எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 28 ஜூன், 2020

நவக்ரஹ கோயில் தரிசனம். :- சூரியனார் கோவிலில் சிவசூரியநாராயணரை நோக்கும் மங்களகுரு..

நவக்ரஹ கோயில் தரிசனம். :- சூரியனார் கோவிலில் சிவசூரியநாராயணரை நோக்கும் மங்களகுரு..

சூரியனின் பொன்னிறக் கதிர்கள் எங்கெங்கும் பிரகாசமாகப் பரவி இருக்க மந்தகாசமான அந்த அதிகாலை வேளையில் சூரியனார் கோவிலுக்குள் நுழைந்தோம். ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக் கின்ற தாய்போல கதகதப்பாக எம்மைச் சூழ்ந்திருந்தார் சூரியனார்.
நவக்ரஹங்களில் முதன்மையானவர். நவக்ரஹங்களின் நாயகன். பயிர்பச்சைகள் உயிர்த்தெழக் காரணமானவர். இந்த உலகத்தைத் தன் கிரணங்களால் தினம் புதிப்பிப்பவர். ஏழுகுதிரைகள் பூட்டிய இரதத்தில் வலம் வருபவர். அதிகாரம் தலைமைப்பண்புக்குக் காரணமானவர். ஆளுமைத்தன்மை மிக்கவர். சூரியனிலிருந்து வெடித்துச் சிதறியதுதான் பூமி ( பிக்பாங் தியரி ) என்பது அறிவியல் கூற்று.

சூரியன். சூரியனுக்காக எழுப்பப்பட்டுள்ள கோயில் கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோயில்.  குலோத்துங்க சோழனால் கிபி பதினோராம் நூற்றாண்டு கட்டப்பட்டது.


இறையவன் சிவசூரியன் , தேவியர் உஷாதேவி, சாயாதேவி, தீர்த்தம்  சூர்யா தீர்த்தம். நிறம்  சிவப்பு, சிவப்பு வஸ்த்திரம் ,மலர் செந்தாமரை & வெள்ளெருக்கம்பூ, நவரத்தினம் சிவப்புக் கல் ( ரூபி ). தான்யம் கோதுமை, நைவேத்தியம் சர்க்கரைப் பொங்கல்.
சிவனே சிவசூரியப் பெருமானாக எழுந்தருளி உள்ளார்.  சூரிய பெருமான் இங்கேயே நவக்ரஹ அமைப்பிலேயே எழுந்தருளி உள்ளார். இப்படி நவக்ரஹ அமைப்பில் உள்ள ஒரே கோயில் இதுதான். அதேபோல் சூரியனுக்காக எழுப்பப்பட்டுள்ள மூன்று கோயில்களில் இதுவும் ஒன்று. மற்றவை  கொனார்க்கில் உள்ள சூரியனார் கோயிழும், குவாலியரில் உள்ள விவஸ்வான் மந்திரும்.. தென்னகத்தில் உள்ள ஒரே சூரியன் கோயில். நவக்ரஹங்களுக்கு வாகனம் இல்லை.
காலவ மகரிஷிக்குத் தொழுநோய் நீங்க நவக்ரஹங்கள் அருளியதால் அனுமதி மீறியதாகக் கோபமுற்ற பிரம்மன் நவக்ரஹங்களுக்கும் தொழுநோய் பீடிக்க சாபமிடுகிறார். அதனால் அவர்கள் இங்கே வெள்ளெருக்கு வனத்திற்கு வந்து சிவனை நோக்கித் தவம் செய்ய சிவன் அருள்பாலித்து அவர்கள் நோயைநீக்கி அவர்களை வணங்குபவர்களுக்கும் மங்களம் உண்டாக்குமாறு அருள் புரிகிறார்.

