நவக்ரஹ கோயில் தரிசனம் :- திங்களூர் சந்தோஷ வாழ்வருளும் சந்திர பகவான்
திங்களூர் கும்பகோணத்தில் இருந்து 33 கிமீ தூரத்தில் உள்ளது. மூலவர் கைலாசநாதர். இறைவி பெரியநாயகி, நாவுக்கரசராலும் சுந்தரராலும் பாடல் பெற்ற தலம்.அப்பூதி அடிகளின் மகனைப் பாம்பு தீண்ட திருநாவுக்கரசர் இறைவனிடம் இறைஞ்சித் திருப்பதிகம் பாடி அவனை உயிர்ப்பித்த தலம்.
மிகச்சிறிய அழகான கோயில். இக்கோயில் கிழக்குமுகமாக பெரியநாயகி அம்மன் சந்நிதி அமைந்துள்ளது.. தெற்கு நோக்கிய சந்நிதியில் கைலாசநாதர் எழுந்தருளி உள்ளார். அவருக்கு எதிரில் எல்லாக் கோயில்களிலும் சந்திரன் சூரியன் இருக்கும் இடங்களில் அவர்கள் முறையே எழுந்திருக்கிறார்கள். கோஷ்ட தெய்வமாக சிவனுக்கு எதிரில் வாயிற்புறத்தில் இடப்புற சந்நிதியில் எழுந்திருக்கும் சந்திரனே இத்தலத்தில் சந்திர பகவானாக வணங்கப்படுகிறார்.