எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 10 செப்டம்பர், 2020

சூரக்குடி தேசிகநாதர் ஆவுடைநாயகியம்மன் திருக்கோயில்.

சூரக்குடி தேசிகநாதர் ஆவுடைநாயகியம்மன் திருக்கோயில்.

காரைக்குடியில் இருந்து கழனிவாசல் வழியாக கானாடுகாத்தான் செல்லும் ஹைவேஸ் சாலையில் இடதுபுறம் அமைந்துள்ளது இக்கோயில். காரைக்குடியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும். பூவாண்டிப்பட்டி என்னும் இடத்தில் அமைந்துள்ளது. கோவில் வாசலுக்கு முன்பே உள்ள  16 கால்  மண்டபம் இங்கே வித்யாசமான ஒன்று.

கிழக்கு பார்த்த ஐந்து நிலைக் கோபுரம். ஒரு நாள் மாலையில் சென்றபோது கோயில் திறந்திருக்காததால் ( இது மட்டும் ஒன்பது நகரத்தார் கோயில் உலாவின்போது தப்பித்துவிட்டது. இதற்குப் பதிலாக நகரச் சிவன் கோயிலுக்குச் சென்று தரிசித்திருந்தோம் ). இன்னொருநாள் காலையில் சென்று தரிசித்தோம்.

ஆரவாரமில்லாத அமைதியான கோயில்கள் அனைத்துமே. ஆறுகாலபூஜையும் நித்யப்படி கட்டளைகளும் குறைவில்லாமல் நடந்துவருகின்றன.
சூரை மரங்கள் நிறைந்திருந்த ஊராதலால் இது சூரைக்குடி என வழங்கப்பட்டிருக்கிறது.

இது சுற்று மதில். இதில் மீனாக்ஷி திருக்கல்யாண சுதைச் சிற்பம் இருக்கிறது.

மிக அழகான பெரிய புஷ்கரணி. இதன் பெயர் பைரவ தீர்த்தம்.  இக்கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது.


ஈசன் தேசிகநாதர், தேவி ஆவுடைநாயகி. ஸ்தலவிருட்சம் மாமரம்.

ஆமாம் தேசிக நாதர் என்ற பெயர் வித்யாசமாக இருக்கிறது அல்லவே.அதற்கு ஒரு காரணம் உண்டு. வெளிநாட்டுக்கு கடல்வாணிபம் செய்யச்சென்ற / கொண்டுவிக்கச்சென்ற நகரத்தார் தேசம் தேசமாகப் போனபோது காத்த ஈசன் என்பதால் இவர் தேசிக நாதர் என வழங்கப்படுகிறார். இறைவி ஆவுடையநாயகி, திருவுடையவள் என்று பொருள்.

எம்மாம் பெரிய பூட்டு  !
இங்கே பைரவர் வழிபாடு விசேஷம்.
இந்த ஈசனை சூரியன் மற்றும் ஒரு அசுரன்  வணங்கியதால் சூரக்குடி எனப் பெயர் வந்ததாம்.

தட்சனின் யாகத்தில் சிவனின் அனுமதி இல்லாமல் சூரியன் முதலானோர் கலந்துகொள்ள அதனால் கோபமுற்ற சிவனின் அம்சமான  வீரபத்திரர் சூரியனை தண்டிக்கிறார். எனவே அதிலிருந்து  சாபவிமோசனம் பெற சூரியன் இத்தலத்து ஈசனை வணங்கியதாகவும் அதனால் சூரியன் குடி என்பது சூரைக்குடி என்று வழங்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.
ஆவுடைநாயகி அம்மனைக் கண்குளிர தரிசித்தேன். பிங்க் நிற வஸ்திரத்தில் தாமரைப்பூவாக விளங்கினாள் இந்தத் திருவுடையம்மை.

உற்சவ பைரவமூர்த்தி. இவர் பெயர் ஆனந்த பைரவர். எனவே இவர் கதாயுதத்துடன் காட்சி தருகிறார்.
இங்கே உள்ள யோக தட்சிணாமூர்த்தி சிம்ம மண்டபத்தில் காட்சி அளிக்கிறார். இவரைச் சுற்றி சனகாதி முனிவர்கள் காட்சி அளிக்கிறார்கள். தட்சிணாமூர்த்தி சிரசில் க்ரீடத்துடன் காட்சி அளிப்பதும் சிறப்பு.
இது திருமுறை சன்னதி !இங்கே திருமுறைகள் வைக்கப்பட்டுள்ளன.

நால்வரும் அறுபத்து மூவரும்.

