எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 30 ஜூன், 2020

நவக்ரஹ கோயில் தரிசனம்:- திருநள்ளாறு சாயாபுத்திரன் சனி பகவான்.

நவக்ரஹ கோயில் தரிசனம்:- திருநள்ளாறு சாயாபுத்திரன் சனி பகவான்.

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர், கோயிலில் ஒரு நாள் அதிகாலை  நேரத்தில் சனீஸ்வரருக்கு அபிஷேகம் காணும் பாக்கியம் கிட்டியது. பொதுவாக கூட்டமான நேரத்தில் முண்டியடித்துச்  சென்று வணங்கியே  பழக்கம். அன்று ஏனோ நாலைந்து பேர் நிற்க நாமும் முன்னே சென்று நன்கு தரிசிக்கும் வாய்ப்புக்கு கிட்டியதில் மிக மகழ்ச்சியாக இருந்தது. எல்லா அபிஷேகமும் முடிந்து  வெள்ளிக்கவசத்தில் ஜொலித்தார் அழகியகுட்டிசனீஸ்வரர்.
சனி, ராகு, கேது ஆகியோரின் பெயர்ச்சி எல்லாவற்றையும் விட முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, ஜென்ம சனி என்றாலே எல்லாரும் கிடுகிடுத்துப் போவார்கள். என்னென்ன சோதனை எல்லாம் வைச்சிருக்கோ சனி பகவான் என்று.

ஞாயிறு, 28 ஜூன், 2020

நவக்ரஹ கோயில் தரிசனம். :- சூரியனார் கோவிலில் சிவசூரியநாராயணரை நோக்கும் மங்களகுரு..

நவக்ரஹ கோயில் தரிசனம். :- சூரியனார் கோவிலில் சிவசூரியநாராயணரை நோக்கும் மங்களகுரு..

சூரியனின் பொன்னிறக் கதிர்கள் எங்கெங்கும் பிரகாசமாகப் பரவி இருக்க மந்தகாசமான அந்த அதிகாலை வேளையில் சூரியனார் கோவிலுக்குள் நுழைந்தோம். ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக் கின்ற தாய்போல கதகதப்பாக எம்மைச் சூழ்ந்திருந்தார் சூரியனார்.
நவக்ரஹங்களில் முதன்மையானவர். நவக்ரஹங்களின் நாயகன். பயிர்பச்சைகள் உயிர்த்தெழக் காரணமானவர். இந்த உலகத்தைத் தன் கிரணங்களால் தினம் புதிப்பிப்பவர். ஏழுகுதிரைகள் பூட்டிய இரதத்தில் வலம் வருபவர். அதிகாரம் தலைமைப்பண்புக்குக் காரணமானவர். ஆளுமைத்தன்மை மிக்கவர். சூரியனிலிருந்து வெடித்துச் சிதறியதுதான் பூமி ( பிக்பாங் தியரி ) என்பது அறிவியல் கூற்று.

வெள்ளி, 26 ஜூன், 2020

நவக்ரஹ கோயில் தரிசனம்:- கஞ்சனூரில் சுபம், சுகமீயும் சுக்கிரமூர்த்தி.

நவக்ரஹ கோயில் தரிசனம்:- கஞ்சனூரில் சுபம், சுகமீயும் சுக்கிரமூர்த்தி.

அதிகாலை வெய்யில் சுகமாய் வருட கிழக்கு நோக்கிய ஐந்துநிலை இராஜகோபுரம் நம்மைக் கம்பீரமாக வரவேற்கிறது.  பணங்காசு அதிகம் பெற்றவரைப் பார்த்து அவருக்கென்ன "சுக்ர திசை அடிச்சிருக்கு" என்று சொல்வார்கள். சுக்ரதிசை நடந்தால் தொட்டதெல்லாம் பொன்னாகும். அப்படிப்பட்ட பொன்னார்மேனியன் சுக்கிரனை வணங்கும் வாய்ப்புக்கு கிட்டியது. 
ரோஸ் அரளி மாலையுடன் சுக்கிரனைப் பார்க்க நடையை எட்டிப் போட்டோம்.

புதன், 24 ஜூன், 2020

நவக்ரஹ கோயில் தரிசனம் :- கீழப்பெரும்பள்ளம் கேண்மை மிக்க கேதுபகவான்

நவக்ரஹ கோயில் தரிசனம் :- கீழப்பெரும்பள்ளம் கேண்மை மிக்க கேதுபகவான்

ஞானகாரகன் கேது என்று சொல்லப்படுவதுண்டு. கால சர்ப்ப தோஷ ஜாதகம் என்றோ காலசர்ப்ப  யோக ஜாதகம் என்றோ  ஒரு ஜாதகத்தில் லக்கினத்தில் ராகுவோ கேதுவோ இடம்பெற்று  அதிலிருந்து ஏழாம் எட்டாம் இடத்திற்குள் மற்ற கிரகங்கள்  இடம்பெற்றிருந்தால் இவ்வாறு அழைப்பார்கள்.

