எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 6 ஜூலை, 2020

நவக்ரஹ கோயில் தரிசனம் :- திங்களூர் சந்தோஷ வாழ்வருளும் சந்திர பகவான்

நவக்ரஹ கோயில் தரிசனம் :- திங்களூர் சந்தோஷ வாழ்வருளும் சந்திர பகவான்

திங்களூர் கும்பகோணத்தில் இருந்து 33 கிமீ தூரத்தில் உள்ளது. மூலவர் கைலாசநாதர். இறைவி பெரியநாயகி, நாவுக்கரசராலும் சுந்தரராலும் பாடல் பெற்ற தலம்.அப்பூதி அடிகளின் மகனைப் பாம்பு தீண்ட திருநாவுக்கரசர் இறைவனிடம் இறைஞ்சித் திருப்பதிகம் பாடி அவனை உயிர்ப்பித்த தலம்.

மிகச்சிறிய அழகான கோயில். இக்கோயில் கிழக்குமுகமாக பெரியநாயகி அம்மன் சந்நிதி அமைந்துள்ளது.. தெற்கு நோக்கிய சந்நிதியில் கைலாசநாதர் எழுந்தருளி உள்ளார். அவருக்கு எதிரில் எல்லாக் கோயில்களிலும் சந்திரன் சூரியன் இருக்கும் இடங்களில் அவர்கள் முறையே  எழுந்திருக்கிறார்கள். கோஷ்ட தெய்வமாக சிவனுக்கு எதிரில் வாயிற்புறத்தில் இடப்புற சந்நிதியில் எழுந்திருக்கும் சந்திரனே இத்தலத்தில் சந்திர பகவானாக வணங்கப்படுகிறார். 
 பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட ஐராவதம், உச்சைசிரவஸ், லக்ஷ்மி, அமிர்தம் ஆகியவற்றோடு அமிர்தகலசம் தாங்கி வெளிப்பட்டவர் சந்திரன்.



 சந்திரனின் நிறம் வெண்மை, வஸ்த்திரம் , ,தான்யம் பச்சரிசி, பிரசாதம், தயிர்சாதம், இரத்தினம் முத்து, மலர் வெள்ளை அரளி, வெண்தாமரை. தீர்த்தம் சந்திர புஷ்கரணி.  நீர்நிலைகளுக்கு அதிபதி. உலோகம் வெள்ளி.

இனிமையான சொல்லுக்கும் அழகிய வதனத்துக்கும்  தாயின் மேலான பாசத்துக்கும் சொந்தக்காரர் சந்திரன்.   அவருடைய கோயிலில் வெண்தாமரை மலர்  கிடைத்தது எனக்கு.

அம்புலி சந்திரன், இந்து, மதி, தண்மதி, இளமதி, சுதாகரன், சோமன், திங்கள், நிலவு, மதியம், என்ற வேறு பெயர்களால் விளங்கும் சந்திரனுக்குப் பகை கிரஹங்களே கிடையாது என்பது அற்புதமான விஷயம்.
தக்கனின் 27 மகள்களையும் மணந்த சந்திரன் ரோஹிணிமேல் மட்டும் அதீதக் காதல் கொண்டு வாழ்ந்துவர மற்ற மனைவியர் தந்தையிடம் வருந்துகிறார்கல். அனைவரிடமும் சம அளவு அன்பு செலுத்த தக்கன் கேட்டும் சந்திரன் செவிகொடாததால் சந்திரனின் கலைகள் அழியுமாறு தக்கன் சாபமிடுகிறார். அதனால் தேய்பிறை ஏற்பட மூலிகை வளங்கள் குன்றுகின்றன. இதைக்கண்ட தேவர்கள் சிவனை வணங்குமாறு சந்திரனிடம் கூறுகிறார்கள் . அவரும்  கைலாயநாதரை வணங்க அவர் சாபம் நீங்கிப் புதுப்பொலிவு பெற்றெழுகிறார். அதனால்  புரட்டாசி பங்குனி மாதங்களில் தன்னுடைய சாபம் தீர்த்த சிவபெருமான்மேல் சந்திரனின் கிரணங்கள் விழுந்து வணங்குகின்றன.
ஒவ்வொரு ராசிக்கும் சந்திரன் அஷ்டமத்துக்கு வரும் நாட்களை சந்திராஷ்டமம் என்று சொல்வார்கள். அன்று முக்கிய முடிவுகளை எடுக்காதிருத்தல், சுபகாரியம் செய்யாதிருத்தல், கடன் வாங்கவோ வழங்காமலோ இருத்தல் நலம். ஏனெனில் அவை நீண்டுகொண்டே போகும். மேலும் அத்தினங்களில் மனம் குழப்பமும் சஞ்சலமும் உறுவதால் எடுக்கும் முடிவுகளில் குளறுபடி உண்டாகும். எந்தக் காரியத்தைத் தொட்டாலும் இழுபறியாகும். எனவே அத்தினங்களில் யாருடனும் வாக்குவாதம் செய்யாமல் அமைதியாக இருப்பது உத்தமம்.


