எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

புத்தாண்டு ரெசிப்பீஸ் & கோலங்கள்.

புத்தாண்டு ரெசிப்பீஸ் & கோலங்கள்.

புத்தாண்டு ரெசிப்பீஸ் :-
1.டேட்ஸ் கேக்
2.ஸ்வீட் பான்கேக்
3.வெஜ் பான்கேக்
4.கீ ரைஸ்
5.நவ்ரத்ன குருமா
6.பாஸ்தா பட்டர் பெப்பர் ஃப்ரை
7.ஸ்பாகெட்டி டிலைட்
8.சைனீஸ் பஃப்ஸ்
9.ஆனியன் சமோசா

புதன், 26 பிப்ரவரி, 2020

ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி ரெசிப்பீஸ் & கோலம்ஸ்

ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி ரெசிப்பீஸ் & கோலம்ஸ்


மாதங்களில் சிறந்தது மார்கழி. மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று பகவத்கீதையில் கூறி இருக்கிறார் கிருஷ்ணர். இது சிவனுக்கும் பெருமாளுக்கும் உரிய மாதம். திருப்பாவையும் திருவெம்பாவையும் ஒலிக்கும் காலம், அரியும் அரனும் ஒன்று என்று சிறப்பிக்கும் மாதம். இம்மாதத்தில் சிவனடியார்கள் சிவனைத் தரிசித்து கைலாயம் அடைய ஆருத்ரா தரிசனமும், வைணவர்கள் பெருமாளின் பரமபதத்தை அடைய சொர்க்க வாசல் திறக்கும் வைகுண்ட ஏகாதசியும் ஒருங்கே இருப்பது சிறப்பு.

திங்கள், 24 பிப்ரவரி, 2020

கார்த்திகை தீபம் ரெசிப்பீஸ் & கோலங்கள். KARTHIGAI DEEPAM RECIPES & KOLAMS.

கார்த்திகை தீபம் ரெசிப்பீஸ் & கோலங்கள். KARTHIGAI DEEPAM RECIPES & KOLAMS.

கார்த்திகை தீபம் ரெசிப்பீஸ்

1.கார்த்திகை அவல் வெல்லப் பொரி
2.கார்த்திகை அடை
3.எள்ளுப் பொரி உருண்டை
4.கம்புப் பொரி உருண்டை
5.பொரி கடலை உருண்டை.
6.ஃப்ரூட்ஸ் & நட்ஸ் அவல்
7.வெல்லஅவல் பால்அவல் தேங்காய் அவல்.
8.பொரி பூந்தி சாலட்
9.பிசினரிசி பாசிப்பருப்புப் பாயாசம்.

வியாழன், 20 பிப்ரவரி, 2020

கோபுர வாசலிலே – ஆன்மீகம் காஞ்சி அருள்மிகு கச்சபேசுவரர் கோயில். கார்த்திகை மாவிளக்கும் கல்யாண நாககன்னிகளும். .

கோபுர வாசலிலே – ஆன்மீகம் காஞ்சி அருள்மிகு கச்சபேசுவரர் கோயில். கார்த்திகை மாவிளக்கும் கல்யாண நாககன்னிகளும். .


கோபுர வாசலிலே – ஆன்மீகம்
காஞ்சி அருள்மிகு கச்சபேசுவரர் கோயில்.
கார்த்திகை மாவிளக்கும் கல்யாண நாககன்னிகளும். . 

புராதன புராண இதிகாசப் பெருமை வாய்ந்த திருத்தலங்கள் நிரம்பியது காஞ்சிமாநகரம். இங்கே இஷ்ட சித்தீஸ்வரம் எனப்படும் கச்சபேசுவரர் கோயில் சிறப்பான பரிகார ஸ்தலமாகும். பிரதோஷ காலத்தில் மந்தார மலையை மத்தாகவும் வாசுகியைக் கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடையும்போது மத்தை கூர்மாவதாரம் எடுத்துத் (ஆமை வடிவெடுத்துத் கச்சப வடிவு எடுத்து ) தாங்கிய மஹாவிஷ்ணு சிவனை வழிபட்ட தலம் இது. எனவே கச்சப ஈஸ்வர இணைந்து கச்சபேசுவரத் திருக்கோயில் ஆனது. மயூர சதகம் உருவான திருத்தலம் இது. 

