எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 1 பிப்ரவரி, 2021

கோபுர தரிசனம்.

கோபுர தரிசனம்.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்கள். கோயிலுக்குச் செல்ல இயலாவிட்டாலும் ஆறு கால பூஜைகளின் போதும் வீட்டிலிருந்தே ஜன்னல் வழி கோபுரங்களை தரிசிக்க முடியும் அம்மா வீட்டிலும், கணவரது பாட்டியாரின் வீட்டிலும் இருந்து.

நான் சென்ற சில கோயில்களின் கோபுரங்கள் உங்கள் தரிசனத்துக்காகப் பகிர்ந்திருக்கிறேன்.

இது பிள்ளையார் பட்டிக் கோயில். பிகநக விடுதியில் இருந்து எடுத்தது. கோபுரம் சிறிதென்றாலும் கீர்த்தி பெரிது.

இது காரைக்குடியின் கொப்புடைய அம்மன் கோயில் கோபுரம். மாலைநேர எதிர்வெய்யில் என்பதால் இரு புகைப்படங்களிலும் க்ளேரிங்.. வித்யாசமான கோபுரம். இதன் முன் பக்கங்களில் ஒரே கல்லில் தொங்கும் கல் சங்கிலிங்கள் - செயின்கள் செதுக்கி இருப்பாங்க. மிக அழகாக இருக்கும்.

இது சாக்கோட்டை வீர சேகர உமையாம்பிகை கோயில் கோபுரம். மிகப் பிரம்மாண்டமானது. கோயில் கோபுரத்தின் நிழல் அதிலேயே விழும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கு. செவ்வக வடிவ ஒன்பது நிலை கோபுரம்.
இதுவும் சாக்கோட்டை உய்யவந்த அம்மன் கோயில் கோபுரம். மிகச் சக்தி வாய்ந்த அம்மன்.



வடபழனியில் இரண்டு மூன்று கோயில் கோபுரங்கள்.
இதுவும் வடபழனி மேம்பாலத்தின் அருகே எடுத்தது.
அருள் திரு வடபழனி ஆண்டவர் திருக்கோயிலின் கோபுரம். ஒரு முறை வீட்டில் இருந்து பாத யாத்திரை ( 5 - 7 கிமீ இருக்கும் ) போனபோது எடுத்தது.
அழகு கோபுரங்களில் இதுவும் ஒன்று.
கானாடு காத்தான் ஸ்ரீ மங்கள ஆஞ்சநேயர் கோயில் கோபுரம். மிகவும் சக்தி வாய்ந்தவர் இவரும்.
கானாடு காத்தான் /செட்டிநாட்டில் செட்டிநாட்டு அரசரின் அரண்மனைக்கு முன்னால் உள்ள விநாயகர் கோயில் கோபுரம்.
மனித உடலில் பாதத்தைக் குறிக்கிறதாம் கோபுரம். கோபுரம் தரிசனம் கோடி புண்ணியம் என்றும், கோபுர தரிசனம் பாவ விமோசனம் என்றும் பெரியோர்கள் சொல்வார்கள் . பாத தரிசனம் பெற்றுப் பாவ விமோசனமடைந்து பலன் பெறுவோமாக.
 

டிஸ்கி:- இது என்னுடைய இந்தப் புது வலைத்தளத்தில் 500 ஆவது போஸ்ட். :) 
 

1 கருத்து:

  1. கரந்தை ஜெயக்குமார்16 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:01
    படங்கள்அழகு

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்17 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 10:00
    கோபுர தரிசனம் கோடி புண்ணியம்....

    அழகான படங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan21 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 12:10
    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி வெங்கட் சகோ

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan21 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 12:10
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

நவக்ரஹக் கோலங்கள்.

 நவக்ரஹக் கோலங்கள்.