எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 4 டிசம்பர், 2019

கண்ணகி கோயில் பூக்கள்.

கண்ணகி கோயில் பூக்கள்.

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் அகிலம் புகழும் பொங்காலை என்று அங்கே நடைபெற்ற பொங்கல் திருவிழாவைப்பற்றி எழுதி இருந்தேன். 




///கண்ணகி மதுரையை எரித்தபின் சேரநாட்டிலுள்ள கொடுங்கலூரை நோக்கிப் போகும் போது தன் துயரத்தை கிள்ளியாற்றின் கரையில் ஆற்றுப் படுத்தித் தங்கிச் சென்றிருக்கிறார். அவர் வருத்தத்தை ஆற்றுப் படுத்திய ஊர் என்பதாலேயே ஆற்றுக்கால் பகவதி என்றழைக்கப்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. சுற்றிலும் தென்னஞ்சோலைகளும் வாழைத்தோட்டங்களும் சூழ , மீன்கள் துள்ளும் புஷ்கரணியோடு அரக்கி ஒருத்தியை அடக்கி அமர்ந்த கோலத்தில் அருள் பாலிக்கும் ஆற்றுக்கால் பகவதியைக் காணக் கண் கோடி வேண்டும். ///

ஒவ்வொரு கோயிலிலும் நந்தவனம் உண்டு என்றாலும் இங்கே கோயில் முகப்பில் நடைபாதையின் இருபக்கமும் பூச்செடிகள் வைத்து அலங்கரித்திருக்கிறார்கள். கண்ணகியை ஆற்றுப்படுத்தவோ என்னவோ.

மிக அழகான அச்செடிகளையும் புஷ்கரணியையும் இங்கே பகிர்ந்திருக்கிறேன். :)
மிக அழகான வட்டச் சிற்றலைகளுடன் இக்குளத்தை ஏனோ எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

 ஜெய் அம்பே கி .

1 கருத்து:

  1. திண்டுக்கல் தனபாலன்29 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 8:55
    மனதை கவரும் அழகாக மலர்கள்...

    பதிலளிநீக்கு

    வை.கோபாலகிருஷ்ணன்29 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 4:05
    பல்வேறு பூக்களும், புனிதமான புஷ்கரணியும், மிக அழகான வட்டச் சிற்றலைகளுடன் கூடிய குளமும் நம் எல்லோருடைய மனதையும் ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளன.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்29 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 8:07
    அழகான படங்கள்........ பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. கடைசி படம் மிகவும் அழகு!

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan30 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 9:04
    நன்றி தனபாலன் சகோ

    நன்றி கோபால் சார்

    நன்றி வெங்கட் சகோ

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan30 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 9:06
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu1 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 2:53
    அழகான படங்கள். ஆஅற்றுக்கால் பகவதி அம்மன் மிகவும் சக்திவாய்ந்தவள் அன்று திருவனந்தபுரம் முழுவதும் இப்போது எம் ஜி ரோட் செக்கரட்டேரியட் வரை பொங்காலே போடுகின்றார்கள் என்று கேள்விப்பட்டோம்...

    (கீதா: நாங்கள் திருவனந்தபுரத்தில் ஆற்றுக்காலே பகவதி அம்மன் கோயில் அருகிலுள்ள இடத்தில் தான் இருந்தோம்...வருடம் தோறும் இந்தப் பொங்காலே நாள் மிக மிக அருமையான ஒருநிகழ்வாக இருக்கும். இப்போது சென்னை வாசம்....அதனால் எல்லாம் ஏஜ் ஓல்ட் டேய்ஸ் என்பது போலாகிவிட்டது...இப்போதும் உறவினர்கள் அங்கு இருக்கின்றார்கள். அவர்களிடமிருந்து இந்த நிகழ்வுகள் எல்லாம் அப்டேட் ஆகிவிடும்...அம்மன் அழகோ அழகு! )

    பதிலளிநீக்கு

நவக்ரஹக் கோலங்கள்.

 நவக்ரஹக் கோலங்கள்.