எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 29 ஜனவரி, 2021

ஈஷா யோகாவும், லிங்க பைரவி பூஜையும்

 ஈஷா யோகாவும், லிங்க பைரவி பூஜையும்

வெள்ளியங்கிரி மலைச்சாரலின் அடிவாரத்தில்  இருக்கும் ஈஷா யோகப் பயிற்சி மையத்துக்குச் சென்றதுண்டு. யோகா கற்றுக் கொள்ளவில்லை. அங்கே இருக்கும் தியானலிங்கத்தைத் தரிசிக்கத்தான்.

வியாழன், 28 ஜனவரி, 2021

கல்லுக்குழி ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர்.

கல்லுக்குழி ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர்.

 ஸ்ரீ ராம தூத மஹாதீர ருத்ரவீர்ய சமப்ரப
அஞ்சனா கர்ப்ப சம்பூதம் வாயு புத்ர நமோஸ்துதே !

திருச்சி கல்லுக்குழியில் இருக்கும் ஆஞ்சநேயரைத் தரிசித்ததில்லையா. வாழ்வில் ஒருமுறையேனும் தரிசித்து இன்புற வேண்டியவர் இந்த ஆஞ்சநேயர். சுந்தரமாகக் காட்சி தரும் மூலவரையும் உற்சவரையும் ஒரு சனிக்கிழமை மாலை தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டியது. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என சுந்தரரின் காட்சி இன்பத்தைப் பகிர்ந்துள்ளேன். 


புதன், 27 ஜனவரி, 2021

மந்திராலயம் - 2.

 மந்திராலயம் - 2.

ஸ்ரீ ராகவேந்திரரின் பிருந்தாவனத்தில் வெளித்தாழ்வாரத்தில் காத்துக் கிடக்கிறோம். அவரை தரிசித்ததைப் பற்றிக் கூறுகிறேன். 



சமஸ்கிருதம், வேதம், வீணை வாசிப்பு ஆகியவற்றில் புலமைபெற்றவர் ராகவேந்திர மகான்.

திங்கள், 25 ஜனவரி, 2021

மந்திராலயம்.

மந்திராலயம்.

ஹைதையில் இருக்கும்போது ( 2014 ) மந்திராலயம் செல்வதென முடிவாயிற்று. இதற்கு முன்பே ஒருமுறை சென்றிருக்கிறோம். 1992 இல் . கர்நாடக ஆந்திரா எல்லையில் இருக்கும் மந்திராலயம் எங்கள் மனங்கவர்ந்த ஊர். 

சிதம்பரத்தில் இருக்கும்போதே வாராவாரம் வியாழனன்று புவனகிரிக்குச் சென்று ( இராகவேந்திரர் திருவேங்கடநாதராகப் பிறந்தஸ்தலம் ).  வணங்கி வந்திருக்கிறோம் நானும் சங்கரி மாமியும். 


பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த இம்மகானின்மேல் அபரிமித பக்தி உண்டு. 

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

குவாலியர் சூரியனார் ரதக்கோவில்.

குவாலியர் சூரியனார் ரதக்கோவில்.

குவாலியர் சூரியனார் கோவில் பற்றி முன்பே எழுதி இருக்கிறேன். 

குவாலியரில் மொரார் என்னுமிடத்தில் இது அமைந்திருக்கிறது. சூரியனுக்காகவே அமைக்கப்பட்ட கோவில்களில் இது முக்கியமானது. பிர்லா மந்திர் எல்லாம் பெருமாளுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்க இதுவோ சூரியனுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. வெகு தேஜஸான கோயிலை ஒருமுறை வலம் வருவோம் வாங்க. சுத்தி தோட்டம் வேறு அழகூட்டுகிறது. கூடவே மயிலும் புறாக்களும். 



கம்பீரமா நிற்கும் இந்தக் கோவிலில் முன் கூடம் ஒன்றும் கருவறை ஒன்றும் உள்ளது. கிழக்குப் பார்த்து அமைந்துள்ளது கோவில். 

