எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 29 ஜனவரி, 2021

ஈஷா யோகாவும், லிங்க பைரவி பூஜையும்

 ஈஷா யோகாவும், லிங்க பைரவி பூஜையும்

வெள்ளியங்கிரி மலைச்சாரலின் அடிவாரத்தில்  இருக்கும் ஈஷா யோகப் பயிற்சி மையத்துக்குச் சென்றதுண்டு. யோகா கற்றுக் கொள்ளவில்லை. அங்கே இருக்கும் தியானலிங்கத்தைத் தரிசிக்கத்தான்.

பௌர்ணமி அன்று ஆனந்த அலைகள் என்று போஸ்டர் பார்த்ததுண்டு . ஆனால் கலந்து கொள்ள இயன்றதில்லை. சத்குரு ஜக்கி வாசுதேவ் பற்றி அனுராதா ரமணனின் கட்டுரைகளில் படித்ததுண்டு.

கோவையிலிருந்து வெள்ளியங்கிரி சென்று அங்கே இருக்கும் ஜல லிங்கத்தையும் ஸ்பரித்து மிதந்ததுண்டு. மிக அற்புதமான அனுபவம் அது.உள்ளே இருக்கும் கிணற்றில் இருக்கும் ஜல லிங்கத்தின் சிரசில் நாம் தண்ணீரில் இறங்கி ( ஏறத்தாழ 6 அடிக்கு மேல் இருக்கலாம் நீர் மட்டம். ஆனால் பயந்தபடி படியில் அமரும் நம்மை அங்கே சேவை செய்யும் சகோதரிகள் நம் கையைப் பிடித்து அழைத்ததும் துணிந்து இறங்கி ) உடன் மிதக்கத் துவங்குகிறோம்.

மெல்ல மெல்ல நாம் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி இறங்கி நாமே தண்ணீரில் இருந்து இரண்டு அடி மிதந்து லிங்கத்தின் சிரசில் கைகளை வைத்தபடி இறை உணர்வில் ஆனந்த அலையில் மிதக்கத் தொடங்குகிறோம். வெளியே வந்தபின்னும் அந்த அற்புத உணர்வு பல கணம் நீடிக்கிறது.

பின் உள்ளே சென்று தியான லிங்கத்தை ( யோகாசனத்தின் ஏழு படி நிலைகள் உணர்த்தும் விதமாக ஏழு சுற்று நாகம் சுற்றியதைப் போலிருக்கும் ) வணங்கி வருகிறோம்.

ஈஷா யோகா செண்டரில் ஹட யோகம்  கற்பிக்கப்படுகிறது, மேலும் குருபூர்ணிமா, லிங்க பைரவி ஆகிய பூஜைகள் , நவராத்திரி பூஜைகள் நிகழ்த்தப்படுகின்றன. ஈஷா காட்டுப்பூ என்ற புத்தகமும் வெளிவருகிறது.

என் உறவினர் ஒருவரும் ஈஷா யோகத்தில் ஈடுபாடு உள்ளவர். அவர் எங்கள் ஆயா வீட்டில் லிங்க பைரவி பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் கலந்து கொள்ள வாய்ப்புக் கிட்டியது. அங்கே இசைக்கப்பட்ட பாடல்களும், அங்கே நிலவிய சாந்தியும் அமையும், ஹார்மனியும் மிக அருமை.

எல்லா இடங்களிலும் வரையப்பட்ட பூக்கோலங்களும், அழகான விளக்குகளும் நிறைய விஷயங்களைத் தாமே தெளிவுபடுத்தின. யோகம் என்பதே குண்டலினியை சிரசின் மேல் எழுப்புவதுதானே. அதை இந்தக் கோலங்கள் சிறப்பாக எடுத்துக் காட்டின.

மிக அருமையான பூஜை முடிந்து அங்கே வழங்கப்பட்ட உணவையும் , குளிர்பானத்தையும் அருந்தி தெய்வீக சிந்தனையில் பல நேரம் ஆழ்ந்திருந்தேன்.  வார்த்தைகள் அற்ற அமைதியும்  தியானமும் ஒரு யோகம்தான் எனப் புரிந்தது.

1 கருத்து:

  1. திண்டுக்கல் தனபாலன்5 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:28
    நல்லதொரு புரிதல் - விளக்கங்களோடு...

    வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு

    Unknown5 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 5:25
    Engalukkum andha Bahavaav arul kedaikkattum

    பதிலளிநீக்கு

    Raja5 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 5:45
    காடுகளை அழித்து, வனவிலங்குகளை போக்கிடம் அற்றதாக்கி,விதிமுறைகளை மீறி கட்டிடிடம் கட்டி,அதை காப்பாற்ற மாவட்ட ஆட்சியர் முதல் அனைவரையும் கைக்குள் போட்டு, ஆசிரமம் நடத்தினால், கண்டிப்பாக தெய்வீக தியான நிலை கிட்டும்.வாழ்த்துக்கள்

    ராஜா

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    Unknown15 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 10:17
    அருமையாக சென்றார்கள்

    நீக்கு

    Unknown15 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 10:18
    அருமையாக சொன்னீர்கள்

    நீக்கு

    Unknown15 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 10:18
    அருமையாக சென்றார்கள்

    நீக்கு
    பதிலளி

    'பரிவை' சே.குமார்6 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 12:40
    படங்கள் அழகு...

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan17 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:55
    நன்றி தனபாலன் சகோ

    நன்றி செந்தில்குமார். நிச்சயம் கிட்டும்.

    கருத்துக்கு நன்றி ராஜா.

    நன்றி குமார்.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan17 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:55
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.