எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 3 பிப்ரவரி, 2024

திருநெல்லிக்காவல் நெல்லிவனநாதேசுவரர் மங்களநாயகி திருக்கோயில்

 திருநெல்லிக்காவல் நெல்லிவனநாதேசுவரர் மங்களநாயகி திருக்கோயில்

 திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் நெல்லிவனநாதேசுவரர் கோயிலுக்கு மன்னை சென்றிருந்தபோது சென்று வந்தோம். கிராமங்கள் தொடர இருபுறமும் வாய்க்கால்களும் வயல்களுமாக நடுவில் ஒற்றைப் பாதையில் மிகக் கவனமாகச் சென்று வந்தோம். 

மிக அழகான அருமையான கோவில். துவஜஸ்தம்பமும் எழுநிலை ராஜகோபுரமும் கம்பீரமாக வரவேற்கிறது. மேற்கு நோக்கிய கோவில் என்பதால் மாலை நேரத்தில் கோபுரத்தின் மேலும் சந்நிதி வரையிலும் சூரிய ஒளி பாய்ந்து அழகு ஊட்டியிருந்தது.எடுப்பான துவஜஸ்தம்பத்தின் கண்கவர் காட்சி.

தீபாவளி & கந்தசஷ்டிக் கோலங்கள்

 தீபாவளி & கந்தசஷ்டிக் கோலங்கள்