எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 21 ஏப்ரல், 2020

கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்

கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்

கானாடுகாத்தானில் சக்தி வாய்ந்த மங்கள ஆஞ்ஜநேயர் கோயில் இருக்கிறது. துணையுடன் காட்சி தரும் ஆஞ்சநேயர் இங்கே அருள்பாலிக்கிறார். என்னது ஆஞ்சநேயருக்குத் துணைவியா.. ஆச்சர்யமா இருக்கில்ல.. ஆமாம். தன் மனைவி சுசீலையுடன் இங்கே அவர் காட்சி அளிக்கிறார் கோபுரத்தில். அவருக்கு ஒரு மகனும் உண்டு. அவர் பெயர் மகரத்துவஜன்.

கானாடு காத்தானில் இருக்கும் பிள்ளையார் கோயில், ஊரணி, அரண்மனை, பூங்கா ஆகியவற்றையும் எடுத்தேன். அவற்றில் சில புகைப்படங்களைப் பகிர்கிறேன்.

கானாடு காத்தான் எண்ட்ரன்ஸிலேயே இந்தக் கோயில் இருக்கு. சுற்றி வயல்களும் , பை பாஸ் ரோடுமாக ஒரே ஏகாந்தத்தில் லயித்திருக்கிறார் மங்கள ஆஞ்சநேயர். சனிக்கிழமைகளில் கூட்டம் கொள்ளாது. வெற்றிலை மாலை, வெண்ணெய்க் காப்பு, வடை மாலை சாற்றுபவர்கள் அதிகம்.

சிங்கங்கள் காவல் இருக்க நான்கு பக்கங்களிலும் கோபுரத்தைச் சுற்றி அழகழகான ஆஞ்சநேயர்கள்.

////அதலித பலதாமம் ஸ்வர்ண சைலாபதேஹம்
துநுஜவன க்ருசாநும் ஞானினாமக்ரகண்யம் |
ஸகல குணநிதானம் வானராணாமதீசம்
ரகுபதிவரதூதம் வாதஜாதம் நமாமி || 

ஆஞ்சநேய ஸ்வாமியைப் பற்றிய ச்லோகம்.////

-- துளசிதாசர் இயற்றிய ராமசரிதமானஸ்.


பஞ்சமுக ஆஞ்சநேயர்.
வீரதீர ஆஞ்சநேயர்.
சஞ்சீவி மலை கொணர்ந்த ஆஞ்சநேயர்.


ஹனுமன், நரசிம்மர், வராஹர் , ஹயக்ரீவர், கருடன். ஆகிய ஐந்து முகங்கள் சேர்ந்த பஞ்சமுக ஆஞ்சநேயர் .
மனைவி சுசீலையுடன் காட்சி அளிக்கும் மங்கள ஆஞ்சநேயர்.
இதுதாங்க எங்கூருப் பூங்கா. இங்கே உள்ளே போனதில்லை. போறபோக்குல ஒரு க்ளிக் :) ( எங்கூருலயும் பூங்கா இருக்காக்கும்னு காமிக்க :)
கானாடுகாத்தான் பட்டிப் பிள்ளையார் கோயில் . இங்கே பழையூரில் சிவன்கோயிலும் பெருமாள் கோயிலும் இருக்கு. மிக மிக அழகான கட்டுக்கோப்பான ஊருங்க எங்க ஊரு. :) ரோடுதான் சரியா இருக்காது.
பூங்கா & கோயிலை ஒட்டிக் கண்ணைக் கவர்ந்த பெருமரத்தண்டு.
பிள்ளையார் கோயில் ஊரணி. நிரம்பி வழியுது. அதோ தெரியும் மண்டபம்தான் மாப்பிள்ளை அழைக்கும் மண்டபம். வெளியூர் மாப்பிள்ளைகள் திருமணத்தன்று காலையில் இங்கேதான் வந்து இறங்குவார்கள். பிள்ளையாரைக் கும்பிட்டு அர்ச்சனை செய்துவிட்டு இங்கேருந்துதான் பெண் வீட்டுக்கு மேளதாளத்தோடு மாப்பிள்ளை அழைப்பார்கள்.
தூரத்தே தெரியிறதுதான் ராசாவீடு. அதாங்க செட்டிநாட்டு அரண்மனை.
படித்துறைகளைப் பாருங்க எவ்ளோ அழகா இருக்கு. ஒரு குப்பை , தூசி இல்லை. வேலி போட்டுப் பராமரிக்கிறாங்க ஊரணியை. மீன்கள் துள்ளிக் கொண்டு இருந்தன.
அங்கே இருக்க போஸ்டாஃபீஸ். பொது தகவல் தொடர்பு நிலையம்.
மண்டபம் க்ளோசப்பில்.
அரண்மனை க்ளோசப்பில்.

