ஊருணிகள் - திருக்கோயில் புஷ்கரணிகளும் தாமரை பூத்த தடாகங்களும்.
திருக்கோயில்களுக்குச் செல்லும்போதெல்லாம் என்னைக் கவர்ந்த இடங்கள் அதன் ஊருணிகள்தான். நன்கு மகிர மகிர நீர் நிறைந்து தெப்பக்குளங்கள் அழகுறக் காட்சி அளிக்கும். ஊரணி ( ஊருணி) , குளம், புஷ்கரணி, தடாகம், வாவி, தீர்த்தக் குளம், எல்லாமே ஒன்றுதான். கோயிலுக்குச் செல்வோர் முதலில் இந்தத் தீர்த்தத்தைத் தம்மேல் தெளித்துக் கொண்டு ( ப்ரோக்ஷணம் செய்து கொண்டு ) கால்களை சுத்தம் செய்து கொண்டு உள்ளே சென்று இறைவனை வணங்குவர்.
எனக்கு எப்போதும் ஏதோ ஒரு மையல் அந்த மகிர்ந்து கிடக்கும் நீரின் மீதும், பசியப் படர்ந்து கிடந்து கிளர்ச்சியைத் தூண்டும் பசுமைகளின் மீதும். சில ஊரணிகள் ப்ளேக்ரவுண்ட் மாதிரி காலியாக இருந்தாலும் சிறிதளவாவது நீர் இருக்கும்
பொதுவாக தென்னகக் கோயில்களின் கட்டுமானங்களில் சிறந்தது இந்தத் திருக்கோயில் புஷ்கரணிகள்தான். இவை பெரும்பாலும் சதுர வடிவில் அமையும். நாற்புறமும் படிகள். நாற்புறமும் ஒவ்வொரு கரையிலும் இரு இடங்களில் படிகள் இருக்கும். சில செவ்வக வடிவிலும் வெகு அரிதாக சில வட்ட வடிவிலும் அமைவதுண்டு.
நல்ல கட்டுமானத்தோடு தூர் வாரப்பட்டுப்பராமரிக்கப்படும். மேலும் இக்குளங்களில் ஈசான்ய மூலையில் ஒரு கிணறு கட்டாயம் இருக்கும். இன்னும் ஊரணிக்குள்ளே சில பல இடங்களிலும் இருக்கலாம். ஊரணியில் நீர் வற்றிய தருணங்களில் இவற்றில் சிலர் நீர் இறைப்பதை காரைக்குடி நகரச் சிவன்கோயிலில் பார்த்திருக்கிறேன்.
தெப்பம் மிதக்கும் காட்சியை மனக்கண்ணுள் கொண்டுவரும் தெப்ப மண்டபத்தோடு இருக்கும் இத்திருக்குளம் காரைக்குடி திருக்கோயிலூரில் உள்ளது . என்றைக்கும் நீர் குறையாது. இம்மாதிரிக் குளங்களுக்கு கம்மாய் - கண்மாய் போன்ற மற்ற நீர் தேங்கும் இடங்களில் இருந்து நீர் வரத்து இருந்துகொண்டே இருக்கும்.
இது அதே திருக்கோயிலூரில் உள்ளே நுழைந்ததும் காணப்படும் ஊரணி. படிகளின் கட்டமைப்புகளையும் கரைகள் பலப்படுத்தப்பட்டிருப்பதையும் பாருங்கள்.