வியாழன், 21 ஜனவரி, 2021

வெள்ளி மயிலில் வேல் முருகன்.

வெள்ளி மயிலில் வேல் முருகன்.

கார்த்திகை பூசையின்போது வெள்ளி மயிலில் வேல்முருகன் எழுந்தருளுவார். கார்த்திகை சோம வாரங்களில் நடைபெறும் பூசையின்போது தண்டாயுதத்துக்கும் வேலுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அதன்பின் வெள்ளிமயிலில் வேல்முருகனை வைத்து அலங்கரிப்பார்கள். இருபக்கமும் மயில்தோகையும் தண்டாயுதமும் வேலும் வைக்கப்படும். இரு குத்துவிளக்குகளும் ஏற்றி வைக்கப்படும். காலையிலிருந்து சாமிக்குப் படையல் தீப தூபம் ஆகும்வரை ஒருவர் மாற்றி ஒருவர் முருகன் பாமாலைகள் பாட மற்றவர்களும் பின் தொடர்வார்கள். வீடே முருகன் அருளால் விபூதியோடு மணக்கும்.

முதலில் விநாயகப்பானையில் பொங்கலிடுவார்கள். இது இரட்டைப் பானையாகப் பொங்கப்படும். அதன்பின் பூசைச்சாப்பாடு ஏழெட்டுக் காய்கறி வகைகளுடன் தயாராகும். பருப்பு மசியல், கத்திரி முருங்கை அவரைகாய் சாம்பார், முட்டைக்கோஸ் துவட்டல், சௌ சௌ கூட்டு, பரங்கிக்காய் புளிக்கறி, வாழைக்காய் பொடிமாஸ், கருணைக்கிழங்கு மசியல், வெண்டைக்காய் மொச்சை மண்டி, ரசம், பலாக்காய் பிரட்டல், மோர், பாயாசம், வடை, அப்பளம் ஆகியன இடம்பெறும்.

சாதத்தை வடித்துப் பெரிய ஓலைப்பாயில் கொட்டி வைப்பார்கள். விநாயகப்பானைக்கும், சாதம், பொரியல், கூட்டு குழம்பு வகையறாவுக்கும் தூப தீபம் பார்த்தபின் முருகனுக்கு எதிரில் படையல் இடப்படும். பண்டாரம் வந்து சங்கு ஊதி தீபம் காட்ட அனைவரும் வணங்குவார்கள். பெண்கள் மாவிளக்கு வைப்பார்கள். ( அது அடுத்த இடுகையில்) . அதன் பின் ஊரோடு அனைவரும் உணவருந்திச் செல்வார்கள்.

மாலையில் பான(க்)க பூசை நடைபெறும். பூசைக்குழம்பை ( மிஞ்சிய அனைத்தையும் ஒன்றாக்கிச் சுடவைத்து ) புள்ளிக்கணக்குக்கு ஏற்பக் கொடுப்பார்கள்.

விடையேறுபாகன்.
வள்ளி தெய்வானை சமேத மயில்வாகனன்.

புதன், 20 ஜனவரி, 2021

பலவான்குடி நகரச் சிவன்கோவிலில் தெய்வீகச் சிற்பங்கள்.

பலவான்குடி நகரச் சிவன்கோவிலில் தெய்வீகச் சிற்பங்கள்.

பலவான்குடி நகரச் சிவன்கோவில் 150 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்த வருடம் ஒன்பதாவது முறையாகக் கும்பாபிஷேகம் நடைபெற்றது.பலவான்குடிப் பெருமக்கள் ஊரோடு உணவிட்டு மகிழ்ந்தனர். கும்பாபிஷேகத்திலும் பல்வேறு சிறப்புகள்.

ஐந்து நிலை ராஜகோபுரம் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. மீனாக்ஷி சுந்தரேசுவரர் சந்நிதி எதிரே அனைத்துத் தெய்வீகச் சிற்பங்களும் சுதைச் சிற்பங்களாய் இடம்பெற்றுள்ளது சிறப்பு.

