எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

திருப்புகழைப் பாடப் பாட..

திருப்புகழைப் பாடப் பாட..

சில மாதங்களுக்கு முன்பு இல்லத்தில் திருப்புகழ் பாராயணம் நடைபெற்றது.

முருகப் பெருமானின் மேல் அருணகிரிநாதர் பக்தி கெழுமப் பாடிய இசைப்பாடல்கள் அடங்கியது திருப்புகழ். இதன் ஒவ்வொரு பாடலும் சொல்லும் பொருளும் சந்தநயமும் கொண்டு நம் மனதைக் கொள்ளை கொள்பவை.

அருணகிரி நாதர் பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த முருகனடியார். இவர் அருளிய பத்தாயிரம் பாடல்களில் 1307 பாடல்களே கிடைத்துள்ளன. அதில்  இருந்து ”திருப்புகழ் 108 மணிமாலை” என்று நூற்று எட்டுப் பாடல்கள் மட்டும் ”திருமுருகன் திருப்புகழ் பாராயணக் குழுவினரால் “தொகுக்கப்பட்டு பக்தர்களால்  பாடப்பட்டு வருகிறது.

மண்ணுலகில் மனிதமனங்களில் இருக்கும் ஆலகால விஷத்தைத் தான் எடுத்துக் கொண்டு மனிதர்கள் நன்னெறியுடன் வாழப் பக்தி நெறியைக் குழைத்துத் திருப்புகழ் என்னும் அமிர்தத்தை அளித்தாராம் அருணகிரிநாதர்.

திருவண்ணாமலைக் கோபுரத்தில் ஏறி வாழ்வை வெறுத்துத் தன்னை மாய்க்கத் துணிந்த இவரைக் கந்தவேள் காப்பாற்றித் தன்னைப் பாடுமாறு பணித்தாராம். ”முத்தைத் தரு பத்தித்திரு நகை” என முருகன் அடி எடுத்துக் கொடுக்க பல சந்தப்பாக்களைப் பாடினாராம்.

இந்தத் திருப்புகழ் அனைத்தையும் ஊர் ஊராகச் சென்று நமக்காகச் சேகரித்தவர் வ. த. சுப்ரமணியப் பிள்ளை என்னும் இறையருள் பெற்றவர்.  இவரது மைந்தர் வ. சு. செங்கல்வராயப் பிள்ளை இவற்றைப் பதிப்பித்தார். இந்தத் திருப்புகழ் அமிர்தம் மந்திரமாகி சேஷாத்ரி சுவாமிகள் மூலமாக வள்ளிமலை சுவாமிகளுக்குச் சென்றதாம். இவரைத் தொடர்ந்து பொதுமக்களுக்கும் திருப்புகழ் அடையச் செய்தவர்கள் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களும், திருப்புகழ் இராகவனும் ஆவார்கள். அவர்கள் பணிக்குச் சிரந்தாழ்ந்த வணக்கங்கள்.

2009 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதன் முதலில் திருப்புகழ் இசை அமைக்கப்பட்டு காரைக்குடி,செக்காலை பொறியாளர் சுப்ரமணியன் அவர்களின் புதல்வர் ஆடிட்டர் மெய்யப்பன் இல்லத்தில் 108 ஏகதின திருப்புகழ் பாடப்பட்டது. இதை துபாயில் இருக்கும் எனது சகோதரன் மற்றும் அவரது நண்பர்கள் இல்லத்திலும் பின்பற்றிப் பாடி வருகிறார்கள்.
அதிகாலையில் பூஜைக்குத் தயாராய்க் கோலங்களும் கடவுள் திருவுருவமும்.
ஆழ்ந்து பாடும் உறவினர்கள்.


விநாயர் துதியோடு துவங்கியது பாராயணம்.

விநாயகர் துதி (இராகம் - நாட்டை; தாளம் - ஆதி)
தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன ...... தனதான
கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் ...... அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் எனவினை ...... கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய ...... மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய ...... முதல்வோனே
முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
அச்சது பொடிசெய்த ...... அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை ...... இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் ...... பெருமாளே.
இறைவனின் அருட்கொடையாய்ப் பாயும் ஒளிவெள்ளம்.
துபாயில் இருக்கும் முருக பக்தர்கள் மாதம் ஒருநாள் ஒருவர் இல்லத்தில் கிருத்திகை அன்று கூடி திருப்புகழ் பாராயணம் செய்கிறார்கள். இந்த இசை நயத்தோடு கூடிய சந்தப் பாடல்களைப் பெரியவர்கள் மட்டுமல்ல. அவர்களின் குழந்தைகளும் சிறப்பாகப் பாடுகிறார்கள். ஆன்மீகப் பாதையில் குழந்தைகளை நேர்ப்படுத்த திருப்புகழ் பெரிதும் உதவுகிறது.

