எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 28 அக்டோபர், 2020

சகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர்.

சகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர்.

சகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர்.

பைரவர்தான் காக்கும் தெய்வம் காவல் தெய்வம். ஒவ்வொரு கோட்டையிலும் பைரவர் காவல் தெய்வமாக இருப்பதைக் காண்கிறேன். தர்மபுரியின் அதியமான் கோட்டையிலும் கூட பைரவர்தான் காவல் தெய்வம்.  

சென்னைக்குச் செல்லும்போதும், திருச்சி புதுக்கோட்டைக்குச் செல்லும்போதும், வரும்போதும் இந்தத் திருமயம் கோட்டை பைரவரை தரிசித்துச் செல்வது வழக்கம். பஸ்ஸிலிருந்தே மக்கள் வேண்டுதல் பணத்தை கோயிலைக் கடக்கும்போது சாலைகளில் போடுவார்கள் முன்பு. இப்போது காரில் செல்பவர்கள் இங்கே தேங்காய் உடைத்து வழிபட்டுச் செல்கிறார்கள். 

வடக்கு பார்த்த சந்நிதி. இவரை வணங்கிச் சென்றால்  வாகன விபத்துக்கள் ஏற்படாது. வழித்துணை பைரவர். மேலும் தோஷங்கள் நீக்கும் கண்கண்ட தெய்வம்.

சகோதர ஒற்றுமை பலப்பட சந்தனாதி தைல அபிஷேகம் , சந்தனக் காப்பு, வடைமாலை, செவ்வரளிமாலை சாற்றி, நெய்தீபம் ஏற்றி ஏழுவாரம் செவ்வாய்க்கிழமைகளில் வழிபடுகிறார்கள். 

புதன்கிழமைகளில் மரிக்கொழுந்து மாலை அணிவித்து வழிபட்டால் கல்வியில் மேன்மை பெறலாமாம். மிளகு தீபமும் ஏற்றுகிறார்கள். புனுகு சாற்றி வழிபட்டால் பிதுர் தோஷம் நீங்குமாம்..லட்சார்ச்சனையோ கோடி அர்ச்சனையோ செய்து வழிபட்டால் குழந்தைப்பேறு உண்டாகுமாம். கார்த்திகை மாதம் இங்கு நடைபெறும் ஸ்ரீ பைரவாஷ்டமி விழா சிறப்புப் பெற்றது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று கூட்டம் அள்ளுகிறது.  

பள்ளிகொண்ட பெருமாள், சத்யகிரீஸ்வரர் ஆகியோர் குடைவரைக் கோயில்களில் அருள் பாலிக்க கோட்டை பைரவரோ கோட்டையின் சுவரிலேயே அருள்பாலிக்கிறார். அந்த வளைவில் சாலையில் திரும்பும்போது எதிரே தெரியும் மாபெரும் மடு போன்ற பாம்பாறு என்ற கண்மாயும், தென்னை பனை மரங்களின் வரிசையும் கோட்டை பைரவரின் ஓட்டமும் அரசாட்சியும் இருப்பதைப் புலப்படுத்தி மெய்சிலிர்க்க வைக்கும்.


வயதும் பக்குவமும் ஏற ஏற காலபைரவரின் அருளாசியுடன் நமக்குக் கொடுக்கப்பட்ட காலத்தை நன்முறையில் வாழ்ந்து செல்ல வேண்டும் என்ற வேண்டுகோள்களை இப்போதெல்லாம் சமர்ப்பித்து வருகிறேன்.

1 கருத்து:

  1. துரை செல்வராஜூ17 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 5:11
    இஷ்ட தெய்வமானவர் - ஸ்ரீவயிரவமூர்த்தி..

    செட்டிநாட்டின் பலபகுதிகளில் வயிரவ வழிபாடு பிரசித்தம்....
    முன்பு எல்லா வாகனங்களும் வயிரவரின் வாசல் வழியாகத்தான் செல்லும்...

    இப்போது திருமயத்தில் புறவழிச் சாலை அமைக்கப்பட்டு விட்டது...
    வாகனங்கள் அந்த வழியில் பறக்கின்றன...

    ஸ்ரீவயிரவமூர்த்தியைத் தரிசிக்க முடியாவிட்டாலும்
    அவரது அருள் கூடவே பாதுகாப்பாக வருகின்றது...

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan21 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 10:01
    ஆம் சார். இப்போது புறவழிச்சாலைகள் மூலமாகத்தான் போக்குவரத்து அதிகம் நிகழ்கிறது. நிச்சயமாக அவர் அருள் கூடவே வருகிறது. கருத்துக்கு நன்றி துரை சார்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.