கோபுர தரிசனம் கோடி புண்ணியம்.
கோபுரம் (கோயில்)
இந்த இணைப்பில் கோயில் கோபுரங்களைப் பற்றிப் பார்க்கலாம். கோபுர தரிசனம் என்பது இன்றியமையாத ஒன்று. கோயிலுக்குச் செல்ல இயலாவிட்டாலும் கோபுரத்தைப் பாத்துக் கன்னத்தில் போட்டுக் கொள்வதுண்டு. கோயிலின் ஆறுகாலப் பூசைப் பொழுதுகளில் இல்லத்திலிருந்தபடியே கோபுர தரிசனம் மட்டுமே கண்டு வணங்குபவர்களும் உண்டு. மிகப் பெரும் கோபுரங்கள் விமானம் என்று அழைக்கப்படுகிறது. ( டவர்ஸ், ஸ்தூபி, போன்றவையும் கோபுரங்கள்தான் ஆனால் இங்கே கோயில் கோபுரம் மட்டும் குறிப்பிட்டுள்ளேன். )
தென் தமிழகத்தில்தான் பெரும்பாலும் கோபுரங்கள் சிறப்பான சிற்ப அமைப்போடு இருக்கின்றன. கல்லால் செய்யப்பட்டவை. மேலும் ஒரு நிலைக் கோபுரத்தில் இருந்து பதினாறு நிலைக் கோபுரம் வரை உள்ளன. பதினாறு கோபுரங்கள் அமைந்த கோயிலும் உண்டு.
கோபுரத்தைப் பார்க்கும்போதெல்லாம் கடவுள் நினைவுக்கு வருவார் என்பதால் கோபுர தரிசனம் கோடிப்புண்ணியம் என்றாயிற்று.
இது கோயிலூர் கோயில் கோபுரம்.
இது வைரவன்பட்டி கோயில் கோபுரம்.