இதில் இருக்கும் சில பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தவை.

"முத்தைத்தரு"

இராகம்: கௌளை
தாளம்: திஸ்ர த்ருபுடை/மிஸ்ரசாபு
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன ..... தனதான

முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ..... எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ..... அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ..... இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ..... ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ..... கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ..... எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ..... முதுகூகை
கொட்புற்றெழ நட்புற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட வொத்துப் பொரவல ..... பெருமாளே.
ஆரோக்கியத்துக்கான திருப்புகழ் மந்திரப் பாடல்

இருமல் உரோகம் முயலகன் வாதம்
எரிகுண நாசி விடமே நீர்
இழிவு விடாத தலைவலி சோகை
எழுகள மாலை இவையோடே

பெருவயிறு ஈளை எரிகுலை சூலை
பெருவலி வேறும் உளநோய்கள்
பிறவிகள் தோறும் எனை நலியாத
படிஉன் தாள்கள் அருள்வாயே

வரும் ஒரு கோடி அசுரர் பதாதி
மடிய அநேக இசைபாடி
வரும் ஒரு கால வயிரவர் ஆட
வடிசுடர் வேலை விடுவோனே

தருநிழல் மீதில் உறைமுகில் ஊர்தி
தரு திரு மாதின் மணவாளா
ஜலமிடை பூவின் நடுவினில் வீறு
தணிமலை மேவு பெருமாளே!


சந்தத்தால் என்னை கவர்ந்த பாடல்.

“உம்பர்தருத் தேநுமணிக் கசிவாகி”

“பக்கரைவி சித்ரமணி பொற்கலனை”

“மன்றலங் கொந்துமிசை தெந்தனந் தெந்தனென”

“கொங்கைகள்கு லுங்கவளை  செங்கையில்வி ளங்கஇருள்”

“ஆதிமுத னாளி லென்றன் தாயுடலிலே யிருந்து “

“முத்துநவ ரத்நமணி பத்திநிறை சத்தியிட “

“அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி அகமாகி”

“சரணகம லாலயத்தை அரைநிமிஷ நேர மட்டில் “

“பொற்ப தத்தி னைத்து தித்து நற்ப தத்தி லுற்ற பத்தர் “

“தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்” 