இவரது உக்ரம் அதிகமாக இருப்பதால் சன்னதிக்குள்ளேயே இவரது எதிரில் குருபகவான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். எனவே இங்கு பூஜை செய்ய அர்ச்சனைத் தட்டு வாங்கினால் சிவசூரியனுக்கும், குருவுக்கும் சேர்த்து செந்நிற வஸ்திரமும் மஞ்சள் வஸ்திரமும்  தருகிறார்கள். சூரியனை நோக்கி நந்திக்குப் பதிலாக இங்கே குதிரை இருக்கிறது. அச்வத்வஜாய வித்மஹே !
ரதசப்தமி விசேஷம். பாஸ்கரன், ரவி, ஆதித்யன், தினகரன், சூர்யன், ஹிரண்யகர்பன், பிரஜாபிராணன், ருதுகர்த்தா, பிரபாகரன், ஸவிதா,பானு, திவாகரன், ரௌத்ரன், விஸ்வகர்மன், ராகவன், ஆகிய பெயர்கள் சூரியனுக்கு உரியவை.

கும்பகோணத்தில் இருந்து 18 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
இவரை வணங்கினால் கண் நோய்கள் தீரும். உஷ்ணத்தால் ஏற்படும் உபாதைகளும் உஷ்ணாதிக்க நோய்களும் தீரும். வீட்டிலேயே ஆவணி ஞாயிறு அன்று கற்கண்டுப் பொங்கல் வைத்து சூரியனை வழிபடலாம். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.
ஸூர்ய காயத்ரி

ஓம் அச்’வத்வஜாய வித்மஹே
பாச’ ஹஸ்தாய தீமஹி
தன்ன: ஸூர்ய: ப்ரசோதயாத்

ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹத்யுதிகராய தீமஹி
தன்ன: ஸூர்ய: ப்ரசோதயாத்

ஓம் தினகராய பாஸ்கராய
ஜ்யோதிஸ்வ ரூபாய
சூர்ய நாராயணாய தேவாய
நமோ நமஹ


சூர்ய நமஸ்கார மந்திரங்கள்
ஓம் மித்ராய நம:
ஓம் ரவயே நம:
ஓம் சூர்யாய நம:
ஓம் பானவே நம:
ஓம் ககாய நம:
ஓம் பூஷ்ணே நம:
ஓம் ஹிரண்ய கர்ப்பாய நம:
ஓம் மரீசய நம:
ஓம் ஆதித்யாய நம:
ஓம் ஸவித்ரே நம:
ஓம் அர்க்காய நம:
ஓம் பாஸ்கராய நம:

சூரிய நமஸ்காரம் முடிந்ததம் சூரியனையும் மற்ற நவகிரகங்களையும் நமஸ்கரிக்கும் மந்திரம்

நம ஸூர்யாய ஸோமாய அங்காரகாய புதாயச
குரு சுக்ர சனிப்யஸ்ச ராகவே கேதவே நமஹ.


நான் தினமும் சொல்லும் ஆதித்ய ஹிருதயம். :-

ஆதித்ய ஹ்ருதய ப்ராரம்ப:

ததோ யுத்தபரிச்’ராந்தம் ஸமரே சிந்தயா ஸ்த்திதம்
ராவணம் சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம்                     1

தைவதஶ்ச ஸமாகம்ய த்ரஷ்டு மப்யாகதோ ரணம்
உபாகம்யா ப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவாந் ரிஷி:                           2

ராம ராம மஹாபாஹோ ஶ்ருணு குஹ்யம் ஸநாதநம்
யேந ஸர்வாநரீந் வத்ஸ ஸமரே விஜயிஷ்யஸி                              3

ஆதித்யஹ்ருதயம் புண்யம் ஸர்வஶத்ரு விநாஶநம்
ஜயாவஹம் ஜபேந்நித்யம் அக்ஷய்யம் பரம்ம் ஶிவம்                              4

ஸர்வமங்கள மாங்கள்யம் ஸர்வபாப ப்ரணாஶநம்
சிந்தாஶோக ப்ரஶமநம் ஆயுர்வர்தந முத்தமம்                                        5

ரஶ்மிமந்தம் ஸமுத்யந்தம் தேவாஸுர நமஸ்க்ருதம்
பூஜயஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரம் புவனேஶ்வரம்                                6