இங்கே கார்த்திகை மாதத்தில் ஒரு மழை ஞாயிற்றுக் கிழமையில் சென்றபோது அங்கே நூற்றுக்கணக்கான மக்கள் மாவிளக்கு ஏந்தியபடி விநாயகர் கச்சபேசுவரர் சந்நிதியில் க்யூ கட்டி நின்றனர். முருகனுக்கும் அம்மனுக்கும் மட்டுமே மாவிளக்குப் போட்டிருப்பதைப் பார்த்திருக்கிறோம் ஆனால் இங்கே விநாயருக்கும் கச்சபேசுவரருக்கும் மாவிளக்குப் படைக்கிறார்கள் மக்கள். 

திங்கள், 17 பிப்ரவரி, 2020

முருகன் கோலங்கள் & நிவேதனங்கள்.

முருகன் கோலங்கள் & நிவேதனங்கள்.


1.வள்ளிக்கிழங்கு பொரியல்
2.வாழைப்பூ பால் கூட்டு
3.கத்திரிக்காய் வாழைக்காய் கூட்டி அவிச்சுக் குழம்பு.
4.மரக்கறிக்காய் தோசை.
5.தேன்குழல்
6.மனகோலம்.
7.முறுக்குவடை.
8.சிவப்பரிசி அவல் பொரி உருண்டை.
9.முந்திரி பக்கோடா
10.பாதாம் பூரிப் பாயாசம்.

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020

குவாலியர் விவஸ்வான் மந்திர்

குவாலியர் விவஸ்வான் மந்திர்


”குவாலியர் விவஸ்வான் மந்திர். (சூரியனார் கோவில்).GWALIOR VIVASWAN MANDIR.” என்ற இந்த இடுகை என்னுடைய உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும் என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

வியாழன், 13 பிப்ரவரி, 2020

அறுபடை முருகன் கோயில்கள். - திருப்பரங்குன்றம்.

அறுபடை முருகன் கோயில்கள். - திருப்பரங்குன்றம்.

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும். என்ற பாடலை உச்சஸ்தாயியில் ரசித்துப் பாடியதுண்டு. சகோதரன் குடும்பத்தாரோடு அறுபடை முருகன் கோயில்களுக்கும் சென்று தரிசனம் செய்யும் வாய்ப்புக் கிட்டியது. முருகன் அருள் என்றுதான் சொல்ல வேண்டும். முதலில் மதுரை. அங்கே இரு படை வீடுகள். முதலில் முதலாம் படை வீடு திருப்பரங்குன்றம். அடுத்தநாள் காலையில் ஆறாவது படை வீடு பழமுதிர் சோலை.

அது ஒரு ஆடி மாசம் என்றாலும் கோயில்களில் கூட்டம் அள்ளியது. மதியத்தில் காரைக்குடியில் இருந்து புறப்பட்டு முதலில் திருவாதவூர் சென்று மாணிக்க வாசகரின் திருக்கோயிலையும் அங்கே இருந்த மாபெரும் சிவன் கோயிலுக்குச் சென்று ( அருள்மிகு வேதநாயகி அம்பாள் சமேத திருமறைநாத சுவாமி ) சிவனையும் தரிசித்தோம். நரியைப் பரியாக்கிய கதை ஞாபகம் வந்தது. :)

புதன், 12 பிப்ரவரி, 2020

வரலெக்ஷ்மி விரத ரெசிப்பீஸ் & கோலம்ஸ்.

வரலெக்ஷ்மி விரத ரெசிப்பீஸ் & கோலம்ஸ்.

வரலெக்ஷ்மி விரத ரெசிப்பீஸ். VARALAKSHMI VIRATHAM RECIPES.1.தேங்காய்த் திரட்டுப்பால்
2.மோத்தி பாக்
3.எள்ளுப் பூரணக் கொழுக்கட்டை
4.ஓட்ஸ் வெஜ் கொழுக்கட்டை
5.கோதுமை ரவை இட்லி.
6.கற்பூரவல்லி/ஓமவல்லி பஜ்ஜி
7.மதுர் வடை.
8.தேன் பழப் பாயாசம்

செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

கல்யாண சமையல் சாதம் :) WEDDING SPECIAL.