நால்வருடன் காரைக்காலம்மையாரும் பட்டினத்தாரும் கூட இடம்பெற்றிருக்கிறார்கள். பள்ளி கொண்ட பெருமாளும் சிவன் சந்நிதியின் முன்புறம் வலப்பக்கமாக எழுந்தருளி இருக்கிறார்.


முந்தி முந்தி விநாயகன் முன்னிருந்து வரவேற்கிறான். சிதம்பரத்தின் ஆடலரசரன் ஓவியமாக ஊழிக் கூத்தில்.

செவ்வாய், 19 ஜனவரி, 2021

முருகன் பூசையும் மழலைகளின் குறும்பும்.

முருகன் பூசையும் மழலைகளின் குறும்பும்.

முருகன் பூசையும் மழலைகளின் குறும்பும்.

காரைக்குடியில் கார்த்திகை மாத முதல் சோமவாரத்தில் ( திங்கட்கிழமை ) தண்டாயுதபாணி பூசை நடைபெறும். முருகனின் தண்டத்துக்கும் வேலுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று விநாயகபானையில் பொங்கலிட்டு அதன்பின் மாபெரும் அளவில் பூசைச் சாப்பாடு செய்யப்பட்டு ஊரோடு உணவிடும் நிகழ்வு நடக்கும். 

நடுவில் முருகன் பாடல்கள், பாமாலைகள் அனைத்தும் பாடப்படும். அதோடு வெள்ளி மயில் வாகனத்தின் பக்கமிருக்கும் வேலுக்கும் தண்டாயுதத்துக்கும் ( முருகன் சமேதமாக ) மாவிளக்கு வைத்துப் பூசை செய்யப்பட்டுப் படையல் இடுவார்கள். 

அந்த நிகழ்வுக்கு வந்திருந்த குட்டிப் பிள்ளைகளின் குறும்பையும் அதோடு பெரியவர்களின் பொங்கலிடுதலையும் படம்பிடித்தேன். அவை உங்கள் பார்வைக்கு.


பூப்போலப் பூப்போலச் சிரிக்கும் :)

திங்கள், 18 ஜனவரி, 2021

யாகசாலை - பலவான்குடி சிவன் கோவில்.

யாகசாலை - பலவான்குடி சிவன் கோவில்.


மார்ச் நான்காம் தேதியன்று பலவான்குடி நகரச் சிவன்கோவில் கும்பாபிஷேகத்துக்கான ஐந்தாம் கால யாகசாலையில் கலந்து கொள்ளும் பேறு கிட்டியது. 150 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோவில் இது.புதிதாக ஐந்துநிலை ராஜகோபுரம் கட்டப்பட்டுக் ( ஒன்பதாவது ) கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஊரை அடைத்துப் பந்தல் போட்டு விருந்தும் விசேஷமும் அமர்க்களப்பட்டது. 

இரட்டையானைகள் உலா வந்தன.இரட்டைக் குதிரைகள் நாட்டியமிட்டன. கேரள செண்டை மேளத்தின் அதிரடிச் சத்தம். சிவாச்சாரியார்கள் உரையாற்றினார்கள். அதன் பின் ஹோம திரவியங்கள் சமர்ப்பிக்கப்பட்டுப் பூரணாகுதி. ட்ரோன் வைத்து வீடியோவும் புகைப்படமும் எடுத்துத் தள்ளிக்கொண்டிருந்தார்கள்.

ஒவ்வொரு தெய்வத்துக்கும் விதம் விதமான யந்திரங்கள் மந்திரங்கள் இருப்பதுபோல் விதம் விதமான ஷேப்பில் ஹோம குண்டங்கள் வண்ண வண்ணமான வடிவங்களில் கண்ணைக் கவர்ந்தன. ( அக்னிதான் எல்லா அவிர்பாகங்களையும் எல்லா தேவதைகளுக்கும் கொண்டு சேர்ப்பவர். பொதுவாக நன்கு உலர்ந்த சமித்துக்களையும் சாண உருண்டைகளையும் பயன்படுத்த வேண்டும். விதம் விதமான உருவங்களில் அந்தந்த ஹோம குண்டங்களில் தெய்வக் காட்சியைக் காணலாம். ஹோமம் செய்யும்போது கண் கலங்கி ஓடும் அளவு நெருப்பே இல்லாமல் புகை வரக் கூடாது. )

அந்த யாகசாலைக் காட்சிகள் உங்கள் பார்வைக்காக .



