அறுபடை முருகன் கோயில்கள். - திருப்பரங்குன்றம்.
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும். என்ற பாடலை உச்சஸ்தாயியில் ரசித்துப் பாடியதுண்டு. சகோதரன் குடும்பத்தாரோடு அறுபடை முருகன் கோயில்களுக்கும் சென்று தரிசனம் செய்யும் வாய்ப்புக் கிட்டியது. முருகன் அருள் என்றுதான் சொல்ல வேண்டும். முதலில் மதுரை. அங்கே இரு படை வீடுகள். முதலில் முதலாம் படை வீடு திருப்பரங்குன்றம். அடுத்தநாள் காலையில் ஆறாவது படை வீடு பழமுதிர் சோலை.
அது ஒரு ஆடி மாசம் என்றாலும் கோயில்களில் கூட்டம் அள்ளியது. மதியத்தில் காரைக்குடியில் இருந்து புறப்பட்டு முதலில் திருவாதவூர் சென்று மாணிக்க வாசகரின் திருக்கோயிலையும் அங்கே இருந்த மாபெரும் சிவன் கோயிலுக்குச் சென்று ( அருள்மிகு வேதநாயகி அம்பாள் சமேத திருமறைநாத சுவாமி ) சிவனையும் தரிசித்தோம். நரியைப் பரியாக்கிய கதை ஞாபகம் வந்தது. :)
திருப்பரங்குன்றம் கிபி ஏழாம் நூற்றாண்டில் பராந்தக நெடுஞ்சடையன் என்ற பாண்டிய மன்னன் காலத்தில் அவரது படைத்தளபதி சாத்தன் கணபதி என்பவரால் சிவனுக்காகக் கட்டப்பட்ட குகைக்கோயில். கருவறையிலேயே இது வித்யாசமா குகைக்குள்ள சாமியைக் கும்பிடும்படி இருக்கும். அதுவும் அடுத்தடுத்த சன்னதி. முருகன், விநாயகர், சிவன், பெருமாள் துர்க்கை அப்பிடின்னு ஐந்து சன்னதிகள் குகையைக் குடைந்து அமைக்கப்பட்டிருக்கு.
திருப்பரங்குன்றம் சின்ன மலைதான்.( மலைதான் சிவம் ) சில படிகள் ஏறியவுடனே கோயில் வந்துவிடும். கோயில் பின்புறம் மலை எழும்பி நிற்கும். இங்கே ஒவ்வொரு சன்னதியும் நமது புராதன சிற்ப அம்சங்களைக் கொண்டதா அமைஞ்சிருக்கு. காணக் கண் கோடி வேண்டும். எல்லாம் கல் சிற்பங்கள். முருகன் தெய்வானையை மணந்த திருத்தலம் இது. ஓமெனும் ப்ரவணத்தை தாய் உமைக்கு தந்தை சிவன் உபதேசித்தபோது தாயின் மடியில் அமர்ந்திருந்த முருகனும் கேட்டதால் அக்குற்றத்துக்கு பரிகாரமாக திருப்பரங்குன்றத்துக்கு வந்து தவம் செய்தாராம் முருகன். அவருக்கு அம்மையும் அப்பனும் காட்சி தந்து அருளினார்களாம்.
சனீஸ்வரன் சன்னிதியில் இங்கே விளக்குபோடும் கூட்டம் அதிகம். புஷ்கரணிதான் எல்லா ஊர்களிலும் கொஞ்சம் சரியான பராமரிப்பு இல்லாம இருக்கு. நல்ல கல் மண்டபங்கள். நடை நடை நடைதான். அதிலும் அங்கங்கே பல சன்னதிகள். சில பெயர் கூட மறந்து போச்சு. வித்யாசமான பிரம்மாண்டமான பூதகணங்கள் கூட சன்னதித் தூண்களில் இடம் பெற்றிருக்கின்றனர்.
எல்லா சன்னதிக்கும் ஏறி இறங்கிப் போய் ( அறுபடை முருகன் கோயில்களிலேயே இதுதான் பெரிசாம் ) முருகனை தரிசித்ததும் மனக் களைப்பு எல்லாம் தீர்ந்து மகிழ்ச்சியானது.
இங்கே கந்தர் சஷ்டி விசேஷம். துண்டு போட்டு இடம் பிடிச்சு எல்லாரும் ஆறு நாளும் இங்கேயே இருந்து பச்சைத் தண்ணீர் கூட பல்லில் படாம கடுமையா விரதம் இருக்காங்க. கோயில்லேயே குடி கொண்டிருக்காங்க. குட்டீஸ்களும் இதில் அடக்கம். மதுரைக்காரங்களுக்கு முரட்டு பக்தி அதிகம். :)
இங்கே கிரிவலமும் வர்றாங்க.
