எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
திருப்பத்தூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருப்பத்தூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 3 டிசம்பர், 2020

திருப்பத்தூர் திருத்தளிநாதர் ஸ்ரீயோகபைரவர் திருக்கோவில்.

திருப்பத்தூர் திருத்தளிநாதர் ஸ்ரீயோகபைரவர் திருக்கோவில்.

காரைக்குடியில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருப்பத்தூர். அங்கே திருத்தளிநாதர் கோவிலுக்குச் சென்றோம் ஒரு ஞாயிறு காலையில் .மிக தேஜஸோடு ஜொலித்த அக்கோயிலைப்பற்றிய புகைப்படங்களும் விபரங்களும் பகிர்ந்துள்ளேன்.

ஈசன்  திருத்தளிநாதர் . அம்பாள் சிவகாமி அம்மை. யோக பைரவர் எனப்படும் ஆதி பைரவர் வழிபாடு இங்கே விசேஷம். இறைவனை மகாலெக்ஷ்மி வணங்கியதால் திருத்தளி நாதர் எனப்படுகிறார். வால்மீகி இங்கே தவமிருந்து அவரை புற்று மூடியதால் இந்த ஊர் திருப் புத்தூர் எனலாயிற்று. மேலும் ஈசன் கௌரிதாண்டவம் ஆடிய திருத்தலம்.

அப்பனுக்கும் அம்மைக்கும் ஸ்கந்தருக்கும் பைரவருக்கும் வன்னிமர விநாயகருக்கும், திருநாகேஸ்வரருக்கும் தனித்தனிச் சந்நிதிகள்.  ஸ்தலவிருட்சம் கொன்றை, தீர்த்தம் ஸ்ரீ தளி தீர்த்தம். அகத்தியர் வணங்கிய அகத்திய லிங்கம் இருப்பதும் சிறப்பு
வெளியே பார்க்க சிறியதாகத் தெரிந்தாலும் உள்ளே முன் மண்டபம், அர்த்தமண்டபம், கருவறை ஆகியன கொண்ட பெருங்கோவில் இது.

யூ ட்யூபில் 3991 - 4000 வீடியோக்கள். அருளுடைமை. தினம் ஒரு திருக்குறள்.

யூ ட்யூபில் 3991 - 4000 வீடியோக்கள். அருளுடைமை. தினம் ஒரு திருக்குறள். 3991.தினம் ஒரு திருக்குறள் - 241 l திருவள்ளுவர் l  அருளுடைமை  l    தே...