எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
முதலாம் படைவீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதலாம் படைவீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 13 பிப்ரவரி, 2020

அறுபடை முருகன் கோயில்கள். - திருப்பரங்குன்றம்.

அறுபடை முருகன் கோயில்கள். - திருப்பரங்குன்றம்.

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும். என்ற பாடலை உச்சஸ்தாயியில் ரசித்துப் பாடியதுண்டு. சகோதரன் குடும்பத்தாரோடு அறுபடை முருகன் கோயில்களுக்கும் சென்று தரிசனம் செய்யும் வாய்ப்புக் கிட்டியது. முருகன் அருள் என்றுதான் சொல்ல வேண்டும். முதலில் மதுரை. அங்கே இரு படை வீடுகள். முதலில் முதலாம் படை வீடு திருப்பரங்குன்றம். அடுத்தநாள் காலையில் ஆறாவது படை வீடு பழமுதிர் சோலை.

அது ஒரு ஆடி மாசம் என்றாலும் கோயில்களில் கூட்டம் அள்ளியது. மதியத்தில் காரைக்குடியில் இருந்து புறப்பட்டு முதலில் திருவாதவூர் சென்று மாணிக்க வாசகரின் திருக்கோயிலையும் அங்கே இருந்த மாபெரும் சிவன் கோயிலுக்குச் சென்று ( அருள்மிகு வேதநாயகி அம்பாள் சமேத திருமறைநாத சுவாமி ) சிவனையும் தரிசித்தோம். நரியைப் பரியாக்கிய கதை ஞாபகம் வந்தது. :)

யூ ட்யூபில் 4031 - 4040 வீடியோக்கள். புலால் மறுத்தல். தினம் ஒரு திருக்குறள்.

யூ ட்யூபில் 4031 - 4040 வீடியோக்கள். தினம் ஒரு திருக்குறள். 4031.தினம் ஒரு திருக்குறள் - 251 l திருவள்ளுவர் l  புலால் மறுத்தல்  l    தேனம்மை...