முதலில் சென்று வணங்கிய  ஆலங்குடி குருவிடம் இருந்து வெண்முல்லைப்பூக்களும் ஒன்பதாவதாகச் சென்று வணங்கிய சந்திரனிடமிருந்து வெண்தாமரையும் கிடைத்ததை விசேஷமாகக் கருதுகிறேன். நான் ஆசைப்பட்ட நவக்ரஹ கோயில் தரிசனத்தைப் பணத்தைப் பாராமல் அலுவலக நாட்களிலும் காலை மாலை என நேரம் ஒதுக்கி அலைச்சலையும் பொருட்படுத்தாமல் உடன் வந்து தரிசித்த என் அன்புக் கணவருக்கும் நன்றிகள்.

சந்திர காயத்ரி 
 
ஓம் பத்மத்வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தன்னஸ் சந்திரஹ் ப்ரசோதயாத்

சந்திராஷ்டமத்தால் ஏற்படும் தொல்லைகள் நீங்க  சந்திர பகவான் துதி :-

ஸ்வேதாம்பரான் விததனும் வரஸுப்ரவர்ணம்
ஸ்வேதாஸ்வயுக்தரதகம் ஸுரஸேவிதாங்க்ரிம்
தோர்ப்யாம் த்ருதாபயவரம் வரதம் ஸுதாம்ஸும்
ஸ்ரீவத்ஸ மௌக்திக தரம் ப்ரணமாமி நித்யம்.

எங்கள் குறைகளெல்லாந் தீர்க்கும்
திங்களே போற்றி திருவருள் தருவாய்
சந்திரா போற்றி சற்குணா போற்றி
சங்கடந் தீர்ப்பாய் சதுராய் போற்றி

அலைகடல் அதனில் நின்றும் அன்று வந்து உதித்தபோது
கலைவளர் திங்களாகிக் கடவுளார் எவரும் ஏத்தும்
சிலைமுதல் உமையாள் பங்கன் செஞ்சடைப் பிறையாய்
மேரு மலை வலமாய் வந்த மதியமே!


"ஓம் ஸ்ரம் ஸ் ரீம் ஸ்ரௌம் ஷக் சந்திராய நமஹ",
சந்திர ஸ்தோத்திரம் 
ததி சங்க துஷாராபம்
ஷீரோதார்ணவஸம்பவம்!
நமாமி சசினம் ஸோமம்
சம்போர் மகுடபூஷணம்!!


டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

1. நவக்ரஹ கோயில் தரிசனம் - ஆலங்குடி ஆலமர் ஈசன். 

2.  நவக்ரஹ கோயில் தரிசனம் :- புள்ளிருக்குவேளூரில் மங்களம் தரும் அங்காரகன்.

3. நவக்ரஹ கோயில் தரிசனம் :- திருவெண்காடு பிள்ளை இடுக்கி அம்பாளும் புதபகவானும்

4. நவக்ரஹ கோயில் தரிசனம் :- கீழப்பெரும்பள்ளம் கேண்மை மிக்க கேதுபகவான்

5. நவக்ரஹ கோயில் தரிசனம்:- கஞ்சனூரில் சுபம், சுகமீயும் சுக்கிரமூர்த்தி

6. நவக்ரஹ கோயில் தரிசனம். :- சூரியனார் கோவிலில் சிவசூரியநாராயணரை நோக்கும் மங்களகுரு..

7. நவக்ரஹ கோயில் தரிசனம்:- திருநள்ளாறு சாயாபுத்திரன் சனி பகவான்.

8. நவக்ரஹக் கோயில் தரிசனம்:- திருநாகேஸ்வரம் ராஜவாழ்க்கை நல்கும் ராகுபகவான்

9. நவக்ரஹ கோயில் தரிசனம் :- திங்களூர் சந்தோஷ வாழ்வருளும் சந்திர பகவான் 

1 கருத்து:

  1. Thulasidharan V Thillaiakathu30 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 10:44
    திங்களின் கதை அறிந்தோம்..27 மனைவிகள் ரோகிணியை அதிகம் விரும்பியது தக்கன் சாபம் (நட்சத்திரம்) தேய்பிறை என்ற கதையை இப்போதுதான் தெரிந்து கொண்டோம்...


    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan17 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 11:38
    nandri Tulsi sago

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

ஹனுமத் ஜெயந்தி கோலங்கள்

ஹனுமத் ஜெயந்தி கோலங்கள்  இந்தக் கோலங்கள்  22.12.2022 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.