எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 26 அக்டோபர், 2020

வயலினும் வீணையும் மீட்டும் கோபிகைகள்.

வயலினும் வீணையும் மீட்டும் கோபிகைகள்.

இரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவி கோயில் ஒரு சிற்பக் கலைக்கூடம். ஃபோட்டோகிராஃபர்ஸ் டிலைட் என்றும் சொல்லலாம். அங்கே தீட்டப்பட்டிருக்கும் இயற்கை வண்ண ஓவியங்களும் ஏ க்ளாஸ். காணக் கண்கோடி வேண்டும்.

சங்குசக்கரத்துடன் மஹாவிஷ்ணுவும்., அர்ஜுனருக்கு ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதை உபதேசித்த ஓவியமும். இதன் வரந்தையில் இருக்கும் திரை ஓவியங்களும் விதான வட்ட வடிவ ஓவியங்களும் கூட கண்கவர் அழகு.

நான்கு குதிரைகள் பூட்டிய தேர். குருஷேத்திரப் போர்க்களத்தைக் காட்டும்விதமாக பூமியின் சிவப்பு, அர்ஜுனனின் பவ்யம் கிருஷ்ணரின் உபதேசக்கோலம் எல்லாமே வெகு அழகு. சிந்தனை தெளிவுறுவதுபோல் தூரத்தே மேகம் வெளுப்பதும் கூட.


ஸ்ரீ மீனாக்ஷி திக்விஜயம். கயிலையில் சிவனுடன் பொருதும் தோற்றம். வெகு கம்பீரம். வெகு அழகு.


சிவபூஜை செய்யும் நான்முகன்.

லெட்சுமியும் சரஸ்வதியும் விசிறி ,கவரி வீச, கம்பீரமாக அரசாளும்  ஸ்ரீ ராஜராஜேஸ்வரி. கவரி ஒசிவதும், குடையின் குஞ்சங்களும், தேவியர் கரத்தின் பூக்களும் கீழே உள்ள ஓவியத்தில் குட்டி தேவதை தேவர்களும் , பக்கவாட்டில் குனிந்தும் நிமிர்ந்தும் காட்சி அளிக்கும் அன்னபட்சிகளும் அற்புதம்.
சங்கு ஊதும் தேவதைகள்.

கீழே தில்லை அம்பல நடராஜருடன் சிவகாமியும், பதஞ்சலியும் வியக்கிரபாதரும். இன்னொருவர் ஔவைப்பிராட்டி போன்ற தோற்றம் தருகிறார்.

வேழனும் வேலனும் வள்ளியும்.

வேழமுகத்தானைக் கண்டு வள்ளி மிரண்டு விருத்தனை அணைக்கும் கோலம்.

அழகிய அறுமுகனாய் வள்ளியை ஆட்கொண்ட ஷண்முகநாதனின் பசுந்தோகை விரித்த மயிலும் , அதன் காற்புறம் நாகமும் , தூரத்து வேழமும் கொள்ளை அழகு. குன்றிருக்கும் குமரன் என்பதால் ஓவியம் சூழக் குன்று காட்சி அளிக்கிறது.தன்னை ஆட்கொள்ளும் முருகனைப் பணியும் குறமகள்.

இவர்கள்தான் வயலினும் வீணையும் மீட்டும் காரிகைகள், கிருஷ்ணனை பிருந்தாவனத்தில் சூழ்ந்த கோபிகைகள். வித்யாசமான ஓவியம். தாமரைத் தடாகத்தில் தாமரையின் மேல் நிற்கும் கிருஷ்ணர். மரத்தின்மேல் நாகம் குடைபிடிக்க, கோவிந்தனின் கானத்தில் கோமாதா மயங்கிநிற்க, வலமும் இடமும் நிற்கும் பெண்மணிகள் வயலினும் வீணையும் இசைக்கிறார்கள். ஓவியரின் கற்பனாசக்தி அபாரமானது. !

ஆறுமுக ஸ்தபதி என்ற பெயரை அங்கங்கே பார்த்தேன். இவை எல்லாம் புராதன ஓவியங்களா இல்லை சென்ற நூற்றாண்டில் வரையப்பட்டனவா என்று தெரியவில்லை.
விடாமுயற்சிக்கு பகீரதன் தவம். கங்கை இறங்கி வருகிறாள். ஜடாமுடியில் தாங்கத் தயாராய் இடுப்பில் கைகளை வைத்துக் கால்களைத் திடமாக ஊன்றி நிற்கும் சிவன்.