மலர் கொண்டு பணிய,அருள் பெற,அருள் மறவாமை, அன்பு உற, அறிவால் இன்பம் பெற, ஓவியத்தில் காண,திருவடி பெற, சித்தி பெற, எண்ணியது கைகூட, திருவருள் பெற, இடையூறுகள் , பகை நீங்க, அன்பு பெற, முக்தி பெற, நல்மணம் பெற, திருமணம் விரைவில் நடைபெற, திருவடி பெற,யம பயம் அற, சிவமாம் தன்மை பெற, அன்பு பெறுக,சுவாமி வரவு, பாதமலர் பெற, திருவடி தொழ, இகபர நல்வாழ்வு பெற, திருநாமம் ஓதி அருள் பெற, ஞானம் பெற,சிவபோகம் பெற, திருநடனம் கண், இகலோகத்தில் வீடு பெற, பேரறிவு பெற, அடிமையாம் வாழ்வு பெற, அழகு பெற, வறுமை தீர, சகல யோக வாழ்வு பெற, அடியவர் உள்ளத்தில் இடம் பெற, எண்ணியது கைகூட,திருப்புகழின் சிறப்பு, நோயற்ற வாழ்வு பெற, பிறவாத வரம் பெற, திருவடி தரிசனம் பெற, உபதேசம் பெற, திருமணத் தடை நீங்கித் திருமணம் நடைபெற, குறை தீர, ஞானம் கூட, உடற்பிணி உயிர்ப்பிணி நீங்க, திருவடி உணர்வு பெற, தரிசனம் பெற, உபதேசம் பெற, பிறவி அற, மனக்கவலை தீர, ஐக்கிய நிலை அடைய, பவனி கண்டு மகிழ, வரம் பெற, சகல செல்வங்களும் பெற, காத்தருள, நல்வாழ்வு, சகல செல்வம், சுகம், இகபர சௌபாக்கியம் பெற எனப் பாடல்கள் உள்ளன. குமாரத் தவமும் விளக்கத்துடன் உள்ளது.
முதலில் விநாயகர் துதி.அதன் பின்  திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருப்பழனி, சுவாமிமலை, காஞ்சிபுரம், திருவாவினன்குடி,திருத்தணிகை, குன்றுதோறாடல், திருக்காளத்தி, திருச்செந்தூர், ரத்னகிரி, வள்ளியூர்,திருவலிதாயம்-பாடி, திருக்கயிலாயம், கொங்கணகிரி,கோடைநகர் வல்லக்கோட்டை,கந்தன்குடி, கொட்டையூர், மதுரை, திருப்பந்தணை நல்லூர், பழமுதிர்ச்சோலை, திருவீழிமிழலை, திருச்செங்கோடு, வயலூர், சிறுவாபுரி, திருவான்மியூர், திருவொற்றியூர், திருப்பழனி, ஸ்ரீ சைலம், திருவக்கரை, வள்ளிமலை, திருவண்ணாமலை, சிதம்பரம்,எண்கண், திருவாரூர், கதிர்காமம், திருக்கழுக்குன்றம், ஊதி மலை, திருமயிலை,இலஞ்சி, ஆகிய ஊர்களில் இருக்கும் முருகனை பாடலாகவும் அமைந்துள்ளது.
இல்லத்துக்கு வந்திருந்த ஒரு பெருமாட்டியார் பாடிய பாடல் உங்கள் செவிக்குணவாக இங்கே கொடுத்திருக்கிறேன். 
 
எனது தந்தையாரும் குழுவினரும் பாடிய பாடல்.

 
அதே பெருமாட்டியார் பாடிய இன்னொரு அழகான பாடல். 
 

அருணகிரி நாதரின் முருக இசை வெள்ளத்தில் ஆழ்ந்தோம்.இப்பிறவிப் பயனை அடைந்தோம். ! நாங்கள் அருந்திய திருப்புகழ் அமுதத்தை நீங்களும் அருந்துங்கள். ஓம் சரவணபவ. !

டிஸ்கி:- இலவசமாகப் புத்தகம் & சிடி வேண்டுவோர் பின்னூட்டத்தில் ஈமெயில் ஐடி/அட்ரஸ் தெரிவிக்கவும்.

2 கருத்துகள்:

 1. விஸ்வநாத்21 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 2:23
  Madam, is the book contain only songs or the meaning of the songs also ? If the meaning also is included, I want the book (not CD); Is it possible to send ? (ViswanathVRao@gmail.com)

  பதிலளிநீக்கு

  சுந்தரவடிவேல்21 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 4:00
  மிக நல்ல செய்தி. கௌமாரம் வலைத்தளத்தில் திரு இராகவன் மற்றும் திரு சுவாமிநாதன் பாடிய பாடல்களைக் கொண்டு சில பாடல்களைப் பயின்றேன். இந்தப் பதிவைப் பார்த்த பிறகு உங்கள் குறுந்தகட்டையும் கேட்க வேண்டுமென ஆவல் பிறக்கிறது. இயன்றால் தொடர்பு கொள்ளவும்: sundara அட் ஜிமெய்ல். நன்றி!

  பதிலளிநீக்கு

  நெல்லைத் தமிழன்21 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 4:03
  கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
  கப்பிய கரிமுகன் ...... அடிபேணிக்
  கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
  கற்பகம் எனவினை ...... கடிதேகும் - இந்த வரிகள் திருமுருக கிருபானந்தவாரியாரை நினைவுகூற வைத்துவிட்டது.

  முத்தைத்தரு பத்தித் திருநகை
  அத்திக்கிறை சத்திச் சரவண
  முத்திக்கொரு வித்துக் குருபர - டி.எம்.எஸ் அவர்களை நினைவுகூற வைத்துவிட்டது.

  பதிலளிநீக்கு

  வெங்கட் நாகராஜ்21 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:20
  திருப்புகழ் - தலைநகர் தில்லியிலும் திருப்புகழ் சபா ஒன்று உண்டு. அவர்களும் இது போல வீடுகளில்/கோவில்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் திருப்புகழ் படிப்பதுண்டு/பாடுவதுண்டு.

