எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மை க்ளிக்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மை க்ளிக்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 21 டிசம்பர், 2020

இரணிக்கோயில் ஆக்ரோஷச் சிம்மங்களும் சிம்ம யாளியும். மை க்ளிக்ஸ். IRANIKKOIL , MY CLICKS.

இரணிக்கோயில் ஆக்ரோஷச் சிம்மங்களும் சிம்ம யாளியும். மை க்ளிக்ஸ். IRANIKKOIL , MY CLICKS.

நூற்றுக்கணக்கான ஆக்ரோஷச் சிம்மங்களை நீங்கள் இரணிக்கோயில் முழுவதும் தரிசிக்கலாம். பிரகாரத் தூண்கள் தோறும் எக்காளமிடும் சிம்மங்கள்.

ஒரு சிலவற்றில் ஒற்றையாகவும் ஒருசில தூண்களில் நாற்புறங்களிலும் கவினுற செதுக்கப்பட்டுள்ள இவற்றின் கோபமுகம் சிலசமயம் சாந்தமாகவும் சில சமயம் உக்கிரமாகவும் அச்சமூட்டுவதாகவும் உள்ளது.

வக்கிர அமைப்பில் அமைந்த கோவில் இரணிக்கோவில் இதுபற்றி முன்பே பல இடுகைகள் எழுதி  உள்ளேன். இப்போது தனியாக சிம்மங்கள் பற்றி.

ஏனெனில்  இரணியனை அழித்த உக்கிர நரசிம்மரை சரபேஸ்வரராக ஈஸ்வரன் சாந்தப்படுத்திய ஸ்தலம் இது. எனவே அசுரனை வதைத்த உக்கிர சிம்மங்கள் பொலிந்திருப்பதில் ஆச்சர்யமில்லை.


பூ மொட்டுக்களும் வாழைப்பூக்களும் மலர்ந்த தூண்களின் கீழ்ச்செறிவின் பீடத்தில் சிவகணங்களும் சிம்மமும் கூட காட்சி அளிக்கின்றன.

புதன், 14 அக்டோபர், 2020

குன்றக்குடியின் சுப்புலெட்சுமி. மை க்ளிக்ஸ். MY CLICKS.

குன்றக்குடியின் சுப்புலெட்சுமி. மை க்ளிக்ஸ். MY CLICKS.

குன்றக்குடி ஷண்முகநாதர் கோயில் யானை சுப்புலெட்சுமியைப் பற்றி முன்பே எழுதி இருக்கிறேன். திரும்ப அவளின் அழகுத்திரு உருவத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன். நெற்றியின் பட்டையாக விபூதியும் வேலும் தாங்கி அருள்பாலிக்கும் அழகுச் சின்னம் குன்றக்குடியின் சுப்புலெட்சுமி.
மலையிறங்கி வரும்போது அடுத்தடுத்த படிகளில் எடுத்தேன். :)

ஞாயிறு, 14 ஜூன், 2020

தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.

தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.

தொல்பொருள் துறையால் பாதுகாக்கப்படும் கோயில் இது. இதை பற்றி முன்பேயே பல பதிவுகள்  எழுதி இருக்கிறேன். இப்போ புகைப்படங்கள் மட்டும் பகிர்ந்துள்ளேன்

ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

குன்றக்குடி. மை க்ளிக்ஸ். KUNDRAKKUDI. MY CLICKS.

குன்றக்குடி. மை க்ளிக்ஸ். KUNDRAKKUDI. MY CLICKS.

குன்றக்குடியைப் பற்றி நிறைய போஸ்ட் போட்டிருக்கின்றேன்.  இன்னும் இரு பதிவுகள் போடக்கூட மேட்டர் இருக்கு. முக்கியமாக சமணர் படுகைகள்.  அதை இன்னொரு இடுகையில் பார்க்கலாம். இப்ப மலையடிவாரத்திலிருந்து கோவில் வரை பார்ப்போம்.

குன்றக்குடியின் குடைவரைக் கோயிலும் சமணர் படுகைகளும் (குமுதம் பக்தி ஸ்பெஷலில்) 

குன்றக்குடியில் கார்த்திகை முதல் சோம வாரம் ஆண்டிக்கு வடித்தல்

குன்றக்குடியின் சுப்புலெட்சுமி .


கோவிலின் கிழக்குப் பார்த்த முகப்பு. பரத் சரண்யா நடித்த ஒரு படத்தின் காட்சி இங்கே எடுக்கப்பட்டிருக்கு.

யூ ட்யூபில் 4031 - 4040 வீடியோக்கள். புலால் மறுத்தல். தினம் ஒரு திருக்குறள்.

யூ ட்யூபில் 4031 - 4040 வீடியோக்கள். தினம் ஒரு திருக்குறள். 4031.தினம் ஒரு திருக்குறள் - 251 l திருவள்ளுவர் l  புலால் மறுத்தல்  l    தேனம்மை...