கோயில்களின் இன்ன இன்னது செய்யக்கூடாது என்று ஒரு போர்டில் எழுதி வைத்திருக்கின்றார்கள். அதில் அரைக்கால் ட்ரவுசர் அணிந்து போகக்கூடாது என்பதும் ஒன்று.! கோயில் முன்புறம் காலணியைப் போடக்கூடாது. சூடம் ஏற்றக் கூடாது. நெய் தீபம்தான் ஏற்றணும்.வெடி வெடிக்கக்கூடாது. வாகனம் நிறுத்தக்கூடாதுன்னு. ஆனா மக்கள் எல்லா ஆக்கினையும் செய்துதான் வைக்கிறாங்க.
இணையத்தில் அதிகம் புழங்கும் இந்நாளில் வெளிநாட்டிலேயே வசித்திருந்தும் குட்டீஸ்களான என் தம்பி மக்கள் இருவருமே திருப்புகழைப் பாடியபடி எங்களுடன் பயணித்தது ஆச்சர்யகரமான இன்பம். அவர்கள் பாடிய திருப்புகழால் எங்கள் செவியும் மணத்தது.
திருப்பரங்குன்றம் பற்றிய அருணகிரிநாதரின் திருப்புகழ் ஒன்று.
திருப்பரங்குன்றம்.
( அன்பு உற )
வா வா முருகா வடிவேலா, வள்ளி மணாளா வடிவேலா. - 2
தந்தனந் தத்தத் ...... தனதான
தந்தனந் தத்தத் ...... தனதான
சந்ததம் பந்தத் ...... தொடராலே
சஞ்சலந் துஞ்சித் ...... திரியாதே
கந்தனென் றென்றுற் ...... றுனைநாளும்
கண்டுகொண் டன்புற் ...... றிடுவேனோ
தந்தியின் கொம்பைப் ...... புணர்வோனே
சங்கரன் பங்கிற் ...... சிவைபாலா
செந்திலங் கண்டிற் ...... கதிர்வேலா
தென்பரங் குன்றிற் ...... பெருமாளே.
வேல் வேல்.. முருகா. வெற்றிவேல் முருகா.
அறுபடை முருகன் கவசங்கள் திருப்பரங்குன்றம்.
திருப்பரங்குன்றம் கவசம்
-- நன்றி விதை & விருட்சம்
அறுபடை முருகன் கோயில்கள் :- திருத்தணி.

திருப்ரங்குன்றுறை தீரனே குகனே
மருப்பிலாப் பொருளே வள்ளி மனோகரா
குறுக்குத் துறையுறை குமரனே அரனே
இருக்கும் குருபரா ஏரகப் பொருளே
வையாபுரியில் மகிழ்ந்துவாழ் பவனே
மருப்பிலாப் பொருளே வள்ளி மனோகரா
குறுக்குத் துறையுறை குமரனே அரனே
இருக்கும் குருபரா ஏரகப் பொருளே
வையாபுரியில் மகிழ்ந்துவாழ் பவனே
ஓய்யார மயில்மேல் உகந்தாய் நமோ நமோ
ஐயா குமரா அருளே நமோ நமோ
மெய்யாய் விளங்கும் வேலா நமோ நமோ
பழநியங் கிரிவாழ் பகவா நமோ நமோ
மழுவுடைய முதல்வன் முதலாய் நமோ நமோ
ஐயா குமரா அருளே நமோ நமோ
மெய்யாய் விளங்கும் வேலா நமோ நமோ
பழநியங் கிரிவாழ் பகவா நமோ நமோ
மழுவுடைய முதல்வன் முதலாய் நமோ நமோ
விராலிமலை யுறை விமலா நமோ நமோ
மராமரம் துளைத் தோன் மருகா நமோ நமோ
சூரகம் காரா துரையே நமோ நமோ
வீரவேலேந்தும் வேலனே நமோ நமோ
பன்னிரு கரமுடைப் பரமா நமோ நமோ
மராமரம் துளைத் தோன் மருகா நமோ நமோ
சூரகம் காரா துரையே நமோ நமோ
வீரவேலேந்தும் வேலனே நமோ நமோ
பன்னிரு கரமுடைப் பரமா நமோ நமோ
கண்கள் ராறுடைக் கந்தா நமோ நமோ
கோழிக் கொடியுடைக்கோவே நமோ நமோ
ஆழிசூழ் செந்தில் அமர்ந்தாய் நமோ நமோ
சச்ச ச்சச ஓம்ரீம்
ரரர ரரர ரீம் ரீம்
கோழிக் கொடியுடைக்கோவே நமோ நமோ
ஆழிசூழ் செந்தில் அமர்ந்தாய் நமோ நமோ
சச்ச ச்சச ஓம்ரீம்
ரரர ரரர ரீம் ரீம்
வவவ வவவ ஆம் ஹோம்
ணணண ணணண வாம் ஹோம்
பபப பபப சாம் சூம்
வவவ வவவ களம் ஓம்
வவ லீலீ லுலு நாட்டிய அட்சரம்
ணணண ணணண வாம் ஹோம்
பபப பபப சாம் சூம்
வவவ வவவ களம் ஓம்
வவ லீலீ லுலு நாட்டிய அட்சரம்
கக கக கக கந்தனே வருக
