எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 31 டிசம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 2

ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 2

ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம்.

நதேதராதி பீகரம் நவோதி தார்க்க பாஸ்வரம்
நமஸ் ஸுராரி நிர்ஜரம் நதாதிகாப துத்தரம் ஐ
ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
மஹேச்வரம் ஸமாச்ரயே பராத்பரம் நிரந்தரம.

காரைக்குடி செக்காலைக் கோட்டை விநாயகர்.
நகரச்சிவன்கோயில் திருக்குட நன்னீராட்டு விழா அழைப்பிதழில்.

வெள்ளி, 28 டிசம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -1.

ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -1.

ஸ்ரீ மஹா கணபதிம் நமஹ . கணேச பஞ்சரத்தினம்.

முதாகராத்த மோதகம் ஸதாவிமுக்தி ஸாதகம்
கலாதரா வதம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம்
அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம்
நதாசபாசு நாசகம் நமாமி தம் விநாயகம்

மல்லிகாம்மா வீட்டு வாயிலை அலங்கரிக்கும் விநாயகர்கள் :) ராட்ஸ் ராதாவின் அம்மா வீட்டு விநாயகர்கள். :)

வியாழன், 27 டிசம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.

ஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.

ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி

ஓம் கம் கணபதியே போற்றி

ஓம் கருதிய செயலை முடிப்பாய் போற்றி
ஓம் செம்பொன் மேனி பெம்மான் போற்றி
ஓம் தடைகளைப் போக்கும் தயாபரா போற்றி
ஓம் சிறுகண் களிற்றுத் திருமுகா போற்றி
ஓம் அறுமுகச் செவ்வேள் அண்ணா போற்றி
ஓம் உள்ளத்து இருளை ஒழிப்பாய் போற்றி
ஓம் ஆக்கமும் ஊக்கமும் தருவாய் போற்றி
ஓம் வையம் வாழ்விக்க வந்தருள் போற்றி ! போற்றி !!.


இல்லத்து கணபதி. 

இவர் ஹைதையில் விசா பாலாஜி தரிசிக்கச் சென்ற காரில் இருந்தவர்.

புதன், 26 டிசம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி !

ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி !


ஓம் பொன் அருள் தருவாய் போற்றி !

ஓம் ஐந்தொழில் ஆற்றும் அப்பா போற்றி
ஓம் பாலும் தேனும் புசிப்பாய் போற்றி
ஓம் குணம் கடந்த குன்றமே போற்றி
ஓம் எண்ணும் எழுத்தும் ஆனாய் போற்றி
ஓம் பிறவிப் பிணியைத் தீர்ப்பாய் போற்றி
ஓம் தோணியாய் வந்த துணைவா போற்றி
ஓம் மாலுக்கு அருளிய மதகரி போற்றி
ஓம் கரும்பாயிரம் கொள் கள்வா போற்றி
ஓம் அப்பமும் அவலும் புசித்தாய் போற்றி
ஓம் முப்புரி நூலணி மார்பினாய் போற்றி

ஆலயத்தின் ராஜ கணபதி. 
ரேஸ் கோர்ஸ் 108 விநாயகர் விபூதிப் ப்ரசாதம்

செவ்வாய், 25 டிசம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,

ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,

 ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,

ஸ்ரீ விநாயகர் துதி.

ஓம் விண்ணவர் தொழும் விமலா போற்றி
ஓம் மண்ணுயிர்க்கொரு மருந்தே போற்றி
ஓம் கள்ளவாரணப் பிள்ளையே போற்றி
ஓம் திருமுறை காட்டிய திருவே போற்றி
ஓம் பேழைவயிற்று பெருமானே போற்றி
ஓம் இருவேறு உருவ இறைவா போற்றி
ஓம் தம்பிக்கு வள்ளியைத் தந்தாய் போற்றி
ஓம் வேண்டும் வரமருள்வாய் போற்றி
ஓம் கரிமுகத்து எந்தாய் காப்பாய் போற்றி
ஓம் கற்றவர் விழுங்கும் கனியே போற்றி. 