சகட யோகக்காரர்கள் என்றும் சொல்வதுண்டு. சகடம் ( கிணற்றில் நீர் இறைக்கப் பயன்படும் கருவி போல் ) அவர்கள் வாழ்வு நிலை மேலேஏறிக் கீழிறங்கி திரும்ப மேலேறிக் கொண்டிருக்கும். அப்படிப்பட்டவர்கள் கேதுவை வணங்கினால் நிலைமை சீராகும்.
கீழப்பெரும்பள்ளம் நவக்ரஹக் கோயில்களில் சிறிய அழகிய கோயில். வெளிநிலையில் ரிஷபாரூடர் காட்சி அளிக்க எதிரே ஒரு ஆலமரம் நாகர்களால் நிரம்பி இருக்கிறது. நாகர்கள் மேலெல்லாம் பக்தர்கள் திருமணத் தடை நீக்க அணிவித்த மஞ்சள் கயிறுகள், மஞ்சள்  கிழங்குகளோடு மூடி இருக்கின்றன. குழந்தைப்பேறு வேண்டி கட்டப்பட்ட மஞ்சள் தொட்டில்கள் காற்றில் சரசரக்கின்றன. இது நாகதோஷ பரிகார ஸ்தலம்.

திங்கள், 22 ஜூன், 2020

நவக்ரஹ கோயில் தரிசனம் :- திருவெண்காடு பிள்ளை இடுக்கி அம்பாளும் புதபகவானும்

நவக்ரஹ கோயில் தரிசனம் :- திருவெண்காடு பிள்ளை இடுக்கி அம்பாளும் புதபகவானும்


கும்பகோணத்தில் இருந்து திருவெண்காடு 52 கிமீ தூரத்தில் உள்ளது. காலை வேளையில் சென்று ஈசனுக்கும் அம்பிகைக்கும் திருவனந்தல் பார்த்தோம்.
இக்கோயில் சோழர் காலத்தில் கட்டிடப்பட்டது. கிபி 1000 இல் இருந்து தற்போது வரை அழகாகப் புதுப்பிக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

சனி, 20 ஜூன், 2020

நவக்ரஹ கோயில் தரிசனம் :- புள்ளிருக்குவேளூரில் மங்களம் தரும் அங்காரகன்.

நவக்ரஹ கோயில் தரிசனம் :- புள்ளிருக்குவேளூரில் மங்களம் தரும் அங்காரகன்.

வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயிலில் மங்களம் தரும் அங்காரகன் குடிகொண்டிருக்கிறார். இங்கே மூலவர் வைத்தியநாதர் , தாயார் தையல்நாயகி, முத்துக்குமாரசுவாமி, அங்காரகன் ஆகியோரைத் தரிசித்தல்  விசேஷம். 

சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து  வடிந்த  வியர்வைத்துளியில் உதித்தவர் அங்காரகன். அந்தத் துளி கீழே விழாமல் பூமாதேவி தாங்கி வளர்த்ததால் இவர் பூமிகாரனாகவும் திகழ்கிறார். இன்னொரு கதையில் இந்த நெற்றிப் பொறியை அக்கினி கங்கையில் சேர்த்ததால் அங்காரகன் தோன்றினார் என்கிறார்கள். அக்கினி தேவனுக்கும் விகேசிக்கும் பிறந்தவர் அங்காரகன் என்றும் இவர் விநாயகரை வணங்கி  தவமிருந்து அமரபதவி அடைந்தார் என்றும் கூறுகிறது இன்னொரு கதை. உஜ்ஜயினியில் தோன்றியவர் என்றும் கூறுகிறது ஒரு கதை. 

செந்நிறகிரகம்  செவ்வாய்

புள் இருக்கு வேள் ஊர்   என்றால் முருகன், ருக்வேதம் ,கருடன் ( ஜடாயு, சம்பாதி) சூரியன் ஆகியோர்  வணங்கி அருள் பெற்றதாக சொல்கிறார்கள்.

வியாழன், 18 ஜூன், 2020

நவக்ரஹ கோயில் தரிசனம் - ஆலங்குடி ஆலமர் ஈசன்.

நவக்ரஹ கோயில் தரிசனம் - ஆலங்குடி ஆலமர் ஈசன்.

கும்பகோணத்தில் இருந்து பதினேழு கிலோமீட்டர்  தூரத்தில் உள்ளது ஆலங்குடி. இறைவன் ஆபத்சகாயேஸ்வரர்.  இறைவி  ஏலவார்குழலி அம்மை.