இக இக இக ஈசனே வருக
தக தக தக சற்குரு வருக
பசு பசு பசு பரந்தாமா வருக
இக இக இக ஈசனே வருக
தக தக தக சற்குரு வருக
பசு பசு பசு பரந்தாமா வருக
வருக வருகவென்வள்ளலே வருக
தாயென நின்னிரு தாள் பணிந்தேன் எனைச்
சேயெனக் காத்தருள் திவ்யமா முகனே
அல்லும் பகலும் அனுதினம் என்னை
தாயென நின்னிரு தாள் பணிந்தேன் எனைச்
சேயெனக் காத்தருள் திவ்யமா முகனே
அல்லும் பகலும் அனுதினம் என்னை
எல்லினும் இருட்டிலும் எரிபகல் படுக்கை
வல்ல விடங்கள் வராமல் தடுத்து
நல்ல மனத்துடன் ஞான குரு உனை
வணங்கித் துதிக்க மகிழ்ந்துநீ வரங்கள்
இணங்கியே அருள்வாய் இறைவா எப்போதும்
வல்ல விடங்கள் வராமல் தடுத்து
நல்ல மனத்துடன் ஞான குரு உனை
வணங்கித் துதிக்க மகிழ்ந்துநீ வரங்கள்
இணங்கியே அருள்வாய் இறைவா எப்போதும்
கந்தா கடம்பா கார்த்தி கேயா
நந்தன் மருகா நாரணி சேயே
எண்ணிலாக் கிரியில் இருந்து வளர்ந்தனை
தண்ணளி அளிக்கும் சாமி நாதா
சிவகிரி கையிலை திருப்பதி வேளூர்
நந்தன் மருகா நாரணி சேயே
எண்ணிலாக் கிரியில் இருந்து வளர்ந்தனை
தண்ணளி அளிக்கும் சாமி நாதா
சிவகிரி கையிலை திருப்பதி வேளூர்
தவக்கதிர் காமம் சார்திரு வேரகம்
கண்ணுள் மணிபோல் கருதிடும் வயலூர்
விண்ணவர் ஏத்தும் விராலி மலைமுதல்
தன்னிகரில்லாத தலங்களைக் கொண்டு
சன்னதியாய் வளர் சரவண பவனே
கண்ணுள் மணிபோல் கருதிடும் வயலூர்
விண்ணவர் ஏத்தும் விராலி மலைமுதல்
தன்னிகரில்லாத தலங்களைக் கொண்டு
சன்னதியாய் வளர் சரவண பவனே
அகத்திய முனிவனுக்கு அன்புடன் தமிழைச்
செகத்தோர் அறியச் செப்பிய கோவே
சித்துக்கள் ஆடும் சிதம்பர சக்கரம்
நர்த்தனம் புரியும் நாற்பத்தெண் கோணம்
வித்தாம் நின்ற மெய்ப்பொருளோனே
செகத்தோர் அறியச் செப்பிய கோவே
சித்துக்கள் ஆடும் சிதம்பர சக்கரம்
நர்த்தனம் புரியும் நாற்பத்தெண் கோணம்
வித்தாம் நின்ற மெய்ப்பொருளோனே
உத்தம குணத்தாய் உம்பவர்கள் ஏறே
வெற்றிக் கொடியுடைய வேளே போற்றி
பத்திசெய் தேவர் பயனே போற்றி
சித்தம் மகிழ்ந்திடச் செய்தவர்போற்றி
அத்தன் அரியன் அம்பிகை லட்சுமி
வெற்றிக் கொடியுடைய வேளே போற்றி
பத்திசெய் தேவர் பயனே போற்றி
சித்தம் மகிழ்ந்திடச் செய்தவர்போற்றி
அத்தன் அரியன் அம்பிகை லட்சுமி
வாணியுடனே வரையுமாக் கலைகளும்
தானே நானென்று சண்முக மாகத்
தாரணியுள்ளோர் சகலரும் போற்றப்
பூரண கிருபை புரியவா போற்றி
ஓதமார் கடல் சூழ் ஒளிபுவி கிரிகளில்
தானே நானென்று சண்முக மாகத்
தாரணியுள்ளோர் சகலரும் போற்றப்
பூரண கிருபை புரியவா போற்றி
ஓதமார் கடல் சூழ் ஒளிபுவி கிரிகளில்
எண்ணிலாத் தலங்கள் இனிதெழுந் தருள்வாய்
பண்ணும் நிட்டைகள் பலபலவெல்லாம்
கள்ளம் அபச்சாரம் கர்த்தனே எல்லாம்
எள்ளினுள் எண்ணெய்போல் எழிலுடை உன்னை
அல்லும் பகலும் ஆசாரத்துடன்
பண்ணும் நிட்டைகள் பலபலவெல்லாம்
கள்ளம் அபச்சாரம் கர்த்தனே எல்லாம்
எள்ளினுள் எண்ணெய்போல் எழிலுடை உன்னை
அல்லும் பகலும் ஆசாரத்துடன்
சல்லாப மாய் உனைத் தாணுறச் செய்தால்
எல்லா வல்லமை இமைப்பினில் அருளி
பல்லா யிரநூல் பகர்ந்தருள் வாயே
செந்தில் நகர்உறை தெய்வானை வள்ளி
