துர்க்கா லெக்ஷ்மி சரஸ்வதிப்யோ நமஹ.
முப்பெரும் தேவியரை வழிபடும் நவராத்திரி சமயங்களில் கொலு வைத்து வழிபடுவது தென்னிந்திய மாநிலங்களில் மட்டுமே உள்ள வழக்கம்.
கோயில்களிலும் கொலு வைப்பது உண்டு. வீடுகளிலும் தீம் வாரியாகக் கொலு வைப்பவர்கள் இருக்கிறார்கள். பார்க் , புல்தரை வீடுகள் கோயில்கள், ஃபவுண்டன் , மலை, இது தவிர புத்தகங்கள், ஸ்டாம்புகள், காயின் கலெக்ஷன்ஸ் இவற்றை கொலுவில் வைப்பவர்களும் பத்ரிக்கைகளில் படித்திருக்கிறேன்.
ரயில் நிலையங்கள் , ஸ்பேஸ் க்ராஃப்ட், பஸ்ஸ்டாண்டு, கிராமம் போன்ற தீமிலும் , சில விழிப்புணர்வு உண்டாக்கும் தீமிலும் சிலர் கொலு வைத்ததைப் பற்றிக் கேள்வியுற்றிருக்கிறேன்.
இங்கே காரைக்குடி கற்பக விநாயகர் கோவிலிலும் , புதுக்கோட்டை புவனேஷ்வரி அம்மன் கோயிலிலும், கும்பகோணத்தில் ஒரு தோழி வீட்டிலும், தங்கை கயல் வீட்டிலும் , நண்பர் அருண் வீட்டிலும் வைத்த கொலு ஃபோட்டோக்களை பகிர்ந்திருக்கிறேன்.
புதுக்கோட்டை புவனேஷ்வரி அம்மன் கோவிலில் 11 படி கொலு பர்ஃபெக்ட்.கொலு.
கொலு பொம்மைகளை ஏன் மண்ணில் செய்கிறோம், மேலும் கொலு ஏன் வைக்கிறோம் என்பது பற்றிய மேலதிக தகவல்களுக்கு இந்த லிங்கைப் பாருங்க.
எல்லாரிடமும் நல்ல மற்றும் தீய குணங்கள் உண்டு. தீய குணங்களை தீய சக்தியாக உருவகித்து அதைக் கடவுள் துணையோடு வெற்றி கொண்டு நன்மை மிளிர வாழவேண்டும் என்பதை வலியுறுத்தவும், அனைத்து உயிர்களின் மேலும் மனிதன் காருண்யத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தவும் இருக்கலாம்.
மனிதர் வாழ்வின் படிநிலைகளில் படிப்படியாய் உயர்ந்து மென்மேலும் மேன்மை நிலையை எட்டவேண்டும் என்பதே கொலு வைப்பது உணர்த்தும் செய்தி.
ஒவ்வொருவர் வாழ்விலும் தன்னம்பிக்கையும் ( துர்க்கை) , செல்வமும் ( லெக்ஷ்மி ), கல்வியும் ( சரஸ்வதி ) இன்றியமையாத சக்தி. இந்த நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவியரை வணங்கி அவர்களின் அருள் பெறுவோம்.
கோயில்களிலும் கொலு வைப்பது உண்டு. வீடுகளிலும் தீம் வாரியாகக் கொலு வைப்பவர்கள் இருக்கிறார்கள். பார்க் , புல்தரை வீடுகள் கோயில்கள், ஃபவுண்டன் , மலை, இது தவிர புத்தகங்கள், ஸ்டாம்புகள், காயின் கலெக்ஷன்ஸ் இவற்றை கொலுவில் வைப்பவர்களும் பத்ரிக்கைகளில் படித்திருக்கிறேன்.
ரயில் நிலையங்கள் , ஸ்பேஸ் க்ராஃப்ட், பஸ்ஸ்டாண்டு, கிராமம் போன்ற தீமிலும் , சில விழிப்புணர்வு உண்டாக்கும் தீமிலும் சிலர் கொலு வைத்ததைப் பற்றிக் கேள்வியுற்றிருக்கிறேன்.
பதினோருபடிகள் கொண்ட கொலு. |
மிச்ச ரெண்டு படி இங்கே. :) |
புதுக்கோட்டை புவனேஷ்வரி அம்மன் கோவிலில் 11 படி கொலு பர்ஃபெக்ட்.கொலு.
கும்பகோணம் தோழி வீட்டில் குட்டி கொலு 3 படிகள் மட்டுமே.
தங்கை கயல் வீட்டின் கொலு 5 படிகள் கொண்டது.
நண்பர் அருண் வீட்டில் இரட்டை வரிசை கொலு. 7 படியும் , 5 படியும்.
துர்க்கா லெக்ஷ்மி சரஸ்வதிப்யோ நமஹ.
கொலு பொம்மைகளை ஏன் மண்ணில் செய்கிறோம், மேலும் கொலு ஏன் வைக்கிறோம் என்பது பற்றிய மேலதிக தகவல்களுக்கு இந்த லிங்கைப் பாருங்க.
எல்லாரிடமும் நல்ல மற்றும் தீய குணங்கள் உண்டு. தீய குணங்களை தீய சக்தியாக உருவகித்து அதைக் கடவுள் துணையோடு வெற்றி கொண்டு நன்மை மிளிர வாழவேண்டும் என்பதை வலியுறுத்தவும், அனைத்து உயிர்களின் மேலும் மனிதன் காருண்யத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தவும் இருக்கலாம்.
மனிதர் வாழ்வின் படிநிலைகளில் படிப்படியாய் உயர்ந்து மென்மேலும் மேன்மை நிலையை எட்டவேண்டும் என்பதே கொலு வைப்பது உணர்த்தும் செய்தி.
ஒவ்வொருவர் வாழ்விலும் தன்னம்பிக்கையும் ( துர்க்கை) , செல்வமும் ( லெக்ஷ்மி ), கல்வியும் ( சரஸ்வதி ) இன்றியமையாத சக்தி. இந்த நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவியரை வணங்கி அவர்களின் அருள் பெறுவோம்.
sury siva3 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 10:04
பதிலளிநீக்குஎல்லா கொலுவும் ஒருங்கே இணைத்து காட்டியது படங்கள் இட்டது
வெகு அழகு.
கொலு ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி கிட்ட தேவி அருள் கிடைக்கட்டும்.
அது இருக்கட்டும்.
அது என்ன
சும்மா துர்கா லெக்ஷ்மி, சரஸ்வதி, ?
சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
பதிலளிநீக்கு
'பரிவை' சே.குமார்3 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 5:30
படங்கள் அழகு அக்கா...
பதிலளிநீக்கு
Yarlpavanan4 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 5:10
சிறந்த பக்திப் பதிவு
தொடருங்கள்
பதிலளிநீக்கு
கோமதி அரசு4 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 12:21
கொலு மிக அழகு.
முப்பெரும் தேவியரை வணங்கி அவர்களின் அருள் பெறுவோம்.//
அருள்பெறுவோம்.
வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan6 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 12:46
ஹாஹா சுப்பு சார் அதானே ப்லாக் பேரு.. அப்புறம் என்ன செய்றதாம் ::)
நன்றி குமார்
நன்றி யாழ்பாவண்ணன் சகோ
நன்றி கோமதி மேம்.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan6 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 12:46
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!