அழகான  உள் பிரகாரம்.
மஹாலெக்ஷ்மி சன்னதி
 உற்சவ வாகனங்கள். நந்தி. ஜோடி நந்தி !
தூண்கள் அனைத்தும் துணியால் சுற்றப்பட்டுள்ளன. பக்தர்கள்  விபூதி குங்குமம் கொட்டாதிருக்கவே இப்படி என நினைக்கிறேன்.
மயில்வாகனம்.
குதிரை வாகனம்.
இவர் நவக்ரஹ சன்னிதியின் எதிரே உள்ள பைரவர். சிவன், அம்பாளுக்கு ஆரத்தி காண்பித்தபின் அங்கே எதிரேயே உள்ள பைரவருக்கும் ஆரத்தி காண்பித்தபின்பே ஆரத்தியைத் தொட்டு வணங்க முடியும் . அதன் பின்பே விபூதி பிரசாதம் கொடுப்பார்கள். இவரும் கதாயுதத்துடன் காட்சி அளிக்கிறார்.
குடும்ப ஒற்றுமை பலப்படவும், ஐஸ்வர்யம் பெருகவும் இங்கே பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில்   சிறப்பு பூஜைகள் செய்கிறார்கள். பஞ்சமூர்த்தி உலாவின் போது கூட சுவாமி அம்மன், பிள்ளையார் முருகன் உடன் சண்டிகேசுவரருக்குப் பதிலாக பைரவர் உலா வருவார்.
விதான ஓவியங்கள்.
இயற்கை சாரள முறைப்படி கோயிலுக்குள் காற்று அள்ளுகிறது.

மேலே கம்பி வலைத்தடுப்பின் பின்னே இன்னொரு சீலிங்கும் அதன் உட்பக்கமாய் வலைகளும் உள்ளன.
மிக நீண்ட உட்பிரகாரங்கள். சிற்பவேலைப்பாடு மிக்க கொடுங்கைகள்.
விநாய்கரும் பழனி ஆண்டவரும் இரு தூண்களில் காட்சி அளிக்கிறார்கள். மேலே பூரா ஓவியங்கள்.
சிம்மங்கள் தாங்கும் கம்பீர நந்தி.
வெகுசுத்தமான  வெளிச்சுற்றுப் பிரகாரம்.
பூவுல கனைத்தும் போற்றுகிற
பொற்பதி சூரக் குடிவாழும்
ஆவுடைய நாயகி உடனாய
ஐயன் தேசிக நாதரினைக்
'காவல் நீ'யெனச் சரண்புகுந்தால்
கருணை விழிகள் பார்த்தருளித்
தாவெதும் இன்றிக் காத்திடுவார்.
தகவும் திருவும் சேர்த்திடுவார்.!

- நன்றி நமது செட்டிநாடு நவம்பர் 2015 இதழ்.


சூரக்குடிக் கோயிலார்  "கேரள சிங்கவள நாட்டில் சூரைக்குடியான தேசிக நாராயணபுரத்தில் புகழ்வேண்டிய பாக்கமுடையார்." என குறிப்பிடப்படுவர்.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. மாத்தூர் ஐந்நூற்றீசுவரர்  பெரியநாயகியம்மன் திருக்கோயில்

2. இலுப்பைக்குடி தான்தோன்றீசுவரர் சவுந்தரநாயகியம்மன் திருக்கோயில் :- 

3. வேலங்குடி கண்டீஸ்வரர், காமாட்சியம்மன் திருக்கோயில் 

4. இளையாற்றங்குடிக்கோவிலில் அபூர்வ ஓவியங்கள்:- .நர்த்தன நடராஜரும், கங்காதரரும். 

5. சூரக்குடி தேசிகநாதர் ஆவுடைநாயகியம்மன் திருக்கோயில்.

6. இளையாற்றங்குடி கைலாசநாதர் நித்யகல்யாணியம்மன் திருக்கோயில்

7. இரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவியம்மன் திருக்கோயில்.

8. நேமம் ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் சௌந்தரநாயகியம்மன் திருக்கோயில்.

9. வைரவன்பட்டி வளரொளிநாதர் வடிவுடையம்மன் திருக்கோயில்.

10. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், மருதீசர், வாடாமலர் மங்கையம்மன் திருக்கோயில்.

1 கருத்து:

  1. வெங்கட் நாகராஜ்16 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 6:45
    சிறப்பானதோர் கோவில் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு

    Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University16 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 7:33
    சூரக்குடி உலா வந்தோம். நன்றி.

    பதிலளிநீக்கு

    துரை செல்வராஜூ16 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 8:43
    திருக்கோயில் அழகாக இருக்கின்றது..
    காலையில் இனிய தரிசனம்.. வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு

    G.M Balasubramaniam16 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 11:43
    இதுவும் நகரத்தாரின் ஒன்பது கோவில்களில் ஒன்று தானே

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan21 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 4:23
    நன்றி வெங்கட் சகோ

    நன்றி ஜம்பு சார்

    நன்றி துரை சகோ

    நன்றி பாலா சார். இதுதான் சூரைக்குடி நகரத்தார் கோயில் முன்பு நான் போட்டது சூரைக்குடி நகரச்சிவன் கோயில்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.