எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

தேவகோட்டை, கோட்டையம்மன், பிள்ளையார் , சிவன் கோயில்கள்.

தேவகோட்டை கோட்டை அம்மன் கோயில் திருவிழாவுக்குச் சென்று வந்தோம் இந்த வருடம். கொரோனாவின் காரணத்தால் கூட்டம் இல்லாமல் அமைதியாக வரிசையில் சென்று தரிசித்தோம். மாலை நேரம் நான்கு மணி இருக்கும். 

தேவகோட்டையின் முக்கிய தெய்வங்களில் ஒன்று கோட்டை அம்மன். இத்திருவிழாவிற்காக விரதம் எல்லாம் இருந்து வந்து வணங்குவார்கள் மக்கள். 

இந்தக் கோயில் 130 நகரத்தார் புள்ளிகளுக்குச் சொந்தமானது. 16 ஆண்டுக்கு ஒரு முறை அறங்காவலர் குழு நியமிக்கப்படுகிறது. மேலும் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் 15 நாட்கள் வருடத் திருவிழா நடக்கிறது. ஒரு தளம்/மேடைதான் அம்மன். அம்மேடையில் பூரண கும்பம் வைத்துத் திருவிழாவின் போது அம்மனை அலங்கரிக்கிறார்கள்.

வைஷ்ணோ தேவியில் மூன்று பிண்டிகள் (  பிடி மண் போல சமைந்த 3 உருவங்கள் ) தேவியாக வணங்கப்படுகிறாள். காரைக்குடி முத்தாளம்மன் கோவிலிலும் மேடையே அம்மன் அருவமாக உறையும் இடம் . திருவிழாவின் போதுதான் அம்மன் உருவம் எடுக்கிறாள். 


இந்த அம்மனுக்கு பூஜை மட்டும் செய்வார்கள். ஆனால் முன்னே இருக்கும் பலி பீடத்துக்குத் தினமும் எல்லாத் திரவியமும் கொண்டு அபிஷேகம் உண்டு. அபிஷேகத்தின்போது  300, 400 லிட்டர் பால் உபயோகப்படுத்தப்படுமாம் ! 

திங்கள், 10 ஜனவரி, 2022

ஸ்ரீ மஹா கணபதிம். இன்ப ஜோதியே கணபதியே.

ஸ்ரீ மஹா கணபதிம். இன்ப ஜோதியே கணபதியே.

 ஸ்ரீ மஹா கணபதிம். இன்ப ஜோதியே கணபதியே.

ஸ்ரீ மஹா கணபதிம். 

இவர்கள் குன்றக்குடி கணபதிகள். பிரகாரத் தூணில் மூஷிக வாகனர். 

ஸ்ரீ மஹா கணபதிம். இன்னல் நீக்கும் கணபதியே .

ஸ்ரீ மஹா கணபதிம். இன்னல் நீக்கும் கணபதியே . 

இந்த கணபதிகள் எல்லாம் தேவகோட்டை கணபதிகள். 

தேவகோட்டை சிவன் கோவில் எதிரில் இருக்கும் கணபதி இவர். 

மேளதாளத்தோடு சித்தி புத்தி சூழ கூட்டத்தோடு இருக்கும் இவர் கொள்ளை அழகு. 


பரிகாரக் கோலங்கள்

பரிகாரக் கோலங்கள்