நவக்ரஹ கோயில் தரிசனம்:- திருநள்ளாறு சாயாபுத்திரன் சனி பகவான்.
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர், கோயிலில் ஒரு நாள் அதிகாலை நேரத்தில் சனீஸ்வரருக்கு அபிஷேகம் காணும் பாக்கியம் கிட்டியது. பொதுவாக கூட்டமான நேரத்தில் முண்டியடித்துச் சென்று வணங்கியே பழக்கம். அன்று ஏனோ நாலைந்து பேர் நிற்க நாமும் முன்னே சென்று நன்கு தரிசிக்கும் வாய்ப்புக்கு கிட்டியதில் மிக மகழ்ச்சியாக இருந்தது. எல்லா அபிஷேகமும் முடிந்து வெள்ளிக்கவசத்தில் ஜொலித்தார் அழகியகுட்டிசனீஸ்வரர்.
சனி, ராகு, கேது ஆகியோரின் பெயர்ச்சி எல்லாவற்றையும் விட முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, ஜென்ம சனி என்றாலே எல்லாரும் கிடுகிடுத்துப் போவார்கள். என்னென்ன சோதனை எல்லாம் வைச்சிருக்கோ சனி பகவான் என்று.