எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 4 மே, 2021

தஞ்சைப் பெரிய கோவில்.

தஞ்சைப் பெரிய கோவில்.

 தஞ்சைப் பெருவுடையார் கோவில் பற்றிப் பல்வேறு இடுகைகளில் குறிப்பிட்டுள்ளேன். இன்னும் கொஞ்சம் படங்களையும் அவை பற்றின தகவல்களையும் தருகிறேன். 



மாமன்னர் ராஜ ராஜன் சிலையேதான் !
கோவில் முன்புறக் கோபுரம். 
அகழி/மதில்.

கண்ணையும் கருத்தையும் கவரும் சிற்பத் தொகுதிகள் துவார பாலகரின் கீழ்ப் பத்தியில்




உக்கிர தேவதைகள்,உக்கிரக் காவல் தெய்வங்கள் கோலோச்சும் முன் வாயிற் கோபுரம்.

விநாயகர். 
அகழியில் நீர் இல்லை. ஆனாலும் புற்கள், புதர்கள் நிரம்பி மிரட்டலாய்த்தான் இருக்கு. 

காலணிக் காப்பகத்தில்விட்டு விட்டு வந்தபின் கோவிலின் உள்ளே நுழைந்தோம். 


தஞ்சைக் கோவிலின் பெருமை மிகு நந்தி. 

மிகப் பிரம்மாண்டமாகக் காட்சி அளித்தது. நான் எடுத்த மிக நல்ல ஃபோட்டோ ஒன்றும் இப்போது டைப் செய்யும் போது அழிந்து விட்டது. அதென்னவோ தெரியவில்லை லாப்டாப்பில் த, த், து இதெல்லாம் டைப் செய்யும் போது கர்சர் வேறெங்கோ போய் அவற்றைப் பிரசவிக்கிறது. அல்லது இருக்கும் படத்தை அழிக்கிறது.கஷ்டகாலமப்பா. எனக்கும் என் செல்ஃபோனுக்கும் லாப்டாப்புக்கும் வயசாகிவிட்டது. :) 



மேலே விதானமும் ஓவியக் காட்சிகளால் கவினுற அமைக்கப்பட்டிருந்தது. 

செம்புத் துவஜஸ்தம்பத்தில் விநாயகர். 




ஃபோட்டோக்கள் முன் பின்னாக அப்லோட் வேறு ஆகியுள்ளன. 

கோவிலுக்குள்ளே கோவில்களாக கருவூரார் சந்நிதி, சனீஸ்வரன் சந்நிதி, விநாயகர் சந்நிதி, முருகன்,நடராசர், வாராஹி அம்மன், பெரிய நாயகி அம்மன் ஆகியோருக்கு தனித்தனிச் சந்நிதிகள் கட்டப்பட்டுள்ளன.

பத்து நூற்றாண்டுகளுக்கும் மேலாகச் சோழனின் கட்டிடக்கலையை எடுத்தியம்பும் இந்தக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் நிறைவு கண்டதும் ஆயிரம் ரூபாய் நோட்டில் அச்சாகி உள்ளது. தபால் தலையாகவும் பொறிக்கப்பட்டுள்ளது. 
தஞ்சைப் பெருவுடையார் கோவில் பற்றி நான் எழுதிய இந்த இரண்டு இடுகைகளையுமே பாருங்க. ஜகதிப்படை, மெய்கீர்த்தி, பாந்து, உலகப் பாரம்பரியச் சின்னம், இடைச்சி கல், வளரும் நந்தி, கல்வெட்டுக்கள், இறையிலி நிலங்கள், இயற்கைச் சாளரங்கள், சதயத்திருவிழா பற்றிய  விவரமும் கிடைக்கும். 


நவக்ரஹக் கோலங்கள்.

 நவக்ரஹக் கோலங்கள்.