  பதிலளிநீக்கு

  Anuprem22 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 10:15
  அருமையான நிகழ்வுகள்....

  பதிலளிநீக்கு
 2. Mey23 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 11:46
  Very nice Blog on Thiruppugazh Thenu. Thiruppugazh is a sacred text. It is full of divine and powerful words that goes by a remarkably composed text. It is full of wonders that is beyond the abilities of a highly learned scholar. Just poetic, literary and grammatical command in the language is not enough for one to compose such a divine text. It can be possible only by the divine help. Lord Muruga who gave us Tamil wrote OM in the toungue of Arunagirinathar after which only he sang the first song Muthai Tharu. Then he was in meditation for 12 years. Then he went to places and sang around 13 to 16 thousand songs. Some of the very few of the many wonders one can find in Thiruppugazh is the extreme orderlyness in meter. Every letter in Tamil has a duration of pronunciation called Mathirai. The count of Mathirai and seer (syllables) follow the rule. Then they follow the nadai of the song through out which can be seen in features like ethukai and monai (first letter of every word or every line belong to same cluster or family of alphabets forms monai and second letters form ethukai) which are commonly seen in ordinary poems. But in Thiruppugazh you could see splendid combinations of vallinam, mellinam and idaiyinam coming in the same pattern through out in every line and stanza. Hence any spelling errors or typos can be easily identified without any doubt. The number of letters in each line of any THiruppugazh will be same for the remaining lines as well. For example in Kaithalanirakani, every line has 25 alphabets (consonants are not counted). Beyond these few known wonders and many unknown wonders, they have the meaning that are sacred and divine as that of Vedas. They expound or lament the difficulties of sinful human life and at the same time explain the glories of Lord that helps one get delivered from them. Thiruppugazh is the only text that is singly enough to appease all the gods as every deity is within Lord Muruga The Supreme and every Thiruppugazh praises all deities in relation to Lord Muruga. Hence reading Thiruppugazh is as good as reading all the 18 Puranas. Wherever Thiruppugazh is recited Lord Muruga resides there eternally, even if we fail to notice and all other deities also visit such houses as Lord Muruga is there. The vibrations of those words remain there for long. Everyone here where we read only 108 Thiruppugazhs has experienced the divine and many good things have happened in their lives due to the blessings of Lord Muruga.

  To get those effects one need not be a good singer or so. Even reading it like Prose also is enough to get the blessings of Lord Muruga. because the Ragam, Thalam everything is already built into the text by Lord Himself. This is the only text that anyone who is not a professional singer also can sing easily because of this reason as explained by Guruji Raghavan.

  Kind Regards
  MEY

  பதிலளிநீக்கு

  Thenammai Lakshmanan3 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:49
  அனுப்பி வைக்கிறேன் விசு சார்:)

  நன்றி சுந்தரவடிவேல்சார். ஈமெயில் ஐடியை முழுமையாகப் போடுங்கள்.

  நன்றி நெல்லைத் தமிழன்

  நன்றி வெங்கட் சகோ. புதுத்தகவல்.!

  நன்றி அனுராதா ப்ரேம்

  நன்றி மெய்யர்.

  பதிலளிநீக்கு

  Thenammai Lakshmanan3 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:52
  விரிவான அழகான தகவல்களுக்கு நன்றி மெய்யர்.

  பதிலளிநீக்கு

  Thenammai Lakshmanan3 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:56
  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

  karthik15 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 9:14
  Hi bro, thirupukazh la vallinam matum use panni then mellinam mattum then idayinam matum varramathri song irukunu kelvipaten, athu enna song nu sola mudiuma

  பதிலளிநீக்கு

  aumugasivam14 நவம்பர், 2020 ’அன்று’ பிற்பகல் 6:32
  அன்பார்ந்த ஆறுமுகசிவா,
  நான் அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்றவன்.திருப்புகழ் 108 மணிமாலை புத்தகம் நித்ய பாராயணத்திற்கு எனக்கு அனுப்பிட அன்புடன் வேண்டுகிறேன்.
  ஆறுமுகக் கடவுள் துணை நிற்க,

  இப்படிக்கு
  , ஆறுமுகவேல்சிவா
  k.arumugavel@gmail.com

  பதிலளிநீக்கு

பரிகாரக் கோலங்கள்

பரிகாரக் கோலங்கள்