எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 30 அக்டோபர், 2020

தாம்பரம் வைத்தியநாதரும் இரட்டை விநாயகரும்.

தாம்பரம் வைத்தியநாதரும் இரட்டை விநாயகரும்.

தாம்பரத்தில் ( பெரும்பாக்கத்தில் ) கோயில் கொண்டிருக்கிறார்கள் இந்த வைத்தியநாதரும் & தையல்நாயகி அம்மனும் . அங்கே உள்ள ஒரு மெயின் ரோட்டில் இரட்டைப் பிள்ளையார் கோயில் ரொம்ப வித்யாசமாக இருந்தது.

இந்த பெரும்பாக்கம் வைத்தியநாதர் கோயில் கட்டப்பட்டு பதினைந்து ஆண்டுகள் ஆயிருக்கலாம். சமீபத்தில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு ஜொலிக்கிறது. அங்கங்கே வசதியான ஃப்ளாட்டுகள் இருக்கின்றன. ஆனால் கோயிலருகே அவ்வளவாக வீடுகள் இல்லை.

ஆனால் கோயில் ஜொலிக்கிறது. வெளியே ஒரு அரசமரமும் நாகர்களும் விநாயகரும்.
ஸ்ரீ வைத்தியநாதர் விடையேறு பாகனாகக் காட்சி அளிக்கிறார்.


தெற்கு நோக்கி தட்சிணா மூர்த்தி.


இந்தக் கோயிலில் ஒரு ஸ்பெஷல்

வைத்தியநாதர் சந்நிதியின் மேல் கோபுரத்தில் மூன்று பக்கமும் மும்மூர்த்திகள்.  அதே போல் அம்மன் சந்நிதியில் மேற்புறம் மூன்று பக்கமும் முப்பெரும் தேவியர் காட்சி அளிக்கிறார்கள்.

நீல நிற மஹா விஷ்ணு.
பிரகாரம். தூரத்தில் வீடுகள். ( அபார்ட்மெண்ட்ஸ் )
வடக்கு நோக்கி பிரம்மா. வெண் உடையில் பிரம்மா.
தட்சிணாமூர்த்தி.

அதே போல் அம்மன் சன்னதியின் மேல் கோபுரத்தில் ஒரு பக்கம் ஸ்ரீ வைஷ்ணவி. மேலே உள்ள சுதைச்சிற்பத்தில்  மஞ்சள் ஆடை . கீழே உள்ள சந்நிதியில் பச்சை ஆடை அணிந்த ஸ்ரீ வைஷ்ணவி.
இன்னொரு புறம் பச்சை ஆடை அணிந்த ஸ்ரீ பிரம்மகி.  கீழே உள்ள கோஷ்ட தெய்வம் ரோஸ் நிற ஆடை.
மூன்றாம் பக்கம் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி  மேலே செவ்வாடையும் கீழ் சந்நிதியில் செம்பட்டும்.
மிக மிகப் பிரம்மாண்ட தையல்நாயகி அம்சமாக அழகாகக் அருளாட்சி அளிக்கிறார்.  மேலே உள்ள அம்மன் சுதைச் சிற்பமும் ஜபமாலையும் தைலபாத்திரமும் அபய ஹஸ்த முத்திரையும் தாங்கி உள்ளது.
திவ்ய தரிசனம் முடித்து வெளிவந்தோம்.

முக்கிய விஷயம். இந்தக் கோவிலில் தெற்கு நோக்கிய கால பைரவரின் சந்நிதி வெகு சிறப்பு . இது அம்மன் சன்னிதிக்கு முன்பாக இறைவன் சந்நிதிக்கு எதிரில் அமைந்திருக்கிறது. ஞாயிற்றுக் கிழமை மாலை நாலரை - ஆறு மணிக்கும், அஷ்டமி தினங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இந்த பைரவர் இன்னும்  சிந்தையுள் நிரம்பி இருக்கிறார். உக்கிரத்திலும் ஒரு தெய்வீக அழகு. தைரியம் கொடுத்த பைரவர் என்றும் சொல்லலாம். நம்ம ஆரம்பம் முடிவு எல்லாம் இவருள் அடக்கம். காலமே இவருக்குக் கட்டுப்பட்டதுதான்.

ஒவ்வொரு சிவாலயத்திலும் இவர் சந்நிதியில்தான் அர்த்தஜாம பூஜை முடித்துக் கோவில் சாவியை ஒப்படைப்பார்கள். திரும்ப திருவனந்தலில் இவருக்கு முதல் பூஜை செய்து தீபம் காட்டியபின்புதான் கோவில் சாவியை எடுத்துக் கதவுகளைத் திறப்பார்கள். இக்கோயில் நடைமுறை தெரியவில்லை.  கட்டாயம் இவரையும் தரிசிச்சிட்டு வாங்க.

இந்த விநாயகர் மெயின் ரோட்டில் கோயில் கொண்டிருக்கிறார். இரட்டை விநாயகர்கள் ரொம்ப ஸ்பெஷல் ரொம்ப அழகு.இவருக்கு இரண்டு தேங்காய் சிதர்காய் உடைக்கிறார்கள். வழித்துணைக்கு நல்ல பக்கபலம். :)
தாம்பரத்தில் இந்த இரு கோயில்களுக்கும் கூட்டிச் சென்ற உறவினருக்கு மிக்க நன்றி.

1 கருத்து:

  1. iramuthusamy@gmail.com25 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:06
    தாம்பரம் பெரும்பாக்கத்தில் உள்ள கோவில் செய்திகள் படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan30 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 2:18
    நன்றி முத்துசாமி சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu5 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:56
    புதிய கோயிலா இருக்கு போலிருக்கே...இந்தக் கோயில்


    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan18 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 12:51
    ஆம் துளசி சகோ.

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.