எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மண்டகப்படி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மண்டகப்படி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 20 மார்ச், 2019

மகர்நோன்பும் மண்டகப்படியும் வாழைப்பழ மாலையும்.

மகர்நோன்பும் மண்டகப்படியும் வாழைப்பழ மாலையும்.

நெல்லிமரத்துப் பிள்ளையார் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்த 48 நாட்களுக்குள் ( ஒரு மண்டலத்துக்குள்  - மண்டகப்படிக்குக்  ) அபிஷேக ஆராதனைக்குக் கொடுத்திருந்தோம். அப்போது நவராத்திரி சமயமாதலால் கோயிலில் கொலு வைக்கப் பட்டிருந்தது. நவராத்திரியை இங்கே மகர்நோன்பு என்பார்கள்.

காரைக்குடியில் மகர்நோன்பு சிறப்பு. அதிலும் 4 சாமிகள் ஒரு சேர மகர்நோன்புப் பொட்டலில் அம்புபோடும் திருவிழா நடக்கும். ( திருநிலை அம்மன், சிவன், கொப்புடையம்மன், பெருமாள் ) ஆகிய தெய்வங்கள் குதிரை வாகனங்களில் எழுந்தருளி இருக்கும்போது மக்கள் இந்த நான்கு கோயில்களுக்கும் பகலில்  போய் மாவிளக்குப் போடுவார்கள்.

அதன் பின் மாலையில் சுவாமிகள் உலா வந்து மகர்நோன்புப் பொட்டலில் அம்பு போடுவார்கள். சுவாமி போட்ட இந்த அம்பு கிடைத்தால் விசேஷம் என்று கூட்டம் அள்ளும். சிறுகுழந்தைகளும் அன்று எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு பெற்றோருடன் வந்து ( அறுபத்துமூவர் மடம் அருகில் ) கட்டப்பட்டிருக்கும் வாழை மரத்தில் அம்பால் குத்துவார்கள். இதற்குக் கிலுக்கி எடுத்தல் என்று பெயர். ஆண்குழந்தைகள் பிறந்த முதல் வருடத்தில் அம்பு போடுவது ( கிலுக்கி எடுத்தல்) மிக விசேஷம். எல்லா ஊர்களிலும் இருக்கும் காரைக்குடிக்காரர்கள் இந்த சமயம் காரைக்குடியில்தான் இருப்பார்கள்.

இந்த சமயம் அநேகமாக எல்லாக் கோயில்களிலும் கொலு வைக்கப்பட்டிருக்கும்.
தசாவதாரம் அருமை என்றால் அஷ்ட லட்சுமிகளும் கொள்ளை அழகு.

யூ ட்யூபில் 3991 - 4000 வீடியோக்கள். அருளுடைமை. தினம் ஒரு திருக்குறள்.

யூ ட்யூபில் 3991 - 4000 வீடியோக்கள். அருளுடைமை. தினம் ஒரு திருக்குறள். 3991.தினம் ஒரு திருக்குறள் - 241 l திருவள்ளுவர் l  அருளுடைமை  l    தே...