எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

காஞ்சி அத்திவரதரும் அரியக்குடி திருவேங்கடமுடையானும்.

காஞ்சி அத்திவரதரும் அரியக்குடி திருவேங்கடமுடையானும்.

வைகுண்ட ஏகாதசியும் சிவராத்திரியும் இந்துக்கள் கடைப்பிடிக்கும் விரதத் திருநாட்கள்.

பெருமாள் பக்தர்கள் வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்து கோயிலுக்குச் சென்று பெருமாளைத் தரிசித்துச் சொர்க்க வாசல் வழியாகச் செல்வார்கள்.

காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலிலும் அரியக்குடி திருவேங்கடமுடையான் ஸ்தலத்திலும் எடுத்த சில படங்களைத் தெரிந்த தகவல்களுடன்  பகிர்கிறேன்.

காஞ்சி அத்தி வரதர் கோயில்  44 ஆவது திவ்ய தேசம்.  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. இங்கே உள்ள சிற்பவேலைப்பாடுகளும் கற்சங்கிலிகளும்,சிம்மங்களும் குதிரை வீரர்களும் காணக்கண்கோடி வேண்டும். 96 அடி உயரமுள்ள ராஜகோபுரம்.

இந்தக் கோயில் முழுக்கக் கல்வெட்டுகள். நடக்கும் படிகளில் கூட. நான் எடுத்த அநேக புகைப்படங்கள் பழைய போனிலும் லாப்டாப்பை ஃபார்மேட் செய்ததிலும் காணாமல் போய்விட்டன. :(

24 படி கொண்ட சிறு குன்றின் உச்சியில் அமைந்த சன்னதி அத்திகிரி வரதருடையது. காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களை அந்த 24 படிகள் குறிக்கிறதாம். பெருந்தேவி தாயாருக்குத் தனிச்சன்னதி உள்ளது. வெள்ளிப் பல்லி, தங்கப்பல்லி, ஆகியன சிறப்பு. திருக்குளத்தில் - அனந்தசரஸ் தீர்த்தத்தில் இருக்கும் அத்தி வரதரைக் கொடுப்பினை இருந்தால் 2019 இல் தரிசிக்கலாம். 40 வருடத்துக்கு ஒரு முறையே தரிசிக்கலாமாம் !

இங்கே இருக்கும் சுதர்சனச் சக்கரத்தாழ்வார் 16 கரங்களுடன் பிரம்மாண்டமாகக் கண்ணைக் கவர்கிறார். இவர் சன்னதியைச் சுற்றி 12 சக்கரத்தாழ்வார் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருமங்கை ஆழ்வாரால்  மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யஷேத்திரம் இது.

காஞ்சி வரதரைத் தரிசிக்க வந்த அழகுக் குழந்தைத் தெய்வம். 
96 அடி உயர ராஜ கோபுரம்.
அனந்தசரஸ் தீர்த்தம்.
அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் உலகச் சிறப்பு வாய்ந்தது. சுயம்பு மூர்த்தி. சேவுகன் செட்டியார் என்பவர் இக்கோயிலைக் கட்டியுள்ளார். ராமானுஜர் காலத்தில் இதன் உற்சவமூர்த்தி கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் பள்ளியறைக் கதவு. அதன் பக்கம் பெரிய திருவடியும் சிறிய திருவடியும்.


மிக அழகான ஓவியங்கள் இங்கும் காஞ்சிஅத்தி வரதர் கோயிலிலும். காய்கறிச் சாறுகளால் வரையப்பட்ட இயற்கை வண்ண ஓவியங்கள். காலங்களால் அழியாமல் நீடித்து இருக்கின்றன.
திருச்சுற்று மாளிகைப் பத்தி. மிகப் பெரியது & நீண்டது.
அரியக்குடிக் கோயில் தூண் சிற்பங்கள் அழகானவை. இவர் கோதண்டராமர்.
அஞ்சனை மைந்தர்.
கீழே இருக்கும் இந்தச் சிற்பத்தின் விவரம் தெரியவில்லை.
பாண்டுரங்க விட்டலன். பண்டரிநாதன்.
சுற்றுத் தூணில்வைணவத் திருச்சின்னங்கள்
மூலவரின் நேர் பின்புறச் சுற்றுப் பத்தியில் பொறிக்கப்பட்டு இருக்கும் வைணவச் சின்னங்கள்.
மிக மிக விசேஷமான சக்தி வாய்ந்த மூலைக் கருடன் சன்னதி.
அடுத்த இடுகையில் அரியக்குடி திருவேங்கடமுடையானின் கோயில் பற்றிப் பகிர்கிறேன்.

இவ்விரண்டு ஸ்தலங்களிலும் சக்கரத்தாழ்வார் சிறப்புப் பெற்றிருக்கிறார். தனித்தனிக் கோயில்கள் அமைந்துள்ளன.

வைகுண்ட் ஏகாதசி அன்று கண் விழித்து விரதமிருந்து சொர்க்க வாசல் சென்று மறுநாள் துவாதசி பாரணையுடன் நிறைவு செய்வார்கள்.

1 கருத்து:

  1. வெங்கட் நாகராஜ்9 ஜனவரி, 2017 ’அன்று’ முற்பகல் 7:21
    படங்களும் பகிர்வும் நன்று.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu9 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 3:07
    தகவல்களுடன் கூடிய படங்கள் அருமை! பகிர்வுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு

    G.M Balasubramaniam9 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 5:26
    இந்தவருடம் வைகுண்ட ஏகாதசிக்கு இங்கிருக்கும் வயாலிக்காவல் வேங்கட முடையான் கோவிலுக்கு (ttd கோவில்) என் மனைவிக்கு தரிசனப் பாஸ் வந்தது அடியேனும் சென்றேன் விரதமேதும் இருக்கவில்லை

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan18 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 8:36
    நன்றி வெங்கட் சகோ

    நன்றி துளசி சகோ

    நன்றி பாலா சார்

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan18 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 8:37
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

    வை.கோபாலகிருஷ்ணன்21 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 6:55
    ’காஞ்சி அத்திவரதரும் அரியக்குடி திருவேங்கடமுடையானும்’ என்ற தலைப்பினில் கொடுத்துள்ள இந்த முதல் பகுதி அழகான படங்களுடனும், கல் சிற்பங்களுடன் மிகச் சிறப்பாக உள்ளன. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan31 ஜனவரி, 2017 ’அன்று’ முற்பகல் 6:27
    தங்கள் அழகான பதிலுக்கு மிக்க நன்றி விஜிகே சார்

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.