பாற்கடலைக்கடைந்தபோது வெளிவந்த விஷத்தை இறைவன் அருந்தி தேவர்களைக் காப்பாற்றியதால்  ஆபத்சகாயேஸ்வரர் என்று பெயர். அதனாலேயே இவ்வூருக்கு ஆலங்குடி என்று பெயர்.
ஆலங்குடியில் ஆலமர் ஈசனைத்  தரிசிக்கும் பேறு கிட்டியது. "குரு பார்க்கக் கோடி நன்மை" என்பார்கள். மழையும் இருளும் போட்டிபோட்டுத் தாக்கியபோதும் ஆலங்குடி சென்று  அத்தகைய குருவை அருகே தரிசித்ததில் மிகவும் மகிழ்ந்தோம்.

செவ்வாய், 16 ஜூன், 2020

சொக்கேட்டான் கோயில்

சொக்கேட்டான் கோயில்

 சொக்கேட்டான்  கோயில், சொற்கேட்ட  விநாயகர் ,சொற்கேட்டான்   கோயில், சொல் கேட்ட ஐயா ஆகிய பெயர்களோடு விளங்கும் விநாயகரை சிலநாள் முன்பு தரிசித்தோம்
Sorkettan koil
காரைக்குடிக்குப் பக்கமுள்ள பள்ளத்தூர் வேலங்குடியில் கோயில் கொண்டிருக்கும் இறைவனே சொற்கேட்ட விநாயகர். இவரின் சன்னதி வாசலில் நின்று என்ன வேண்டிக் கொண்டாலும் அது அப்படியே பலிக்கும் என்பதால் பக்தர்களின் சொல் கேட்ட விநாயகர் என்ற பெயர் பொருத்தமாய் விளங்குகிறது. இதைப் பேச்சு வழக்கில் சொக்கேட்டான் கோயில் = சொக்கட்டான் கோயில்  என்கிறார்கள்.

ஞாயிறு, 14 ஜூன், 2020

தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.

தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.

தொல்பொருள் துறையால் பாதுகாக்கப்படும் கோயில் இது. இதை பற்றி முன்பேயே பல பதிவுகள்  எழுதி இருக்கிறேன். இப்போ புகைப்படங்கள் மட்டும் பகிர்ந்துள்ளேன்

வெள்ளி, 12 ஜூன், 2020

இந்திராஜான் சேப்பலும், ஸந்தான கணபதி ஸஞ்சீவி ஆஞ்சநேயரும்.

இந்திராஜான் சேப்பலும், ஸந்தான கணபதி ஸஞ்சீவி ஆஞ்சநேயரும்.


காரைக்குடியில் இந்திராஜான் ஹாஸ்பிட்டலைத் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. செக்காலையில் டாக்டர் சுகுமாரியம்மாவுக்குப் பின்னால் பிரபலமான டாக்டர் இந்திராஜான். இவரது தந்தை மெனா மெனா வீதியில் உள்ள ஜான் மெடிக்கல்ஸ் நடத்திவந்தார் என நினைக்கிறேன். 

எங்கள் தலைமுறையில் பெரும்பாலோர் இந்த உலகுக்கு வந்ததும் பார்த்த முதல் முகம் சுகுமாரியம்மாவுடையதாகத்தான் இருக்கும்.



இந்திராஜானம்மா ஹாஸ்பிட்டல்லுக்குச் சென்றிருந்தபோது இந்த தியான இடத்தைப் பார்த்தேன். ( கல்லூரிகளில் சேப்பல்ஸூன் ஸைலன்ஸ் ) என்று எழுதி இருப்பதன் முழு அர்த்தமும் இங்கே புரிந்தது.

புதன், 10 ஜூன், 2020

கும்பக்கலசம் இல்லாத தரங்கம்பாடி மாசிலாமணிநாதர் கோயில்

கும்பக்கலசம் இல்லாத தரங்கம்பாடி மாசிலாமணிநாதர் கோயில்


கோபுரம் இருக்கு ஆனா கும்ப கலசம் இல்லை. இப்பிடி ஒரு கோயிலைத் தரங்கம்பாடிக் கடற்கரையில் பார்த்தேன். கோபுரம் முழுமையா இதே அமைப்புலதா கும்பம் இல்லாமக் கட்டப்பட்டிருக்கு. 

கோயிலுக்குப் பின்னாடி வேற பிட்டு பிட்டா கோயில் மண்டபங்கள் இருக்குறமாதிரி தனித்தனிக் கட்டிடங்கள் இருக்கு.


