எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 30 நவம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம், ஹேரம்பாய நம

ஸ்ரீ மஹா கணபதிம், ஹேரம்பாய நம

ஸ்ரீ மஹா கணபதிம், ஹேரம்பாய நம

ஆதிசங்கரர் அருளிய கணேச புஜங்கம். ( தமிழில் )  ( நன்றி குமுதம் பக்தி ஸ்பெஷல் )

பலபல ஒளிபெறு மணிநிறை புனைவுறு
வளமுடை மகுடமும் வளமுடன் அணிபவர்
நலமுடை மௌலியில் மதியதன் கலையினை
அழகென அணியென அழகினுக் கழகெனத்
துலங்கியே பிறவித் தொடர்பினை அழித்திட
விளங்கிய காரண விளைவென வானவர்
அரனது கணநிரை அதனது தலைமையர்
அருமையர் அரன்மகன் அவரையே துதிக்கின்றேன்.


பெங்களூருவில் டூவீலரில் பின் சீட்டில் அமர்ந்து போகும்போது ரோட்டில் இருந்த ஹோர்டிங்க்ஸில் விநாயகரை ஒரு அவசர க்ளிக். :)

பெங்களூரு ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி கோயிலில்.

வியாழன், 29 நவம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம், சூர்ப்பகர்ணாய நம

ஸ்ரீ மஹா கணபதிம், சூர்ப்பகர்ணாய நம

ஸ்ரீ மஹா கணபதிம், சூர்ப்பகர்ணாய நம

ஆதிசங்கரர் அருளிய கணேச புஜங்கம். ( தமிழில் )  ( நன்றி குமுதம் பக்தி ஸ்பெஷல் )

3. இளங்கதிர் செம்மலர் இணைவுறு செம்மணி
துலங்கிய பூந்தளிர் அனையநல் ஒளியினர்
விளங்கிய ஒருதனி தானெனத் தனித்தவர்
இலங்கிடு  பெருவயி றொருபுடை சாய்ந்துபின்
வரம்தரத் தொங்கிட வளை துதிக்கையொடு
திறம்பெறு ஒருகோ டுடையவர் கணபதி
அரனது கணநிரை அதனது தலைமையர்
அருமையர் அரன்மகன் அவரையே துதிக்கின்றேன். 

ஹைதை சில்பாராமம்.
அங்கே இருந்த ஓவியக் கடை.

புதன், 28 நவம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம், வக்ரதுண்டாய நம.

ஸ்ரீ மஹா கணபதிம், வக்ரதுண்டாய நம.

ஸ்ரீ மஹா கணபதிம், வக்ரதுண்டாய நம.

சென்னையில் மாங்காடு திருவேற்காடு செல்ல எடுத்த கால் டாக்ஸியில் ஒரு அழகு விநாயகர்.

ஆதிசங்கரர் அருளிய கனேச புஜங்கம். ( தமிழில் )  ( நன்றி குமுதம் பக்தி ஸ்பெஷல் )

2. ஒலியில் வலிபெறும்  தெளிவுறு வீணையின்
ஒலியினை ஒடுக்கிய மலர்முகம் உடையவர்
நவமுடன் சிறிதசை துதிக்கையின் நுனியில்
உளநிறை மாதுளங் கனியினை உடையவர்
புழை செவி  வழிகிற மதமழை நறுமணம்
புணர்மகிழ் வண்டினப் பெருந்தொகை உடையவர்
அரனது கணநிரை அதனது தலைமையர்
அருமையர் அரன்மகன் அவரையே துதிக்கின்றேன்.



பள்ளிக்கூடத்தில் தம்பி மகன் காசி விஸ்வநாதன். மாறுவேடப்போட்டியில் விநாயகராக.

செவ்வாய், 27 நவம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம், கஜானனாய நம

ஸ்ரீ மஹா கணபதிம், கஜானனாய நம

2014 , ஜனவரி, 19. அகநாழிகையின் புதுப்புனலில் இருந்த விநாயகர். :) என் அன்னபட்சி வெளியீட்டின்போது இருந்தவர். :)

ஆதிசங்கரர் அருளிய கணேச புஜங்கம். ( தமிழில் )  ( நன்றி குமுதம் பக்தி ஸ்பெஷல் )

1. கணகணவென ஒலிசெய் மணி இசையினில்
கவினுறு கற்பகக் கணபதி களிப்பவர்
மனநிறை மதகரி இருசெவி முறமென
மகிழ்வுறு தாண்டவம் ஏற்புற நடிப்பவர்
பெருவயி றதனிடை அரவினை  அணியென
பெருமையில் உரிமையில் அருமையா யணிபவர்
அரனது கணநிரை அதனது தலைமையர்
அருமையர் அரன்மகன் அவரையே துதிக்கின்றேன்.