ஒரு ஃபர்னிச்சர் மார்ட்டின் முகப்பில் இருந்த விநாயகர்.
 காரைக்குடி எங்கும் இப்போது பழக்கடை. எனவே ஒரு பிரம்மாண்டப் பழக்கடையில் இரு விநாயகர்கள். !!! தேடிப்பார்த்துக்குங்க எங்கேன்னு :)

திங்கள், 24 டிசம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி

ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி

ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி.

ஸ்ரீ விநாயகர் போற்றித் துதி. 

ஓம் வக்ரதுண்ட விநாயகா போற்றி
ஓம் நம்பினோர் வாழ்வே போற்றி
ஓம் ஏழைக்கு இரங்கினாய் போற்றி
ஓம் விடலை விரும்பினாய் போற்றி
ஓம் எருக்குவேர் ஏற்றாய் போற்றி
ஓம் அனலாசுரனை அழித்தாய் போற்றி
ஓம் புத்தியருளும் புண்ணியா போற்றி
ஓம் ஆபத்தில் காப்பாய் போற்றி
ஓம் பாவமறுப்பாய் போற்றி
ஓம் விகடச் சக்கர விநாயகா போற்றி

சென்னை நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் கோயில் விநாயகர்.
 இவர் அதே கோயிலில் உள் புறச்சுற்றில் உள்ள விநாயகர்.

வெள்ளி, 21 டிசம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.

ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.

ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி,

ஸ்ரீ விநாயகர் போற்றித் துதி.

ஓம் வன்னியிலை ஏற்பாய் போற்றி
ஓம் காலம் கடந்த கற்பகமே போற்றி
ஓம் வெவ்வினை அறுப்பாய் போற்றி
ஓம் வேட்கை தணிவிப்பாய் போற்றி
ஓம் கண்ணுதற் கடவுளே போற்றி
ஓம் முருகனின் அண்ணனே போற்றி
ஓம் முக்திக்கு வித்தானாய் போற்றி
ஓம் முக்குணம் கடந்தாய் போற்றி
ஓம் வெயிலுகந்த விநாயகா போற்றி
ஓம் கோடிசூரிய ஒளியினாய் போற்றி

மாமாவின் சாந்தி வைரவன் பட்டியில் நடைபெற்றபோது அங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த பிள்ளையார் ( குடும்பத்தோடு :)

வியாழன், 20 டிசம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.

ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.

ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக கனிறே போற்றி,

ஸ்ரீ விநாயகர் போற்றித் துதி.

ஓம் பெற்றோர் வலம் வந்தாய் போற்றி
ஓம் எருக்க மலர் ஏற்றாய் போற்றி
ஓம் ஊழ்வினை ஒழிப்பாய் போற்றி
ஓம் பொல்லாப் பிள்ளையே போற்றி
ஓம் மாற்றுரைத்த விநாயகா போற்றி
ஓம் வல்லபையை மணந்தாய் போற்றி
ஓம் பெருவயிறு கொண்டாய் போற்றி
ஓம் காட்சிக்கு சாட்சியானாய் போற்றி
ஓம் பக்தர்க்கு அருளும் பரமனே போற்றி
ஓம் தாயினும் பரிந்தருள்வாய் போற்றி

நெல்லி மரத்துப் பிள்ளையார் ஜோராகக் காட்சி தருகிறார். :)
பெரிய முத்து மாரியம்மன் கோயிலில்

புதன், 19 டிசம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி

ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி

ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி

ஸ்ரீ விநாயகர் போற்றித் துதி.


ஓம் ஆனைமுகத்தானே போற்றி
ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி
ஓம் வேழமுகத்தானே போற்றி
ஓம் வரமருள் வள்ளலே போற்றி
ஓம் காலத்தை வென்றாய் போற்றி
ஓம் சிந்தமணி விநாயகா போற்றி
ஓம் வியாசருக்கு உதவினாய் போற்றி
ஓம் கயிலை சேர்ப்பிப்பாய் போற்றி
ஓம் திருமுறை காட்டியவனே போற்றி
ஓம் முத்தமிழ் வித்தக சாமியே போற்றி

ஒரு நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்த போது அங்கே இருந்த விநாயகர்.ஒரு டேபிள் ஸ்டாண்டாக இருந்த அட்டையில்

செவ்வாய், 18 டிசம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் ஐங்கர தேவா போற்றி.

ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் ஐங்கர தேவா போற்றி.

 ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் ஐங்கர தேவா போற்றி.

ஓம் இருவினை தீர்ப்பாய் போற்றி
ஓம் அம்மையின் பிள்ளாய் போற்றி
ஓம் ஆதிமூல விநாயகா போற்றி
ஓம் துண்டி விநாயகா போற்றி
ஓம் கருணை செய்வாய் போற்றி
ஓம் வழித்துணை வருவாய் போற்றி
ஓம் வேதப்பொருளே போற்றி
ஓம் வேண்டும் வரமருள்வாய் போற்றி
ஓம் மூஞ்சூறு வாகனனே போற்றி
ஓம் பிள்ளைக் கடவுளே போற்றி
 


இவர் குல்பர்கா சரவண பசவேசுவரர் கோயிலில் உள்ள  சரவண பசவேசுவரர் சந்நிதியின் நிலையில் உள்ள விநாயகர்.
இவர் அதே கோயிலின் வெளிப்புற சந்நிதியின் கோபுர நிலையில்  இருக்கும் விநாயகர்.

திங்கள், 17 டிசம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் எருக்கினில் இருப்பாய் போற்றி

ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் எருக்கினில் இருப்பாய் போற்றி

ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் எருக்கினில் இருப்பாய் போற்றி.

ஓம் வாதாபி கணபதி போற்றி
ஓம் சதுர்த்தி நாயகனே போற்றி
ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
ஓம் இளம்பிறை சூடினாய் போற்றி
ஓம் தம்பிக்கு உதவினாய் போற்றி
ஓம் கற்றோர்க்கு இனியாய் போற்றி
ஓம் கல்லார்க்கும் எளியாய் போற்றி
ஓம் உற்றதுணை நீயே போற்றி
ஓம் குற்றம் பொறுப்பாய் போற்றி
ஓம் விண்ணோர் தலைவா போற்றி
 


இவர் ராமேஸ்வரம் சென்ற காரில் இருந்தவர். மல்லிகையில் இருக்கும் விநாயகர்.
 நம்ம காரைக்குடி நெல்லி மரத்துப் பிள்ளையார்.

வெள்ளி, 14 டிசம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி

ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி

ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி

ஓம் பாரதம் எழுதினாய் போற்றி
ஓம் மோதகம் ஏற்பாய் போற்றி
ஓம் காவிரி தந்த கருணை போற்றி
ஓம் கஜமுகனை வென்றாய் போற்றி
ஓம் அருகம்புல் ஏற்பாய் போற்றி
ஓம் அச்சினை முறித்தாய் போற்றி
ஓம் ஐங்கரத்து ஆண்டவா போற்றி
ஓம் அல்லல் அறுப்பாய் போற்றி
ஓம் பிரவண சொரூபமே போற்றி
ஓம் வேதாந்த வித்தகனே போற்றி
 


விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்.
இங்கும் ஹைதை கணபதிகள்.

வியாழன், 13 டிசம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் உமையவள் மைந்தா போற்றி.

ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் உமையவள் மைந்தா போற்றி.

ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் உமையவள் மைந்தா போற்றி.

108 விநாயகர் போற்றி :-

ஓம் சக்திவிநாயகா போற்றி
ஓம் சிவனார் தவப்புதல்வா போற்றி
ஓம் முழுமுதற் பொருளே போற்றி
ஓம் மூலாதார மூர்த்தியே போற்றி
ஓம் உமையவள் மதலாய் போற்றி
ஓம் உத்தமர் உள்ளத்தாய் போற்றி
ஓம் மாங்கனி பெற்றாய் போற்றி
ஓம் அவ்வைக்கருளினாய் போற்றி
ஓம் கந்தனுக்கு மூத்தோய் போற்றி
ஓம் சித்தி புத்தி நாதனே போற்றி
 


விநாயகனைத் தொழுதால் வினைகள் அகன்றுவிடும்.

மும்பை பாந்த்ராவில் ஷீ அமைப்பினர் ஏற்படுத்தி இருந்த விநாயகர் கூடம்.

புதன், 12 டிசம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் ஈடில்லா தெய்வம் போற்றி.

ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் ஈடில்லா தெய்வம் போற்றி.

ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் ஈடில்லா தெய்வம் போற்றி.

அருணகிரிநாதர் இயற்றிய கந்தர் அனுபூதியில் விநாயகர் வணக்கம்.

நெஞ்சக் கனகல்லு நெகிழந் துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே
பஞ்சக் கரவானை பதம் பணிவாம்.


குஜராத் கணபதிகள் தொடர்கிறார்கள். பச்சை இலைகளால் செதுக்கிய அமைப்பில் கணபதி.
பிள்ளையாரை வாங்காம ஃபோட்டோ பிடிச்சிக்கிட்டே போயிடுவீங்களான்னு லுக்கு கொடுக்குறார் இந்த அம்மா  :)

செவ்வாய், 11 டிசம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் இந்தின் இளம்பிறை போற்றி.

ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் இந்தின் இளம்பிறை போற்றி.

ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் இந்தின் இளம்பிறை போற்றி.சண்முக நவக்ரக பாமாலையில் விநாயகர் காப்பு.

ஆறுமுகன் புகழை அன்றாடம் போற்றிடவே
ஏறுமுகம் கிடைக்கும் ! சேரும் புகழ் ஏராளம் !
ஒன்பான் கிரகமுமே ஓடிவந்து காப்பாற்றும். !
கண்ணான வேழமுகம் காப்பு.
 


இவர்கள் அனைவருமே குஜராத் சோம்நாத்தில் விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்பட்டிருந்த விநாயர்கள் :)

திங்கள், 10 டிசம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் ஆனை முகத்தோய் போற்றி.

ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் ஆனை முகத்தோய் போற்றி.

ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் ஆனை முகத்தோய் போற்றி.ஆதிசங்கரர் இயற்றிய சுப்ரமண்ய புஜங்கத்தில் உள்ள விநாயகர் காப்பு தமிழில் :-


சதாபாலன் ஆனாலும் வினைவெற்பு டைப்பான்
பெருயானை ஆனாலும் சிவசிங்கச் செல்வன்
சதாநான் முகன் இந்திரன் தேடுசோதிக்
கதிர்மா கணேசக் கரிஎன்னுள் வாழி.


உறவினர் ஒருவரின் வீட்டில் கணபதி பப்பா மோரியா. தலைப்பாகையுடன். :)

தலைப்பாகையுடன் கணபதி கம்பீரமாக :)

வெள்ளி, 7 டிசம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் அணுவிற்கணுவாய் போற்றி,

ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் அணுவிற்கணுவாய் போற்றி,

ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் அணுவிற்கணுவாய் போற்றி,

ஆதிசங்கரர் அருளிய கணேச புஜங்கம். ( தமிழில் )  ( நன்றி குமுதம் பக்தி ஸ்பெஷல் )

9. எங்கெனும் நிறைந்தவர் ஈசனின் மகனிவர்
பொங்கிய கருணையர் புகழ்விழை விதனையே
மங்களக் கதிரொளி பரவிடு காலையில்
மனமொழி மெய்களால் துதிப்பவர் எவர்க்கும்
பொங்கிடும் புனலென வாக்கது வாய்க்கும்
புரிந்திடும் வினைவலம் பொலிந்திடும் உண்மை
தங்கியே அருள்தரக் கணபதி இருக்கத்
தரணியில் பெறமுடியா தெனவெதும் உண்டோ. ! 


அம்மா மன்னார்குடி சென்றிருந்தபோது எடுத்த விநாயகர் இவர்.
வெள்ளிக் கவசத்தில் விநாயகர்.

வியாழன், 6 டிசம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் அகர முதல்வா போற்றி - விகடன் விநாயகர்கள்.

ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் அகர முதல்வா போற்றி - விகடன் விநாயகர்கள்.

ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் அகர முதல்வா போற்றி.

