இரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவியம்மன் திருக்கோயில்
காந்தி மகானும் இராட்டையில் நூல் நூற்கும் பெண்மணிகளும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இரணிக் கோவிலில் சிற்பமாகவே வடிக்கப்பட்டுள்ளனர்.. அதுவும் விதானத்தில். மிகவும் கடினமான காரியம் விதானச் சிற்பமும், விதான ஓவியமும்தான்.
டெல்லியில் ஜண்டேவாலா மந்திர் என்று ஒரு தேவி கோவில் உண்டு. சுதந்திரப்போராட்ட காலத்தில் இக்கோவிலில் நம் தேசியக் கொடியை ஏற்றுவார்கள் என்று சொல்லக் கேள்வி. விநாயக சதுர்த்தி மும்பையில் தேசிய எழுச்சிக்குப் பயன்பட்டதுபோல் தென்னகக் கோவில்களும் தேசவிடுதலை உணர்வுகளை மதிப்பளித்துச் சிற்பங்கள் வெளியிட்டுள்ளன.
முன்பே இரணியூர் பற்றிப் பல பதிவுகள் எழுதி இருக்கிறேன். இது நகரத்தார் கோவில் உலா பகுதியில் இடம்பெற எழுதி உள்ளேன். இக்கோவில் நகரத்தார்களின் ஒன்பது கோவில்களில் ஒன்று.
நீலமேகப்பெருமாள், இரணிக் காளி ஆகியோருக்கு தனிக்கோவில் உண்டு. இக்கோவில் ஆட்கொண்ட நாதர் கோவில். இங்கே நாராயணன் நரசிம்மன் உருக்கொண்டு இரணியனை அழித்தபின் அடங்காத உக்கிரம் கொண்டு விளங்கியதால் அவரை ஆட்கொண்ட சிவனையும் சேர்த்து இரணியூர் ஆட்கொண்ட நாதராக வழிபடப்படுகிறார். ( அரியும் அரனும் ஒன்று. எனவே இங்கே சிவ விஷ்ணு சேர்த்தே வணங்கப்படுகிறார்கள் ). இரண்ய சம்ஹாரத்தையும் இரண்ய மல்யுத்தத்தையும் இன்னும் பல ஓவியங்களையும் சிற்பங்களையும் பின்னர் பகிர்கிறேன்.
அஷ்டலெக்ஷ்மிகள் வெளியே, நவ துர்க்கைகள் உள்ளே, வீரபத்திரர், 108 அம்மன் சிற்பங்கள், 108 பைரவ திரு மூர்த்தங்கள் ( பைரவ சந்நிதி கருவறை புறச்சுவர் சிற்பங்களாக ) வடிக்கப்பட்டுள்ளார்கள்.
மிகச் சிறப்பு வாய்ந்த இத்திருக்கோயிலை ஒரு முறையேனும் தரிசிக்க வாருங்கள், காரைக்குடியிலிருந்து 27 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கீழசீவல்பட்டி வழியாகச் செல்லலாம்