தி நகர் முப்பாரப்பன் தெரு ஆட்டோ ஸ்டாண்ட் விநாயகர்.

திங்கள், 26 நவம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம், பாலச்சந்த்ராய நம.

ஸ்ரீ மஹா கணபதிம், பாலச்சந்த்ராய நம.

ஸ்ரீ மஹா கணபதிம், பாலச்சந்த்ராய நம.

இனி வரும் விநாயகர்கள் எல்லாம் பெங்களூரு ராஜேஸ்வரி கோயிலுக்குச் சென்றுவிட்டு வரும்வழியில் இருந்த விநாயகர்கள்.

வெள்ளி, 23 நவம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம், கணாத்யக்ஷாய நம.

ஸ்ரீ மஹா கணபதிம், கணாத்யக்ஷாய நம.

ஸ்ரீ மஹா கணபதிம், கணாத்யக்ஷாய நம.

முதன் முதலில் காரைக்குடியில் கட்டிய பூசை வீட்டில் திருப்புகழ் பாராயணம் நடந்தது. அப்போது பிள்ளையாரும் முருகனும் வைத்து வழிபட்டோம்.

முதலில் பிள்ளையார் பூஜை தனியாக.

வியாழன், 22 நவம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம், தூமகேதவே நம.

ஸ்ரீ மஹா கணபதிம், தூமகேதவே நம.

ஸ்ரீ மஹா கணபதிம், தூமகேதவே நம.

இதில் வருபவர்கள் எல்லாருமே பழனி மலை விநாயகர்கள்தான்.

புதன், 21 நவம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம், விநாயகாய நம,

ஸ்ரீ மஹா கணபதிம், விநாயகாய நம,

ஜெய்கணேஷ ஜெய்கணேஷ ஜெய்ஜணேஷ தேவா
ஜெய் கணேஷ ஜெய்கணேஷ ஜெய்கணேஷ் தேவா

மாதா ஜாகி பார்வதி பிதா மஹாதேவா
லட்டுவோங்கே பூஜ் லகே துவே கர் சேவா

 ஸ்ரீ மஹா கணபதிம், விநாயகாய நம

 துபாய் சென்றிருந்த போது என் தம்பி இருந்த காம்ப்ளெக்ஸில் ஒரு வீட்டின் முன் உள்ள விநாயகர்.
பூஜையறை விநாயகர்.

செவ்வாய், 20 நவம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம், விக்நராஜாய நம

ஸ்ரீ மஹா கணபதிம், விக்நராஜாய நம


”விநாயகனே வினை தீர்ப்பவனே.
வேழமுகத்தோனே. ஞான முதல்வனே.

குணா நிதியே குருவே சரணம்
குறைகள் தீர்க்க இதுவே தருணம். 

முதலில் ஒரு கோல விநாயகர்.

அடுத்து பழனிமலை அடிவாரத்தில் உள்ள விநாயகர் கோயில்

திங்கள், 19 நவம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம், விகடாய நம.

ஸ்ரீ மஹா கணபதிம், விகடாய நம.

குள்ளக்குள்ளனே
குண்டவயிரனே
வெள்ளைப் பிள்ளையாரே
விநாயக மூர்த்தியே
கருத்தப் பிள்ளையாரே
கருவிநாயக மூர்த்தியே
செவத்தப் பிள்ளையாரே
சிங்கார மூர்த்தியே.

பெங்களூரு விவி புரத்திலும் டின் ஃபாக்டரியிலும்  கே ஆர் புரத்திலும் உள்ள விநாயகர்கள் இனி அணிவகுக்கிறார்கள். முதலில் ஆஞ்சநேயருடன் விநாயகர். :)

வெள்ளி, 16 நவம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம் . லம்போதராய நம

ஸ்ரீ மஹா கணபதிம் . லம்போதராய நம

பிள்ளையார் பிள்ளையார்
பெருமை வாய்ந்த பிள்ளையார்
அரசமரத்தின் அடியிலே
அமர்ந்திருக்கும் பிள்ளையார்.

