கொத்தரி சோலை ஆண்டவர் கோவில்.
பள்ளத்தூர் அருகே கொத்தரியில் புரவிகள் வரிசை கட்டி நிற்கின்றன. பார்த்தவுடனே அதிர்கிறது இதயம். அடர்ந்த விருட்சங்களிடையே ஆற்றலான புரவிகளின் ஆனந்த ஆர்ப்பரிப்பு. நேர்த்திக்கடனுக்காக மக்கள் செலுத்திய புரவிகளே இவை. ( நரியங்குடி கருங்குளம் போன்ற சில கோயில்களில் புரவி எடுப்பு என்ற திருவிழா நடைபெறும். )
அதிர்வுகள் அதிகம் உள்ள புண்ணியஸ்தலம் இது. புகைப்படம் எடுக்கலாமோ கூடாதோவென யோசனையோடு எடுத்த படங்கள் இங்கே.
காரைக்குடியில் இருந்து பதினோரு கிமீ தொலைவில் உள்ளது கொத்தரி. இந்தக் கோயிலில் வணங்க சில விதிமுறைகள் உள்ளன. சந்நிதிக்கு நேரே வந்து ஆண்களும் முழுக்கு நின்ற பெண்களுமே வணங்கலாம். மற்ற இளம்பெண்கள் பக்கவாட்டில் வந்து நின்று பிரசாதங்கள் பெற்றுக் கொள்ளலாம். வருவது என்றாலும் சந்நிதியின் நேரே வரக்கூடாது பக்கவாட்டிலேயே வந்து தரிசிக்க வேண்டும்.