சந்தகம் மகிழும் தயாபர குகனே!
எல்லா வல்லமை இமைப்பினில் அருளி
பல்லா யிரநூல் பகர்ந்தருள் வாயே
செந்தில் நகர்உறை தெய்வானை வள்ளி
சந்தகம் மகிழும் தயாபர குகனே!
சரணம் சரணம் சரவண பவ ஓம்
அரன் மகிழ் புதல்வா ஆறுமுகா சரணம்
சரணம் சரணம் சரவண பவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!
அரன் மகிழ் புதல்வா ஆறுமுகா சரணம்
சரணம் சரணம் சரவண பவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!
-- நன்றி விதை & விருட்சம்
Nagendra Bharathi24 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 10:38
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்கு
”தளிர் சுரேஷ்”24 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 2:13
திருப்பரங்குன்றம் பத்து ஆண்டுகளுக்கு முன் தரிசித்து இருக்கிறேன்! அழகான படங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!
பதிலளிநீக்கு
sury siva24 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 10:23
1960, 1961 ம் வருடம் அந்த மதுரையிலே வேலைக்குச் சேர்ந்த பொது அந்த மலை மேல் ஏறி உட்கார்ந்து எல்லோரும் தங்கள் பெயரைப் பொறிப்பது போல், நானும் செய்திருந்தேன்.
1984ல் திரும்பவும் அதே இடத்திற்குச் சென்று நான் என் பெயர் இருந்த இடத்தை எவ்வளவு நீ தேடியும் கிடைக்கவில்லை.
உங்கள் பதிவு, எனது மதுரை வாசம், திருப்பரங்குன்றம்,கோயில், ஐந்தாம் எண் பேருந்து எல்லாம் நினைவுக்கு வருகிறது.
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் என்ற பாடலை அங்கு பாடினீர்களா? அதை இங்கே பதிவு செய்யக்கூடாதா !!
வாழ்த்துக்கள்.
சுப்பு தாத்தா.
பதிலளிநீக்கு
Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University25 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 7:50
முதலாம் படைவீடு பலமுறை சென்றுள்ளேன். தங்களின் பதிவால் இன்று மறுபடியும். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan25 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:36
நன்றி நாகேந்திர பாரதி சகோ
நன்றி சுரேஷ் சகோ
சுப்பு சார் அது சின்னப்பிள்ளையில் பாடியது. அங்கே எல்லாம் பாடவில்லை. மேலும் அங்கே பெருங்கூட்டம் இருந்தது. :) உங்கள் அளவு பாட வராது. :)
நன்றி ஜம்பு சார் :)
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan25 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:36
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
பதிலளிநீக்கு
வெங்கட் நாகராஜ்26 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 8:37
அருமையான படங்கள். சிறு வயதில் இக்கோவிலுக்குச் சென்றது. அதன் பிறகு அங்கே போக வாய்ப்பில்லை.... உங்கள் பதிவு மூலம் நானும் சென்று வந்த உணர்வு. நன்றி.
பதிலளிநீக்கு
Thulasidharan V Thillaiakathu28 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 8:04
பல வருடங்களுக்கு முன் சென்றது. படங்கள் அருமை. லேட்டஸ்ட் அறிய முடிந்தது. மிக்க நன்றி சகோ.