லால்பாக் மலர்க் கண்காட்சியில் பரங்கிக்காயில் செதுக்கப்பட்ட விநாயகர். :)

உறவினர் வீட்டில் இருந்த ந்யூஸ் பேப்பர்  விநாயகர்.

வியாழன், 15 நவம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம், கஜகர்ணகாய நம

ஸ்ரீ மஹா கணபதிம், கஜகர்ணகாய நம

தாரமர் கொன்றையும் சண்பக
   மாலையும் சாத்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமைமைந்த
   னேஉல(கு) ஏழும்பெற்ற
சீரபி ராமி அந் தாதிஎப்
   போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதி
   யேநிற்கக் கட்டுரையே.

-- அபிராமி அந்தாதி.  

ஒரு திருமண அழைப்பிதழில் இருந்த விநாயகர் இவர்
இவர் ஒரு செய்தித்தாள் விளம்பரத்தில் இருந்தவர்.

புதன், 14 நவம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம், கபிலாய நம:

ஸ்ரீ மஹா கணபதிம், கபிலாய நம:

கைத்தல நிறைகனி அப்பமோ டவல்பொரி
கப்பிய கரிமுகன் அடிபேணிக்
கற்றிடும டியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்தெடு மரன்மகன்
மற்பொரு திரள்புய மதயனை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிள் மலர்கொடு பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முப்புரம் எரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை இபமாகி
அக்குற மகளுட னச்சிரு முருகனை
அக்கண மணமருள் பெருமாளே.

இந்தப் பிள்ளையார் வீட்டில் இருக்கும் பிள்ளையார்தான்.
இவர் பெங்களூரு பிடிஎம் லே அவுட்டில் உள்ள ப்ரிஸம் மேனரின் கேட்டில் உள்ள க்ரானைட் விநாயகர்.

செவ்வாய், 13 நவம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம்,. ஏகதந்தாய நம:

ஸ்ரீ மஹா கணபதிம்,. ஏகதந்தாய நம:

உம்பர்தருத் தேனுமணிக் கசிவாகி
ஒண் கடலிற் றேனமுதத் துணிர்வூறி
இன்பரசத் தேபருகிப் பலகாலும்
என்றன்னுயிர்க் காதரவுற் றருள்வாயே
தம்பிதனக் காகவனாத் தனை வோனே
தந்தைவலத் தாலருள்கைக் கனியோனே
அன்பர்தமக் கானநிலைப் பொருளோனே
ஐந்து கரத்தானை முகப் பெருமானே

--- திருப்புகழ்.

வீட்டில் இருக்கும் கண்ணாடி விநாயகர்.

இது கும்பகோணம் ஸ்டெர்லிங் ரெஸார்ட்டில் இருக்கும் விநாயகர்.

திங்கள், 12 நவம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம். ஸுமுகாய நமஹ.

 ஸ்ரீ மஹா கணபதிம். ஸுமுகாய நமஹ.

ஓத வினை அகலும்; ஓங்கு புகழ் பெருகும்
காதற் பொருள் அனைத்தும் கைகூடும் - சீதப்
பனிக் கோட்டு மால்வரை மேல் பாரதப்போர் தீட்டும்
தனிக் கோட்டு வாரணத்தின் தாள்!

காரைக்குடி முனியையா கோயிலில் தூணில் உள்ள விநாயகர்.

முனியையாவாக வழிபடப்படும் விநாயகர்.

வெள்ளி, 9 நவம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம்.விக்ன விநாயக பாத நமஸ்தே.

ஸ்ரீ மஹா கணபதிம்.விக்ன விநாயக பாத நமஸ்தே.

அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றிற்பிறந்த
தொல்லை போம் போகாத் துயரம் போம்
நல்ல குணம திகமா மருணைக் கோபுரத்துள் மேவு 

செல்வ கணபதியைக் கைதொழுதக்கால். 



இவர் காரைக்குடி மெய்யப்பன் அம்பலம் தெருவில் பாலத்தின் மேல் வீற்றிருக்கும் ஸ்ரீ யோக விநாயகர்.