ஒவ்வொரு சாமிக்கும் தனித்தனி யாக சாலை. ஒவ்வொரு காவல் தெய்வமும் கூட.

ஞாயிறு, 17 ஜனவரி, 2021

இரணிக்கோவிலின் சிற்பக்கூட்டம்.

இரணிக்கோவிலின் சிற்பக்கூட்டம்.

இரணிக்கோவிலைப் பற்றிப் பல்வேறு தருணங்களிலும் எழுதியாயிற்று. 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில் இது. இங்கே இருக்கும் காளி, பெருமாள் கோவில், ஆட்கொண்ட நரசிம்மர், அஷ்டலெக்ஷ்மி மண்டபம், நவ துர்க்கைகள், தூண் சிற்பங்கள், குபேரர், விதான வண்ண ஓவியங்கள்  என.

இங்கே இருக்கும் பைரவருக்கு ஷண்பக சூர சஷ்டி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் மூன்று கல் தூண்கள் நிறுவப்பட்டு மழை நீர் சேகரிப்பும் அந்தக் காலத்திலேயே செய்யப்பட்டுள்ளது.

இன்னும் ராட்டையும் தேசியக் கொடியும் காந்தி அடிகளுமே விதானச் சிற்பமாக இருந்த அதிசயத்தையும் பார்த்தோம்.

இனி தூண்களிலும் பக்கச் சுவர்களிலும் இருக்கும் எழிலார்ந்த சிற்பத்தொகுதிகளைப் பார்ப்போம்.

கம்பீரமான ஐந்துநிலை ராஜகோபுரம் இக்கோவிலின் எழிலுக்கு முதல் சாட்சி. முன்னே இருப்பது அஷ்டலெக்ஷ்மி மண்டபம்.

கருவறையில் அபிஷேகம், அலங்காரம், ஆட்கொண்ட நாதருக்கு.

வியாழன், 14 ஜனவரி, 2021

யட்சிணிகளும் யட்சர்களும் சிம்மயாளியும்.

யட்சிணிகளும் யட்சர்களும் சிம்மயாளியும்.

தூண்களில் சிம்மங்களும் சிம்மயாளிகளும் அணிவகுக்கும் நகரத்தார் கோவில்களில் இரணியூரும் மாத்தூரும் முக்கியமானவை.

நேமமும் இரணியூரும் மாத்தூரும் சிற்ப அழகுக்காகவும் இறையருள் பெறவேண்டியும் தரிக்கத்தக்க ஸ்தலங்கள். வாருங்கள் இச்சிற்பங்களைக் கண்டு களித்து வருவோம். 

இந்த நிலைவாசல் சிற்பத்தில் கல்லிலே கலைவண்ணம் கண்ட அழகு அதிசயிக்க வைக்கிறது. மரச்சட்டத்தில் செதுக்குவதுபோல் கல்லிலே விதானம் வித்யாசம். 

தழைந்திருக்கும் தாமரை மொக்குகளும் கஜலெக்ஷ்மியும் சிம்மங்களும் ஆட்கொண்டநாதர் சந்நிதிக்குக் கட்டியம் கூறுகிறார்கள். 



மிருகங்கள்மேல் மனிதாபிமானத்தோடு அன்பு செலுத்துவதை இச்சிற்பங்கள் காட்சிப்படுத்துகின்றன.

புதன், 13 ஜனவரி, 2021

இரணிக்கோவில் நூற்றியெட்டு அம்மன்களும் குபேரனும்.

இரணிக்கோவில் நூற்றியெட்டு அம்மன்களும் குபேரனும்.


இரணிக்கோவில் பற்றிப் பல்வேறு இடுகைகளில் பகிர்ந்துள்ளேன்.ஆட்கொண்டநாதர், சிவபுரந்தேவியோடு நரசிம்மேஸ்வரரும் குடி கொண்ட கோவில் இது.