ஸர்வதேவாத்மகோ ஹ்யேஷ தேஜஸ்வீ ரஶ்மிபாவந:
ஏஷ தேவாஸுரகணாந் லோகாந் பாதி கபஸ்திபி:                                  7

ஏஷ ப்ரஹ்மா ச விஷ்ணுஶ்ச ஶிவ: ஸ்கந்த: ப்ரஜாபதி:
மஹேந்த்ரோ தநத: காலோ யம: ஸோமோ ஹ்யபாம்பதி:                    8

பிதரோ வஸவ: ஸாத்யா ஹ்யஶ்விநௌ மருதோ மநு:
வாயுர் வஹ்நி: ப்ரஜாப்ராண: ருதுகர்த்தா ப்ரபாகர:                               9

ஆதித்ய: ஸவிதா ஸூர்ய: கக: பூஷா கபஸ்திமாந்
ஸுவர்ண ஸத்ருஶோ பாநுர் ஹிரண்யரேதா திவாகர:                         10

ஹரிதஶ்வ: ஸஹஸ்ரார்சி: ஸப்தஸப்திர் மரீசிமாந்
திமிரோந்மதந: ஶம்புஸ் த்வஷ்டா மார்தாண்ட அம்ஶுமாந்               11

ஹிரண்யகர்ப: ஶிஶிரஸ்தபநோ பாஸ்கரோ ரவி:
அக்நிகர்ப்போ அதிதே: புத்ர: ஶங்க: ஶிஶிரநாஶந:                                            12

வ்யோமநாதஸ் தமோபேதீ ரிக் யஜுஸ்ஸாம பாரக:
கநவ்ருஷ்டி ரபாம் மித்ர: விந்த்யவீதீ ப்லவங்கம:                         13

ஆதபீ மண்டலீ ம்ருத்யு: பிங்கல: ஸர்வதாபந:
கவிர் விஶ்வோ மஹாதேஜா ரக்த: ஸர்வ பவோத்பவ:                            14

நக்ஷத்ர க்ரஹதாராணாம் அதிபோ விஶ்வபாவந:
தேஜஸாமபி தேஜஸ்வீ த்வாதஶாத்மந் நமோஸ்து தே                            15

நம: பூர்வாய கிரயே பஶ்சிமாயாத்ரயே நம:
ஜ்யோதிர் கணாநாம் பதயே திநாதி பதயே நமோ நம:                          16

ஜயாய ஜயபத்ராய ஹர்யஶ்வாய நமோ நம:
நமோ நம: ஸஹஸ்ராம்ஶோ ஆதித்யாய நமோ நம:                               17

நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம:
நம: பத்மப்ரபோதாய மார்தாண்டாய நமோ நம:                                     18

ப்ரஹ்மேஶா நாச்யுதேஷாய ஸூர்யாய ஆதித்ய வர்ச்சஸே
பாஸ்வதே ஸர்வபக்ஷாய ரௌத்ராய வபுஷே நம:                                   19

தமோக்நாய ஹிமக்நாய ஶத்ருக்நாயா மிதாத்மநே
க்ருதக்நக்நாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம:                                  20

தப்த சாமீகராபாய வஹ்நயே விஶ்வகர்மணே
நமஸ்தமோபிநிக்நாய ரவயே லோகஸாக்ஷிணே                                     21

நாஶயத்யேஷ வை பூதம் ததேவ ஸ்ருஜதி ப்ரபு:
பாயத்யேஷ தபேத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபி:                                  22

ஏஷ ஸுப்தேஷு ஜாகர்தி பூதேஷு பரிநிஷ்டித:
ஏஷ ஏவாக்னிஹோத்ரம் ச பலம் சைவாக்னிஹோத்ரிணாம்              23

வேதாஶ்ச க்ரதவஶ்சைவ க்ரதூநாம் பலமேவ ச
யாநி க்ருத்யாநி லோகேஷு ஸர்வ ஏஷ ரவி ப்ரபு:                                   24