திங்கள், 8 ஜூன், 2020

ஸ்ரீ சேது பந்தன ஜெயவீர ஆஞ்சநேயர்.

ஸ்ரீ சேது பந்தன ஜெயவீர ஆஞ்சநேயர்.


திருப்புல்லாணிக்கு அருகில் ஸ்ரீ சேதுக்கரை ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் சமுத்திரத்தைப் பார்த்து அமைந்திருக்கிறது.


ஆடி அமாவாசை போன்ற தினங்களில் இங்கேயும் ராமேஸ்வரத்திலும் பிதுர் தர்ப்பணம் நடைபெறும். ஆனால் இங்கே கோயிலுக்கு எதிரே பத்தடியிலேயே கடலும் அதை ஒட்டி சீரற்ற படிகளும் சிதைந்த சிலைகளுமாகக் காட்சி அளிக்கின்றன. நடப்பதே சிரமமாய் இருந்தது.



முதலில் ஒரு விநாயகர் கோயில் அமைந்திருக்கிறது.

சனி, 6 ஜூன், 2020

பிதார் பாப்நாஷ் ஷிவ் மந்திர் - பிதார் பாபநாசம் சிவன் கோயில்.

பிதார் பாப்நாஷ் ஷிவ் மந்திர் - பிதார் பாபநாசம் சிவன் கோயில்.

பாப்நாஷ் என்றால் பாவங்களை அழிப்பவர் என்று அர்த்தம். இங்கே வந்து பாப்நாஷ் அருவியில் நீராடி சிவனை வணங்குபவரின் பாவங்கள் தொலையும் என்பது நம்பிக்கை. சிவன் ராத்திரி இங்கே ரொம்ப ஸ்பெஷல். ஹைதையிலிருந்து குல்பர்கா சென்றுவிட்டு பிதார் வரும் ( பிதார் - உட்கிர் ) வழியில் இக்கோயிலுக்குச் சென்றோம். காரோட்டி இதன் சிறப்பைச் சொல்லி அழைத்துச் சென்றார். நீளச் செம்மண் பாதை போய்க்கொண்டே இருந்தது. அதன்பின் வந்தது கோயில்.

புதன், 3 ஜூன், 2020

திண்டல் முருகனின் திருமுக தரிசனம்.

திண்டல் முருகனின் திருமுக தரிசனம்.

திண்டல் முருகனின் திருமுகத்தை அழகு பொலியும் அருள் முகத்தை தரிசனம் செய்யணும்னா நீங்க ஈரோட்டுக்குக் கட்டாயம் வந்தே ஆகணும். மலைமேல் குட்டி முருகன் உங்களை எதிர்நோக்கிக் காத்துக்கிட்டு இருக்கார். 

“முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே. “

”கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே என்றொரு சினிமாப் பாட்டு உண்டு. இங்கே ஈரோடு பெருந்துறையிலிருந்து எட்டு கிலோமீட்டரில் குடிகொண்டிருக்கும் குழந்தை வேலாயுதசாமி கோயிலில் இடும்பனும் வணங்கப்படுகிறார். இடும்பனின் மூலம் தமது கோரிக்கைகளைத் தெரிவித்துப் பக்தர்கள் முருகன் அருள் பெறுகிறார்கள்.



திண்டல் முருகன் கோயில் சிறு குன்றின்மேல் அமைந்திருக்கிறது. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்தானே. குன்றுதோறாடல்தானே அவனது திருவிளையாடல்.

திங்கள், 1 ஜூன், 2020

மந்த்ராலயத்தில் ஒரு மதியம்.

மந்த்ராலயத்தில் ஒரு மதியம்.

மனதுக்கு மிகவும் பிடித்த மகத்துவபூர்ணமான இடம் மந்த்ராலயம். 

17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கர்நாடகா ஆந்திரா பார்டரில் துங்கபத்ரா நதிக்கரையில் உள்ள மந்த்ராலயத்தின் பிருந்தாவனத்தில் ஜீவசமாதியாகி அருளாட்சி செய்பவர் ராகவேந்திர சுவாமி. அவர் பிறந்தபோது அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் திருவேங்கடநாதர். திருப்பதி பெருமாளின் பெயர்.!

ஹைதையில் இருந்தபோது ஒரு முறை ( இது இரண்டாம் முறை – முதல் முறை குழந்தைகள் சின்னவர்களாக இருக்கும்போது சென்றது ). சென்று வந்தோம்.

கர்நாடகாவில் ஏதோ நதிநீர் மின்சாரப் பிரச்சனை காரணமாக அன்று60 கிலோமீட்டர் ரெய்ச்சூரைச் சுற்றிக்கொண்டு சென்றோம். அதனால் மதியம் ஆகிவிட்டது.


நுழைவாயில்

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.