காரைக்குடி வள்ளலார் திருக்கோயில்.

காரைக்குடி வள்ளலார் திருக்கோயில்.

காரைக்குடியில் நாகநாதபுரம்  என்கின்ற நாவன்னா புதூரில் பெருமாள் கோவிலுக்கு எதிரில் ( துபாய் நகரத்தார் சங்கத்துக்கும் பக்கவாட்டில் )  புஷ்கரணியின் கிழக்குப் பக்கம் தேர்முட்டியின் அருகில் அமைந்துள்ளது வள்ளலார் திருக்கோயில்.

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி

என்று ஜோதியையே ஈசனாக வழிபட்ட வள்ளலார் கோயிலை நெய்வேலி அருகிலுள்ள வடலூரில் கண்டதுண்டு. தைப்பூசத்தன்று சென்று தரிசிக்க வாய்த்ததில்லை. ஆறு திரைகள் விலக்கி ஜோதியாய் இருக்கும் ஈசனைத் தீப தரிசனத்தில் தரிசிக்கலாம் என்றார்கள். நாம் ஆறு திரைக்குமுன் இருந்த தீபத்தையே ஈசனாக வணங்கி வந்தோம்.


காரைக்குடி செஞ்சை பெருமாள் கோவில் எதிரில் இருக்கும் இந்த வள்ளலார் ஆலயத்தைத் தரிசிக்கும்  வாய்ப்புக் கிட்டியது ஒருமுறை.

செவ்வாய், 12 ஜனவரி, 2021

ஊனையூர் முத்துவெள்ளைச் சாத்தையனார் கோவில்.

ஊனையூர் முத்துவெள்ளைச் சாத்தையனார் கோவில்.

ஊனையூர் கானாடுகாத்தானிலிருந்து திருமயம் செல்லும் வழியில் இருக்கிறது. இங்கே முத்து வெள்ளைச் சாத்தையனார் கோயில் கொண்டிருக்கிறார்.

திங்கள், 11 ஜனவரி, 2021

நவநதிகள் சங்கமித்த தீர்த்தக்குளம்.

நவநதிகள் சங்கமித்த தீர்த்தக்குளம்.

என்னது நவநதிகள் சங்கமித்த தீர்த்தக் குளமா.. இரண்டு நதிகளையே இணைக்க முடியலையாம் . இதுல ஒன்பது நதிகள் இணைப்பான்னு நீங்க முணுமுணுக்குறது கேக்குது. உண்மைதாங்க. இதை இணைச்சவர் சாதாரண ஆளில்லை.. ஆனானப்பட்ட சிவபெருமானே ஆக்கும். அதுனாலதான் அந்தச் சிறப்புப் பெற்ற தீர்த்தக்குளம் ”மகா”மகக் குளம்னு அழைக்கப்படுது.

கும்பகோணம் காசி விசுவநாதர் விசாலாட்சி கோவிலுக்கு எதிரில் அமைந்திருக்கு இந்த மகாமகக் குளம். குளத்துக்கு நாற்புறமும் படித்துறை இருக்கும். இங்கோ குளத்தின் எல்லாப் பக்கமும் மண்டபங்களும் படித்துறையுமா இருக்கு. குட்டியும் பெரிசுமா கிட்டத்தட்ட 20க்குமேலே மண்டபம் அல்லது கோவில்களும் அதன் பக்கங்களில் படித்துறையுமா இருக்கு. இந்தப் படிகளும் சும்மா கட்டுக்கோப்போட மூணு மூணாக் கட்டப்பட்டிருக்கு.

மாசி மாதம் மகம் நட்சத்திரத்தன்று இத்திருக்குளத்தில் நீராடினாலோ கும்பம் சொரிந்து கொண்டாலோ மிகுந்த விசேஷம். சிம்மராசிக்காரர்களுக்கு சிறப்புத்தரும் கோயிலும் குளமும் இது. மகா கும்ப மேளா போல் இங்கே மாசிமகம் சிறப்பு.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.