ஆதிசங்கரர் அருளிய கணேச புஜங்கம். ( தமிழில் )  ( நன்றி குமுதம் பக்தி ஸ்பெஷல் )

8. பேரறி வானந்த அமைதியும் உடையவ !
பேசறு அரன்மகன் ஆனஎம் இறைவா !
வீறுகொள் லீலைகள் அளவில புரிபவா !
வேறிலை தானென விளங்கிடும் அரியவ !
நீறென உலகழித் தளித்திடும் கருணையே !
நேர்ந்த இவ்வுலகிதன் ஆணியாம் பெரியவ !
மாறிலா மனதுடன் மதகளிறு உன்றனை
மனமொழி மெய்கொடு வணங்கினேன் ! அருளுக !.


லலித் கலா அகாடமியில் தானே புயல் நிவாரண நிதிக்காக விகடன் நடத்திய எக்ஸிபிஷனில் விநாயகர் பெயிண்டிங்ஸ்

புதன், 5 டிசம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம:

ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம:

ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம:

ஆதிசங்கரர் அருளிய கணேச புஜங்கம். ( தமிழில் )  ( நன்றி குமுதம் பக்தி ஸ்பெஷல் )


7. ஓங்கார வடிவமே தானெனும் தூயவர்
மாறுபா டற்றவர் முக்குணம்
நீங்கிய ஆனந்த வடிவமே தன்னுரு
நேர்ந்து வேறொரு ருவற்றவர் யாவரும்
ஏங்கியே அடைந்திடும் சிறப்பிடம் இதுவென
எண்ணிலா வேதமும் தோற்றிய காரணர்
பாங்குடன் தொன்மையும் திறமையும் கொண்டவர்
பண்பாளர் போற்றிடும் அவரையே துதிக்கின்றேன்.


இவர் எங்கள் அம்மாவீட்டின் வளவு முகப்பில் இருக்கும் விநாயகர்.
 இவர் எங்கள் ஆயாவீட்டின் வளவு முகப்பில் இருப்பவர்.

செவ்வாய், 4 டிசம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஸித்திவிநாயகாய நம: |

ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஸித்திவிநாயகாய நம: |

ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஸித்திவிநாயகாய நம: |


ஆதிசங்கரர் அருளிய கணேச புஜங்கம். ( தமிழில் )  ( நன்றி குமுதம் பக்தி ஸ்பெஷல் )

6. பலமுறை துடிதுடித் தசைவுறும் கண்ணினை
வலமுற சிவந்திடும் வடிவழ குடையவர்
நலமுறு தயைமுதல் மென்மையும் பெருங்குணம்
இலகிய பலவிதப் பிறவிகள் உடையவர்
உறவென அறமென உரியபல் லீலைகள்
புரிபவர் யோகியர் துதிசெய்யும் கணபதி
ஓமெனும் ஓங்காரத் துட்பொருள் ஆனவர்
ஏமமாம் சிவகணத் தலைவரைத்  துதிக்கின்றேன்


சென்னை வீட்டில் இருக்கும் விநாயகர் ஒரு பொங்கல் தினத்தில் கரும்புடன்.

இவர் மலேஷியாவில் செண்டுலில் இருக்கும் விநாயகர் ( SENTUL) -- கோவில் கோபுரத்தில்.

திங்கள், 3 டிசம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம், ஸ்கந்தபூர்வஜாய நம.

ஸ்ரீ மஹா கணபதிம், ஸ்கந்தபூர்வஜாய நம.

ஸ்ரீ மஹா கணபதிம், ஸ்கந்தபூர்வஜாய நம.

ஆதிசங்கரர் அருளிய கணேச புஜங்கம். ( தமிழில் )  ( நன்றி குமுதம் பக்தி ஸ்பெஷல் )

5. உயர்வுறத் தூக்கிய கொடியெனத் திகழ்வுறு
ஒளிர்துதிக் கையதன் ஆதியின் இலகுறும்
அயர்வறு புருவ அசைவினில் அழகிய
மகிர்வருள் இணைவிழி மல்கிய பெருமையர்
துயரறு தேவதித் தோகையர் சாமரம்
துணைகொடு வழிபடும் தூயநற் கணபதி
அரனது கணநிரை அதனது தலைமையர்
அருமையர் அரன்மகன் அவரையே துதிக்கின்றேன்

காட்ரெஜ் பீரோ கணபதி. 


வால் ஹேங்கிங்கில்.

பரிகாரக் கோலங்கள்

பரிகாரக் கோலங்கள்