மகர்நோன்பும் மண்டகப்படியும் வாழைப்பழ மாலையும்.
நெல்லிமரத்துப் பிள்ளையார் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்த 48 நாட்களுக்குள் ( ஒரு மண்டலத்துக்குள் - மண்டகப்படிக்குக் ) அபிஷேக ஆராதனைக்குக் கொடுத்திருந்தோம். அப்போது நவராத்திரி சமயமாதலால் கோயிலில் கொலு வைக்கப் பட்டிருந்தது. நவராத்திரியை இங்கே மகர்நோன்பு என்பார்கள்.
காரைக்குடியில் மகர்நோன்பு சிறப்பு. அதிலும் 4 சாமிகள் ஒரு சேர மகர்நோன்புப் பொட்டலில் அம்புபோடும் திருவிழா நடக்கும். ( திருநிலை அம்மன், சிவன், கொப்புடையம்மன், பெருமாள் ) ஆகிய தெய்வங்கள் குதிரை வாகனங்களில் எழுந்தருளி இருக்கும்போது மக்கள் இந்த நான்கு கோயில்களுக்கும் பகலில் போய் மாவிளக்குப் போடுவார்கள்.
அதன் பின் மாலையில் சுவாமிகள் உலா வந்து மகர்நோன்புப் பொட்டலில் அம்பு போடுவார்கள். சுவாமி போட்ட இந்த அம்பு கிடைத்தால் விசேஷம் என்று கூட்டம் அள்ளும். சிறுகுழந்தைகளும் அன்று எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு பெற்றோருடன் வந்து ( அறுபத்துமூவர் மடம் அருகில் ) கட்டப்பட்டிருக்கும் வாழை மரத்தில் அம்பால் குத்துவார்கள். இதற்குக் கிலுக்கி எடுத்தல் என்று பெயர். ஆண்குழந்தைகள் பிறந்த முதல் வருடத்தில் அம்பு போடுவது ( கிலுக்கி எடுத்தல்) மிக விசேஷம். எல்லா ஊர்களிலும் இருக்கும் காரைக்குடிக்காரர்கள் இந்த சமயம் காரைக்குடியில்தான் இருப்பார்கள்.
இந்த சமயம் அநேகமாக எல்லாக் கோயில்களிலும் கொலு வைக்கப்பட்டிருக்கும்.
தசாவதாரம் அருமை என்றால் அஷ்ட லட்சுமிகளும் கொள்ளை அழகு.
மேல் படியில் ஸ்ரீராமர் பட்டாபிஷேகமும் ஆஞ்சநேயரும் வெண்ணைக் கிருஷ்ணனும் எழுந்தருளி இருந்தார்கள்.
அதிலும் முப்பெரும் தேவியரும் வீற்றிருந்து அருள்பாலித்தார்கள்.
வழக்கம்போல் செட்டியார் பொம்மை, காய்கனிகள் இருந்தன.
வாயிலின் இருபுறச்சுவரிலும் வெள்ளைத்தாமரையில் வெள்ளைக் கலை உடுத்திய கலைமகளும், இன்னொருபுறம் செந்தாமரையில் வீற்று செந்தாமரை தாங்கிய செவ்வுடை உடுத்திய அலைமகளும் அருள் பாலிக்க விநாயகருக்கு எல்லா அபிஷேகங்களும் நடைபெற்றன.
உத்தரத்தில் மேலே நடுவிதானத்தில் தாய் தந்தையரைப் பூசிக்கும் ஆனைமுகனும் அழகுமுகனும்.
கண்குளிரக் கண்டு தரிசித்தபின் அவருக்கு தீபதூப ஆராதனைகளும் நைவேத்திய பிரசாதங்களை படைக்கப்பட்டன.
விநாயகருக்கு அழகிய நீல தலைப்பாகை அணிவித்தார் அர்ச்சகர். !
இல்லத்தில் ஏழு வாரம் செவ்வாய்க்கிழமை வாழைப்பழ மாலை ( 12 பழங்கள் ) சாற்றி, வாழைப்பழம், வெற்றிலை பாக்கு நைவேத்தியம் செய்து ( இரு வாழைப்பழங்களை ஏழாக வெட்டி இரண்டில் மட்டும் நெய் தீபம்) வாழைப்பழ தீபம் ஏற்றி தூபதீப ஆராதனை செய்து வழிபட்டோம் அதன்பின் அருகிருந்த விநாயகர் கோவிலில் அர்ச்சனையும் சிதர்காயும் அளித்து விரதத்தை பூர்த்தி செய்தோம்.
இந்த வாழைப்பழ மாலையையும் நிவேதித்த வாழைப்பழங்களையும் , நெய் விளக்கேற்றிய பழங்களையும் ( திரியை நீக்கிவிட்டு ) மறுநாள் குளித்து முழுகி பிள்ளையாரை வடக்கே நகர்த்தி யதாஸ்தானத்தில் வைத்துவிட்டு எடுக்கவேண்டும். பின்னர் இவற்றை பசுக்களுக்கு அளிக்க வேண்டும். இதன் மூலம் வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த திருப்தியும் ஏற்படுகின்றது.
வேண்டுதல்களும் விரதங்களும் உறவினர்கள் சொல்வதற்காக அல்லாமல் தனிப்பட்ட விருப்பின் பேரில் செய்யப்படுவதே சிறப்பு. அதேபோல் நமக்கும் நம்பிக்கை இருந்ததால் தும்பிக்கையானை வழிபட்டு மன நிம்மதி அடைந்தோம்.
டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.

Unknown10 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 7:15
பதிலளிநீக்குகாரைக்குடி மகர்நோன்பு திடலில் கவிஞர் கண்ணதாசன் பெருந்தலைவர் பேசக்கேட்டதுண்டு.
மகர்நோன்பு அன்று ஊரிலேயே கொண்டாடுவோம்.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan10 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 11:59
Arumai Palani Chamy sir. Thagavalukku nandri.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!