இங்கே ரோடுகள் மிக நீளமானவை. மொத்தமே பத்து ரோடுகள்தான் இருக்கும். இங்கே பெரிய மனிதர்கள் சந்திக்கும் க்ளப், அரைநூற்றாண்டுப் புராதன பொது மருத்துவமனை, பாலிடெக்னிக், பல அறைகள் கொண்ட & நன்கு பராமரிக்கப்படும் அரண்மனை ( கார் ஷெட், குதிரை லாயம் போன்றவை டஜன் கணக்கில் இருக்கும் ) , மற்றுமுள்ள ராசா வீட்டுக்கு ஈடு இணையான  பெரிய மனிதர்கள் வீடுகள் ( ஸ்பிக் ), விசாலம், நாராயணா இன் போன்ற ஹெரிட்டேஜ் ஹோம்ஸ் , சிவன் கோயில், பிள்ளையார் கோயில், பெருமாள் கோயில், ரங்கா மெஸ், சமீபத்தில் காணாமல் போன டெண்ட் கொட்டாய் , வாரச்சந்தை , ரயில்வே ஸ்டேஷன், ரயில்வே ஸ்டேஷனில் ராஜா குடும்பத்தார் தங்கும் ஹால் போன்றவை பிரசித்தம்.

எங்க ஊரைக் கண்டு களித்து  மங்கள ஆஞ்ஜநேயரையும் தரிசித்து அருள்பெற்றுச் செல்லுங்கள். :)

1 கருத்து:

  1. வெங்கட் நாகராஜ்30 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 10:02
    அருமையான படங்கள் மற்றும் தகவல்கள். ஊரணி மனதைக் கவர்ந்தது....

    பதிலளிநீக்கு

    Unknown30 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 10:04
    பழையூரில் ஒருதிருமணத்திற்கும் ,அரண்மனை அருகில் திருமணத்திற்க்கும் சென்று அப்படியே கொத்தரி சோலை ஆண்டவர் கோயில் சென்றுவந்தேன்
    மே மாதம் பள்ளத்தூர் கல்யாணத்திற்கு போய் வந்ததேன்

    பதிலளிநீக்கு

    வை.கோபாலகிருஷ்ணன்30 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 10:45
    மிகவும் அழகான படங்கள். என் பிறப்புக்கு ஓர் பத்தாண்டுகளுக்குள் என் பெற்றோர்கள் இந்தக் கானாடுகாத்தான் என்ற ஊரில் ஒருசில வருஷங்கள் வாழ்ந்துள்ளதாகக் கேள்விப்பட்டுள்ளேன். அதனால் இந்தப்பதிவினில் ஓர் ஸ்பெஷல் அட்டாச்மெண்டே எற்பட்டு விட்டது. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு

    வை.கோபாலகிருஷ்ணன்30 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 10:59
    1940 to 1950 காலக்கட்டத்தில் என் பெற்றோர்கள் செட்டிநாட்டின் கோட்டையூர், வேலங்குடி, கீழச்சேவல்ப்பட்டி, கானாடுகாத்தான், கண்டனூர், கோவிலூர் போன்ற திவ்யச் க்ஷேத்ரங்களில் உள்ள வேத பாடசாலையில் இருந்துள்ளனர்.

    கானாடு காத்தானில் அது சமயம் வெள்ளைக்கார பட்டாளத்தார்கள் குண்டு போட்டனர் எனவும் சொல்லுவார்கள். சாதாரண ஏழைபாழை மக்களில் பலருக்கும் பஞ்சம் தலைவிரித்து ஆடியதாகவும், கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டு பலரும் கஷ்டப்பட்டதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu31 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 6:55
    அருமையான படங்கள்......அழகான கோயில் ஊர்...ஊரணி....எல்லாமே.அழகு...மனதை க் கவரும் வண்ணம்...

    பதிலளிநீக்கு

    திண்டுக்கல் தனபாலன்31 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 9:49
    அனைத்தும் அழகு...

    பதிலளிநீக்கு

    Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University31 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 10:10
    கிராமச்சுற்றுலா அருமையாக இருந்தது, அழகான படங்களுடன்.

    பதிலளிநீக்கு

    'பரிவை' சே.குமார்31 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 11:17
    காணாடுகாத்தானுக்குள் மீண்டும் வந்தது போன்ற அனுபவத்தைக் கொடுத்த படங்கள்... அருமை அக்கா...

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan8 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 6:48
    நன்றி வெங்கட் சகோ

    நன்றி பழனிசாமி சார் :)

    மிகவும் கொடுத்து வைத்தவர்கள் விஜிகே சார் நீங்கள். வேத ஒலி கேட்டு வளர்ந்தவர்கள் மிகவும் சிறப்பானவர்கள். அதுதான் உங்கள் உருவத்திலும் உள்ளத்திலும் அன்பிலும் பண்பிலும் ஒளிர்கிறது :)

    நன்றி துளசி சகோ

    நன்றி டிடி சகோ

    நன்றி ஜம்பு சார்

    நன்றி குமார் சகோ

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan8 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 6:48
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.