எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 21 ஜனவரி, 2021

வெள்ளி மயிலில் வேல் முருகன்.

வெள்ளி மயிலில் வேல் முருகன்.

கார்த்திகை பூசையின்போது வெள்ளி மயிலில் வேல்முருகன் எழுந்தருளுவார். கார்த்திகை சோம வாரங்களில் நடைபெறும் பூசையின்போது தண்டாயுதத்துக்கும் வேலுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அதன்பின் வெள்ளிமயிலில் வேல்முருகனை வைத்து அலங்கரிப்பார்கள். இருபக்கமும் மயில்தோகையும் தண்டாயுதமும் வேலும் வைக்கப்படும். இரு குத்துவிளக்குகளும் ஏற்றி வைக்கப்படும். காலையிலிருந்து சாமிக்குப் படையல் தீப தூபம் ஆகும்வரை ஒருவர் மாற்றி ஒருவர் முருகன் பாமாலைகள் பாட மற்றவர்களும் பின் தொடர்வார்கள். வீடே முருகன் அருளால் விபூதியோடு மணக்கும்.

முதலில் விநாயகப்பானையில் பொங்கலிடுவார்கள். இது இரட்டைப் பானையாகப் பொங்கப்படும். அதன்பின் பூசைச்சாப்பாடு ஏழெட்டுக் காய்கறி வகைகளுடன் தயாராகும். பருப்பு மசியல், கத்திரி முருங்கை அவரைகாய் சாம்பார், முட்டைக்கோஸ் துவட்டல், சௌ சௌ கூட்டு, பரங்கிக்காய் புளிக்கறி, வாழைக்காய் பொடிமாஸ், கருணைக்கிழங்கு மசியல், வெண்டைக்காய் மொச்சை மண்டி, ரசம், பலாக்காய் பிரட்டல், மோர், பாயாசம், வடை, அப்பளம் ஆகியன இடம்பெறும்.

சாதத்தை வடித்துப் பெரிய ஓலைப்பாயில் கொட்டி வைப்பார்கள். விநாயகப்பானைக்கும், சாதம், பொரியல், கூட்டு குழம்பு வகையறாவுக்கும் தூப தீபம் பார்த்தபின் முருகனுக்கு எதிரில் படையல் இடப்படும். பண்டாரம் வந்து சங்கு ஊதி தீபம் காட்ட அனைவரும் வணங்குவார்கள். பெண்கள் மாவிளக்கு வைப்பார்கள். ( அது அடுத்த இடுகையில்) . அதன் பின் ஊரோடு அனைவரும் உணவருந்திச் செல்வார்கள்.

மாலையில் பான(க்)க பூசை நடைபெறும். பூசைக்குழம்பை ( மிஞ்சிய அனைத்தையும் ஒன்றாக்கிச் சுடவைத்து ) புள்ளிக்கணக்குக்கு ஏற்பக் கொடுப்பார்கள்.

விடையேறுபாகன்.
வள்ளி தெய்வானை சமேத மயில்வாகனன்.

விநாயகப் பானை. வெள்ளைப் பொங்கல்.

 மயில் தோகை, கோலம்.


பூசைச் சாப்பாடு தயாராகிறது.


வெண்டைக்காய் மொச்சை மண்டி.

பாசிப்பருப்பு மசியல் & நெய்.


ரசம்.

சௌ சௌ கூட்டு.

வாழைக்காய் பொடிமாஸ்.

பரங்கிக்காய் புளிக்கறி.

கருணைக்கிழங்கு மசியலுக்கு ரெடியாகிறது.

இரட்டைக் குத்துவிளக்கு.


மாவிளக்கு.

சாமி அறையில் சந்தன மாலைகள்.

வெள்ளிக் குத்து விளக்கு.

பெட்டகமும் பிள்ளையார்பட்டிப் பிள்ளையாரும்.

வெள்ளி மயில் ரெடியாக நிற்கிறது, நம் மன உலகை வலம் வர.

இதோ முருகனும் தயாராய் மயிலேறிக் காட்சி தருகிறார். இருபுறமும் மயில் தோகைகளும் தண்டாயுதமும் வேலும்.

மாவிளக்குகளும் படைக்கத் தோதாய் இலைகளும் போடப்பட்டுள்ளன.

இதோ படையல். பூசைச்சாப்பாடு ரெடி.


பெண்கள் மாவிளக்கு வைக்கத் தொடங்குகிறார்கள்.

இந்த மாவிளக்குகள் பற்றி இன்னொரு இடுகையில் பார்ப்போம்.

1 கருத்து:

  1. திண்டுக்கல் தனபாலன்19 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 10:18
    அருமை...

    பதிலளிநீக்கு

    Kasthuri Rengan21 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 4:22
    அற்புதம்
    தொடர்க

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan27 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 12:56
    நன்றி டிடி சகோ

    நன்றி கஸ்தூரி ரங்கன் சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.