ஏநமாபத்ஸு க்ருச்ச்ரேஷு காந்தாரேஷு பயேஷு ச
கீர்தயந் புருஷ: கஶ்சித் நாவஸீததி ராகவ                                                  25

பூஜயஸ்வைந மேகாக்ரோ தேவதேவம் ஜகத்பதிம்
ஏதத் த்ரிகுணிதம் ஜப்த்வா யுத்தேஷு விஜயிஷ்யஸி                             26

அஸ்மிந் க்ஷணே மஹாபாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி
ஏவமுக்த்வா ததாகஸ்த்யோ ஜகாம ச யதாகதம்                                      27

ஏதச் ச்ருத்வா மஹாதேஜா நஷ்டஶோகோ(அ)பவத்ததா
தாரயாமாச ஸுப்ரீதோ ராகவ: ப்ரயதாத்மவாந்                                     28

ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து பரம் ஹர்ஷ மவாப்தவாந்
த்ரிராசம்ய ஶுசிர் பூத்வா தநுராதாய வீர்யவாந்                                               29

ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்டாத்மா யுத்தாய ஸமுபாகமத்
ஸர்வயத்நேந மஹதா வதே தஸ்ய த்ருதோ (அ)பவத்                             30

அத ரவி ரவதந் நிரீக்ஷ்ய ராமம் முதித மநா: பரமம் ப்ரஹ்ருஷ்யமாண:
நிஶிசரபதி ஸம்க்ஷயம் விதித்வா ஸுரகண மத்யகதோ வசஸ்த்வரேதி 31


டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

1. நவக்ரஹ கோயில் தரிசனம் - ஆலங்குடி ஆலமர் ஈசன். 

2.  நவக்ரஹ கோயில் தரிசனம் :- புள்ளிருக்குவேளூரில் மங்களம் தரும் அங்காரகன்.

3. நவக்ரஹ கோயில் தரிசனம் :- திருவெண்காடு பிள்ளை இடுக்கி அம்பாளும் புதபகவானும்

4. நவக்ரஹ கோயில் தரிசனம் :- கீழப்பெரும்பள்ளம் கேண்மை மிக்க கேதுபகவான்

5. நவக்ரஹ கோயில் தரிசனம்:- கஞ்சனூரில் சுபம், சுகமீயும் சுக்கிரமூர்த்தி

6. நவக்ரஹ கோயில் தரிசனம். :- சூரியனார் கோவிலில் சிவசூரியநாராயணரை நோக்கும் மங்களகுரு..

7. நவக்ரஹ கோயில் தரிசனம்:- திருநள்ளாறு சாயாபுத்திரன் சனி பகவான்.

8. நவக்ரஹக் கோயில் தரிசனம்:- திருநாகேஸ்வரம் ராஜவாழ்க்கை நல்கும் ராகுபகவான்

9. நவக்ரஹ கோயில் தரிசனம் :- திங்களூர் சந்தோஷ வாழ்வருளும் சந்திர பகவான் 

1 கருத்து:

  1. Thulasidharan V Thillaiakathu29 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 2:22
    சூரியனார் கோயிலைப் பற்றித் தெரிந்து கொண்டோம். சூரியன் இல்லையேல் இவ்வுலகே இல்லையே! ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்...

    பதிலளிநீக்கு

    G.M Balasubramaniam30 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 11:16
    1990ம் ஆண்டு என் மூத்தமகனின் திருமணம் நிச்சயமாயிருந்தநேரம் நண்பர் ஒருவர் மணமக்கள் சூரியனார் கோவிலுக்குச் சென்று வருதல் நலம்ப்யக்கும் என்றார் என் மகனும் அப்போது வருங்கால மருமகளும் பயணிக்க ஆர்வம் காட்ட அந்தக் கோவிலுக்குச் சென்றிருக்கிறோம்

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan17 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 11:36
    unmaithan Tulsi sago

    fantastic Bala sir. !

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

வைகுண்ட ஏகாதசிக் கோலங்கள்

வைகுண்ட ஏகாதசிக் கோலங்கள்  இந்தக் கோலங்கள்  5. 1. 2023  குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.