பரமசிவன் கங்கையை வரவழைக்கும் இந்த ஓவியத்தை வரைந்தவர் சீர்காழி ஜி. கே. ரமேஷ்.

சிரசில் சந்திரன்சூடிய சிவனின் கம்பீரத் தோற்றம் அசரவைக்கிறது.  வேகமாகக் கீழிறங்கும் கங்கையும் வணங்கி நிற்கும் பகீரதனும்,  நந்தியும் பார்வதியும் நிற்கும் கோலம்.
தில்லை அம்பலம்.

கபால மாலையும் புலித்தோல் ஆடையும் அணிந்து இடதுகால் தூக்கி ஆடும் நடராஜரின் ஆடிய பாதத்தின் கீழ் பாம்பை அணைத்திருக்கும் முயலகன்.
அதே ராஜேஸ்வரி.
மீனாக்ஷி திருக்கல்யாணம். விதான ஓவியமாய்.

பிரம்மன் வேதியராய் ஹோமம் வளர்க்க, விஷ்ணு சகோதரனாய்த்  தாரை வார்க்க கைலாயபதி சிவன்  மதுரை மீனாக்ஷியின்  கைப்பிடிக்கிறார்.
கீழே உள்ள ஓவிய தேவர்களும் இரட்டை நாயனம் வாசிக்கிறார்கள்.

லெட்சுமி, சரஸ்வதி, பதஞ்சலி, வியாக்கிரபாதர், சுகப்பிரம்மரிஷி , நந்திதேவர், (குதிரை முக ஹயக்க்ரீவர் ? ) நாயன மேளக்காரர்கள், பூதகணங்கள், அகத்தியர், வேதியர் காட்சி அளிக்கிறார்கள்.
விதான/ விட்ட வட்ட ஓவியங்கள்.
டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.

1. அஷ்ட பைரவர்களும் 108 உக்கிர பைரவர்களும்.

2. துர்க்கை உள்ளே லெக்ஷ்மி வெளியே.

3. இராசிகளை ஆளும் இரணியூர் நீலமேகப் பெருமாளும் கனகவல்லித் தாயாரும். 

4. ஊருணிகள் - திருக்கோயில் புஷ்கரணிகளும் தாமரை பூத்த தடாகங்களும்.

5. இரணிக்கோயில் கோபுரங்களும் திருச்சுற்று மதிலில் பள்ளிகொண்டபெருமாளும் நான்முகனும். 

6. இரணிக்கோயில் படிச்சிற்பங்கள்.

7. இரணிக்கோயில் தூண்சிற்பத் திருமூர்த்தங்கள்

8. விருத்தன் திருமணமும் விடையேறு பாகன் திருவிளையாடல்களும். 


9. காமதேனுவும் கீதோபதேசமும் பட்டாபிஷேகமும்.

10. இரணியூரில் குபேர ஹோமமும் பச்சைக் குங்குமமும்.

11. இரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவியம்மன் கோவில்.

12. வயலினும் வீணையும் மீட்டும் கோபிகைகள்.

1 கருத்து:

  1. Thulasidharan V Thillaiakathu30 மே, 2018 ’அன்று’ முற்பகல் 9:02
    படங்களும் விவரணங்களும் அருமை சகோதரி/ தேனு

    பதிலளிநீக்கு

    திண்டுக்கல் தனபாலன்30 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:12
    ஆகா... ஆகா... என்னே கைவண்ணம்...!

    பதிலளிநீக்கு

    துரை செல்வராஜூ30 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 3:58
    அழகான படங்களுடன் இனிய தகவல்கள்..
    பயனுள்ளவை... வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு

    iramuthusamy@gmail.com31 மே, 2018 ’அன்று’ முற்பகல் 10:00
    இரணியூர் நகரத்தார் கோவில் ஓவியங்கள் நல்ல விளக்கம். ஓவியங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளனவோ?

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan21 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 9:32
    நன்றி கீத்ஸ்

    நன்றி டிடி சகோ

    நன்றி துரை சார்

    நன்றி முத்துசாமி சகோ. ஆம்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

நவக்ரஹக் கோலங்கள்.

 நவக்ரஹக் கோலங்கள்.