எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
நவக்ரஹக் கோயில் தரிசனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நவக்ரஹக் கோயில் தரிசனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 2 ஜூலை, 2020

நவக்ரஹக் கோயில் தரிசனம்:- திருநாகேஸ்வரம் ராஜவாழ்க்கை நல்கும் ராகுபகவான்

நவக்ரஹக் கோயில் தரிசனம்:- திருநாகேஸ்வரம் ராஜவாழ்க்கை நல்கும் ராகுபகவான்

"ராகுவைப் போலக் கொடுப்பவரும் இல்லை, ராகுவைப் போலக் கெடுப்பவரும் இல்லை" என்று சொல்வார்கள் நல்ல திருமண வாழ்க்கை அமையக் காரணகர்த்தா ராகுபகவான். போககாரன் என்று குறிப்பிடுவார்கள். இங்கே ராகு மங்கள ராகுவாக தன துணைவியர் நாகவள்ளி, நாககன்னி ( சிம்ஹி, சித்ரலேகா  ) யுடன் எழுந்து அருள்பாலிக்கிறார். நீண்ட ஆயுளும், சகல சம்பத்தும் அளிக்க வல்லவர் ராகு. இவர் ஆட்சி நடைபெற்றால் அந்த ஜாதகர் ராஜவாழ்க்கை வாழ்வார் என்பது ஜோதிட கணிப்பு. இவரது சுழற்சி ஒன்றரை ஆண்டுகள்.  ராகுவுக்கு உகந்த நிறம் நீலம். உகந்த மலர் மந்தாரை. உரிய ரத்னம் கோமேதகம். தான்யம் உளுந்து, நைவேத்தியம் உளுந்துப்பொடி சாதம் .
மூலவர் செண்பகாரண்யேஸ்வரர், இறைவி கிரிகுஜாம்பாள். நாகராஜன் வழிபட்ட ஈசன் எனவே நாகநாத ஸ்வாமி என்றழைக்கப்படுகிறார். கும்பகோணத்தில் இருந்து 6 கிமீ  அமைந்துள்ளது. ஸ்தலவிருட்ஷம் செண்பகம். தீர்த்தம் நாகதீர்த்தம் மற்றும் சூரிய தீர்த்தம் உட்பட பன்னிரு தீர்த்தங்கள். சூரிய புஷ்கரணி இது.

யூ ட்யூபில் 1931 - 1940 வீடியோக்கள். கோலங்கள்.

யூ ட்யூபில் 1931 - 1940 வீடியோக்கள். கோலங்கள். 1931.கோலங்கள் - 261 l கிராமதெய்வம்  l தேனம்மைலெக்ஷ்மணன் https://www.youtube.com/watch?v=7fdL1...