கல்யாண சமையல் சாதம் :) WEDDING SPECIAL.

கல்யாண சமையல் :-
1. அசோகா
2. வெஜ் பட்டர் ஊத்தப்பம்
3. மஷ்ரூம் பிரியாணி.
4. தென்னம்பாளைப் பொடிமாஸ்
5. இங்கிலீஷ் காய்கறி பிரட்டல்
6. மிக்ஸட் தால் பாயாசம்.

ஆடி 18 ஆம் பெருக்குக்கான ரெசிப்பீஸ் :-

ஆடி 18 ஆம் பெருக்குக்கான ரெசிப்பீஸ் :-

ஆடி 18 ஆம் பெருக்குக்கான ரெசிப்பீஸ் :-

திங்கள், 10 பிப்ரவரி, 2020

நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY.

நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY.

 முக்தியடைய நிஷ்டை இன்றியமையாதது. அழிக்கும் சிவனே நிஷ்டையில் ஆழ்ந்திருக்கும் காட்சி நிலையாமையையும் நிலையானவனைப் பற்ற வேண்டிய நிலைமையையும் உணர்த்தியது. சும்மா இருப்பதே சுகம் என்று  சொல்லி இருக்காங்க. ஆனா ஒரு அரைமணி நேரம் இப்படி சும்மா அமர்ந்து பாருங்க ( சிந்தனை எதுவுமில்லாம :).

சைவ நாற்படிகள் சரியை கிரியை யோகம், ஞானம் இவை சிவ புண்ணியங்களாகும். அட்டாங்க யோகங்களில் இயமம், நியமம், ஆசனம், ப்ரணாயாமம், பிரத்யாகாரம், தாரணை ,தியானம், சமாதி. என்பனவற்றுள் இது ஏழாம் எட்டாம் யோகமாகும். இவை முக்தி பெற வழிகளாம்.

 உலக புகைப்பட தினத்துக்காக பல்வேறு இடங்களில் ( நாகேஷ்வர், பெங்களூரு, கர்நாடகா ( பிதாருக்கும் குல்பர்க்காவுக்கும் மத்தியில் இருக்கும் சிவன் ) , குஜராத் சோம்நாத்தில் ஆர்ட் கேலரி அருகில் இருக்கும் லிங்கம்.  &  நிஷ்டையில் இருக்கும் சிவன் படங்களைப் பகிர்கிறேன்.


வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

காரைக்குடி சிவன் கோயில் கும்பாபிஷேகம்.

காரைக்குடி சிவன் கோயில் கும்பாபிஷேகம்.

காரைக்குடியில் இருக்கும் நகரச் சிவன் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி நிகழ இருக்கின்றது. இதைப்பற்றி என் ராமு மாமா முகநூலிலும் தனி மெயிலிலும் அறியத்தந்தவற்றை இங்கே பகிர்கிறேன்.

/////காரைக்குடிச் சிவன் கோவில் கும்பாபிஷேகம் – 27-08-2015 ,மன்மத வருடம் ஆவணி மாதம் ய ம் தேதி அன்று

வியாழன், 6 பிப்ரவரி, 2020

வேதவல்லியைத் தேடி.

வேதவல்லியைத் தேடி.

கும்பகோணத்தில்ருந்தபோது தாராசுரம் ஐராவதேசுவரர் கோயிலுக்குப் போனோம். வண்டியை நிறுத்திவிட்டுப் போனால் முதன் முதலில் நுழைந்தது வேதவல்லி அம்மன் சன்னிதி. யுனெஸ்கோவின் அரும்பெரும் சரித்திரச் சின்னத்தில் இடம் பெற்றதால் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழும், அறநிலையத்துறையின் பராமரிப்பின் கீழும் இயங்கி வருகிறது இக்கோயில் நிர்வாகம்.

செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

சுதாமாபுரி

சுதாமாபுரி

”சிரவண மாதத்தில் சுதாமாபுரி ” என்ற இந்த இடுகை என்னுடைய உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும் என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.