக்கப்படும். காலையிலிருந்து சாமிக்குப் படையல் தீப தூபம் ஆகும்வரை ஒருவர் மாற்றி ஒருவர் முருகன் பாமாலைகள் பாட மற்றவர்களும் பின் தொடர்வார்கள். வீடே முருகன் அருளால் விபூதியோடு மணக்கும்.

முதலில் விநாயகப்பானையில் பொங்கலிடுவார்கள். இது இரட்டைப் பானையாகப் பொங்கப்படும். அதன்பின் பூசைச்சாப்பாடு ஏழெட்டுக் காய்கறி வகைகளுடன் தயாராகும். பருப்பு மசியல், கத்திரி முருங்கை அவரைகாய் சாம்பார், முட்டைக்கோஸ் துவட்டல், சௌ சௌ கூட்டு, பரங்கிக்காய் புளிக்கறி, வாழைக்காய் பொடிமாஸ், கருணைக்கிழங்கு மசியல், வெண்டைக்காய் மொச்சை மண்டி, ரசம், பலாக்காய் பிரட்டல், மோர், பாயாசம், வடை, அப்பளம் ஆகியன இடம்பெறும்.

சாதத்தை வடித்துப் பெரிய ஓலைப்பாயில் கொட்டி வைப்பார்கள். விநாயகப்பானைக்கும், சாதம், பொரியல், கூட்டு குழம்பு வகையறாவுக்கும் தூப தீபம் பார்த்தபின் முருகனுக்கு எதிரில் படையல் இடப்படும். பண்டாரம் வந்து சங்கு ஊதி தீபம் காட்ட அனைவரும் வணங்குவார்கள். பெண்கள் மாவிளக்கு வைப்பார்கள். ( அது அடுத்த இடுகையில்) . அதன் பின் ஊரோடு அனைவரும் உணவருந்திச் செல்வார்கள்.

மாலையில் பான(க்)க பூசை நடைபெறும். பூசைக்குழம்பை ( மிஞ்சிய அனைத்தையும் ஒன்றாக்கிச் சுடவைத்து ) புள்ளிக்கணக்குக்கு ஏற்பக் கொடுப்பார்கள்.

விடையேறுபாகன்.
வள்ளி தெய்வானை சமேத மயில்வாகனன்.

செவ்வாய், 2 ஏப்ரல், 2019

பூசைச் சாப்பாடு.

பூசைச் சாப்பாடு.

கார்த்திகை மாத பூசையின்போது மதிய உணவு வெகு சிறப்பாக இருக்கும். இறைவனுக்குப் படைத்தது என்பதால் அதன் சுவையே அலாதி. வாங்க ஆவுடையான் செட்டியார் வீட்டில் நடந்த பூசையில் கலந்து கொண்டு பூசைச் சோறு உண்டு வருவோம்.


முருகனே பழனியில் ஆண்டிப் பண்டாரமாய் நின்றவன் என்பதால் பண்டாரம் வந்துதான் பூசை செய்து முதல் இலையில் அமர்ந்து உண்பார்.அதன்பின்னரே வீட்டாரும் ஊராரும் உண்பார்கள்.

திங்கள், 1 ஏப்ரல், 2019

கார்த்திகை பூசையும் மாவிளக்கும்.

கார்த்திகை பூசையும் மாவிளக்கும்.

கார்த்திகை பூசையன்று முருகனுக்கு மாவிளக்கு வைப்பது காரைக்குடி மக்களின் பழக்கம். மாவிளக்கு மகாத்மியத்தைச் சொல்ல ஆரம்பித்தால் நீண்டுகொண்டே போகும்.

மகர்நோன்பு, திருவிழா காலங்களில், கார்த்திகை சோம வாரங்களில் , அம்மன் கோவில்களில்,  சாமி எழுந்தருளப் பண்ணும்போது,  மாவிளக்கு வைப்பது இங்கே வழக்கம். இதற்கெனவே எல்லார் வீட்டிலும் மாவிளக்குச் சட்டி என்றொரு பாத்திரம் இருக்கும். மாலையில் மாவிளக்கு வைத்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் திரியும் நெய்யும் பட்டு முருகிய அந்த மாவிளக்குத் துண்டைத் தேங்காய்ச் சில்லோடு உண்ணப் போட்டி நடக்கும்.



யூ ட்யூபில் 2151 - 2160 வீடியோக்கள். கம்பர் விழாக்கள் & நூல்கள்.

யூ ட்யூபில் 2151 - 2160 வீடியோக்கள். கம்பர் விழாக்கள் & நூல்கள். 2151.காரைக்குடி கம்பர்விழா l  படத்திறப்பும் புத்தக வெளியீடுகளும் l  தேன...