எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 14 நவம்பர், 2019

குஜராத் மும்பை ஹைதையில் விநாயகர் சதுர்த்தியும் விசர்ஜனும்.

 குஜராத் மும்பை ஹைதையில் விநாயகர் சதுர்த்தியும் விசர்ஜனும்.

சென்ற வருடம் பெங்களூருவில் இருந்தபோது கே ஆர் புரத்திலும் வி வி புரத்திலும் விற்பனைக்கும் காட்சிக்கும் வைக்கப்பட்டிருந்த விநாயகர்களைப் பஸ்ஸிலும் ஆட்டோவிலும் செல்லும்போதே படம்பிடித்துப் போட்டிருந்தேன்.
கிருஷ்ண கணபதி இவர்.

விநாயகரை எங்கு கண்டாலும் ஒரு பரவசம் தொற்றிக் கொள்ளும். பிள்ளையார் பிள்ளைகளுக்கு உரிய ஒரு கடவுள்தானே. பிள்ளைகளோடு பிள்ளையான கடவுள் பிள்ளைப்பருவத்திலிருந்து தொடர்ந்து எங்கெங்கும் வருகிறார்.
இவரும் கிருஷ்ணராகவே ஆகிவிட்ட  கணபத.

அதிலும் வடநாட்டில் அவருக்கு  சிறப்பான வழிபாடுகள் உண்டு. குஜராத்திலும்( somnath ), மும்பையிலும்  விநாயகர் சதுர்த்தியின் போது மிகச் சிறப்பான ஆராதனைகள் நடைபெறுகின்றன. மற்ற கடவுள்கள் உருவத்திலும் கூட கணபதியை நிறுவுகிறார்கள்.  



மிகப் பிரம்மாண்டமான விதம் விதமான விநாயகர் சிலைகள் விநாயகர் சதுர்த்தி அன்று  மிகப்பெரிய செட்டிங்குகளில் அலங்கரிக்கப்பட்டு ஸ்தாபிக்கப்பட்டு  வணங்கப்படுகின்றார்கள்.

மும்பையில் விதம் விதமான  தீமிலும் ( மைசூர் பேலஸ் ) விநாயகரை பிரம்மாண்டமாக அமரவைத்து   அந்தேரி ராஜா, லால்பகுச்சா ராஜா, மும்பைச்சா ராஜா என்று கொண்டாடுகிறார்கள்.

பாந்த்ராவில் ஷீ ( SHE) என்ற பெண்ணுரிமை அமைப்பினர் விநாயகர் மண்டலியை உருவாக்கி இருந்தார்கள். அது பெண்களின் பெருமை பேசப்படும் விதத்தில் இருந்தது. மதர் தெரசா,மேரி கோம், கல்பனா சாவ்லா, ஜான்சி ராணி, லதா மங்கேஷ்கர் ஆகியோரின் புகைப்படங்களை வைத்து  மகளிரைக் கௌரவப்படுத்தி இருந்தது.
ஹைதை கணபதி.

 தினம் மாலையில் கணபதி பப்பா மோரியா ரே என்றும் மற்ற பல கணபதி பாடல்களும் பாடித் துதிக்கிறார்கள். ஹை லைட்டாக ஹைதையில் கடந்த மூன்று நாட்களாக விநாயகர் வீதி வழி மிகப்பெரும் பறைச் சத்தம் கொட்டி முழக்க ஊர்வலம் வருகிறார்.

நான்கு குதிரைகள் கொண்ட ரதத்தில் விநாயகர் விக்ரகத்தை வைத்து ஒட்டகங்கள் கூட முன் நடந்து வர விநாயகர் ஊர்வலம் நடக்கிறது. பின்புறம் ஒரு ஜெனரேட்டர் வர  நான்கு லைட்டுகள் கொண்ட கம்பத்தை ( கிட்டத்தட்ட இருபுறமும் 15 இருக்கும். ) 30 சீருடை ஊழியர்கள் பிடித்து வந்தார்கள்.

ட்ரம்ஸில் பறைச்சத்தம் அதிர வந்திருந்த இளம் ஆண்கள் ஒரே ஆட்டம்தான். ஓரிடத்தில் பெண்களும் ஆடினார்கள் ஹைய ஹைய ஹையாலோ என்று. விநாயகரைக் கொண்டாடுகிறார்கள். பக்கத்திலிருந்த பாலாஜி ஃப்ரெஷில் ஒரே ஒரு கடைப்பையனும் நான்கு பெண்களும்தான் இருந்தார்கள்.

எல்லா கவுண்டர்ஸும் க்ளோஸ்டு. இருந்த அந்த ஒரே பையனும் அந்தச் சந்தத்திற்கு வெளியே ஓடி ஆடச் சென்று விடுவார்போல இருந்தார். இங்கெல்லாம் சும்மா கால்மணி நேரம் அரைமணி நேரம் எல்லாம் இல்லை.

மாலை ஆறு அல்லது ஏழு மணிக்கு ஆரம்பிக்கும் ஆட்டமும் ஊர்வலமும் ஒவ்வொரு இன்ஞ்சிலும் நின்று நிதானித்து கிட்டத்தட்ட ஒரே தெருவிலோ அல்லது பக்கவாட்டுத் தெருக்களிலோ நள்ளிரவு ஒரு மணி இரண்டு மணி வரை நடக்கிறது. அப்புறம்தான் சாமியை நிலையில் நிறுத்துகிறார்கள்.

பாருங்க .,எங்க பெருமையைப் பாருங்க., எங்க ஆட்டத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் பாருங்க. ,என்று அறைகூவல் விடுகிறாற்போலக் கொண்டாடுகிறார்கள். ஆடித் தீர்க்கிறார்கள். குடித்து விட்டு ஆடும் கும்பல் போலவும் இல்லை . எல்லாம் இளைய பட்டாளம்தான். வெள்ளியன்று அம்மன் உருவத்தில் இருவர் ஆடியபடி வந்தார்கள். இவர்கள் ஒரு நீண்டகோல் கொண்டு ஆட அதில் ஆசி வாங்க முண்டியடித்தது கூட்டம்.

ஒன்றரை நாள், மூன்று நாள், ஐந்து நாள், ஏழு நாள், ஆனந்த சதுர்த்தசி( செப் - 8 இன்று ), சங்கஷ்டி சதுர்த்தி, ( செப் - 12 ) ஆகிய நாட்களின் கணேஷ் விசர்ஜனம் நிகழ்கிறது. இவ்வளவு கஷ்டப்பட்டு செய்த கணபதியைக் கடலில் குளத்தில் கிணற்றில் அல்லது ஏதேனும் ஒரு நீர் நிலையில் கரைக்கும் நிகழ்வுதான் அது.

இன்று ஹூசைன் சாகர் லேக்கில் விசர்ஜன் இருப்பதால் அங்கிருக்கும் அலுவலகங்களுக்கு விடுமுறை.மண்ணிலிருந்து உருவாக்கிய கணபதியை மண்ணிலேயே கரைந்துவிடும்படிச் செய்கிறார்கள்  என்றாலும் கணபதியைக் கரைக்கும் நிகழ்வு கடற்கரைகளில் கரைக்கிறேன் என்று சிலர் மிதித்தபடி கரைப்பது வருத்தம் தரவே செய்கிறது.

1 கருத்து:

  1. Thenammai Lakshmanan8 செப்டம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 5:38
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.