சாமி வீட்டில் உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்.

வியாழன், 8 நவம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம். மஹேஸ்வர புத்ர.

ஸ்ரீ மஹா கணபதிம். மஹேஸ்வர புத்ர.

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் 
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் 
ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக் 
காதலால் கூப்புவர் தம்கை                                      

--- 11ஆம் திருமுறை


 இங்கே இனி வரப்போகிறவர்கள் எல்லாம் கோவளம் பீச் கடையிலும் திருவனந்தபுரத்திலும் கண்டு களித்த விநாயகர்கள்.

புதன், 7 நவம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம். வாமன ரூப.

ஸ்ரீ மஹா கணபதிம். வாமன ரூப.

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்:
விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணில் பணிமின் கனிந்து                                  

-- 11ஆம் திருமுறை 

வீட்டில் இருக்கும் காலண்டர் விநாயகர்.
இது புது வீட்டில் பால் காய்ச்சும் போது எடுத்த விநாயகர்கள்.

செவ்வாய், 6 நவம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம். விலம்பித ஸூத்ர.

ஸ்ரீ மஹா கணபதிம். விலம்பித ஸூத்ர.

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் கரி முகத்துத் தூமணியே  நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.                                           

-- ஒளவையார்

செல்ஃபோனில் ஸ்க்ரீன் சேவராகப்  பிள்ளையார்

இது கோவையில் ஒரு திருமண ஹாலில் எடுத்தது.

திங்கள், 5 நவம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம் . ஸாமர கர்ண.

 ஸ்ரீ மஹா கணபதிம் . ஸாமர கர்ண.

வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்              
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது -  பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

----  ஒளவையார்


சென்ற விஜயதசமியன்று பிள்ளையார்பட்டியிலிருந்து காரைக்குடிக்கு வாடகைக் காரில் சென்றபோது  எடுத்தது.

வெள்ளி, 2 நவம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம். மோதக ஹஸ்த..

ஸ்ரீ மஹா கணபதிம். மோதக ஹஸ்த..

ஐந்து கரத்தனை ஆனைமுகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே
.  
                        

---- திருமூலர்

கும்பகோணம் பள்ளிக் குழந்தைகள் நினைவாக நிறுவப்பட்டுள்ள பூங்காவில் ஒரு கரத்தால் புல்லாங்குழல் இசைத்தபடியும்   இன்னொரு கரத்தால் மோதகத்தைக் கொடுத்தபடியும் இருக்கும் பிள்ளையார்  மடியில் ஒரு  குழந்தையை வைத்து இருக்கும் படம் வரையப்பட்டுள்ளது.

இது மீனாக்ஷி மதன் தன்னுடைய ஹ்யூஸ் ஆஃப் ஹார்ட் ( HUES OF HEART ) ஸ்டூடியோவில் நடத்தின ஒரு பரிசளிப்பு விழாவின் போது எடுத்தது.

வியாழன், 1 நவம்பர், 2018

ஸ்ரீ மஹா கணபதிம் .. மூஷிக வாகன.

 

ஸ்ரீ மஹா கணபதிம் .. மூஷிக வாகன.

விநாயகர் சதுர்த்தி இன்று. என்னுடைய கலெக்‌ஷனில் இருந்து சில விநாயகர்களை இங்கே  தொடர்ந்து போடலாம் என்றிருக்கிறேன்.

எனக்கு வேண்டும் வரங்களை
         இசைப்பேன் கேளாய் கணபதி!
மனத்திற் சலன மில்லாமல்,
        மதியில் இருளே தோன்றாமல்,

நினைக்கும் பொழுது நின் மவுன
        நிலைவந் திடநீ செயல் வேண்டும்,
கனக்குஞ் செல்வம் நூறு வயது;
       இவையும் தரநீ கடவாயே

-- பாரதியார். 

முதலில் அன்னபூரணி நாராயணன் வீட்டில் எடுத்த விநாயகர். இவர் மூஷிக வாகனன். நிறைய மூஷிகங்களின் மேல் கண்ணன் காளிங்க நர்த்தனம் ஆடியது போல நிற்பவர்.. வித்யாசமாக இருந்ததால் எடுத்துக் கொண்டேன். 
இன்னும் இன்னும் படிமேல் விநாயகர்கள் . 

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.