யாகசாலை - பலவான்குடி சிவன் கோவில்.
மார்ச் நான்காம் தேதியன்று பலவான்குடி நகரச் சிவன்கோவில் கும்பாபிஷேகத்துக்கான ஐந்தாம் கால யாகசாலையில் கலந்து கொள்ளும் பேறு கிட்டியது. 150 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோவில் இது.புதிதாக ஐந்துநிலை ராஜகோபுரம் கட்டப்பட்டுக் ( ஒன்பதாவது ) கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஊரை அடைத்துப் பந்தல் போட்டு விருந்தும் விசேஷமும் அமர்க்களப்பட்டது.
இரட்டையானைகள் உலா வந்தன.இரட்டைக் குதிரைகள் நாட்டியமிட்டன. கேரள செண்டை மேளத்தின் அதிரடிச் சத்தம். சிவாச்சாரியார்கள் உரையாற்றினார்கள். அதன் பின் ஹோம திரவியங்கள் சமர்ப்பிக்கப்பட்டுப் பூரணாகுதி. ட்ரோன் வைத்து வீடியோவும் புகைப்படமும் எடுத்துத் தள்ளிக்கொண்டிருந்தார்கள்.
ஒவ்வொரு தெய்வத்துக்கும் விதம் விதமான யந்திரங்கள் மந்திரங்கள் இருப்பதுபோல் விதம் விதமான ஷேப்பில் ஹோம குண்டங்கள் வண்ண வண்ணமான வடிவங்களில் கண்ணைக் கவர்ந்தன. ( அக்னிதான் எல்லா அவிர்பாகங்களையும் எல்லா தேவதைகளுக்கும் கொண்டு சேர்ப்பவர். பொதுவாக நன்கு உலர்ந்த சமித்துக்களையும் சாண உருண்டைகளையும் பயன்படுத்த வேண்டும். விதம் விதமான உருவங்களில் அந்தந்த ஹோம குண்டங்களில் தெய்வக் காட்சியைக் காணலாம். ஹோமம் செய்யும்போது கண் கலங்கி ஓடும் அளவு நெருப்பே இல்லாமல் புகை வரக் கூடாது. )
ஒவ்வொரு தெய்வத்துக்கும் விதம் விதமான யந்திரங்கள் மந்திரங்கள் இருப்பதுபோல் விதம் விதமான ஷேப்பில் ஹோம குண்டங்கள் வண்ண வண்ணமான வடிவங்களில் கண்ணைக் கவர்ந்தன. ( அக்னிதான் எல்லா அவிர்பாகங்களையும் எல்லா தேவதைகளுக்கும் கொண்டு சேர்ப்பவர். பொதுவாக நன்கு உலர்ந்த சமித்துக்களையும் சாண உருண்டைகளையும் பயன்படுத்த வேண்டும். விதம் விதமான உருவங்களில் அந்தந்த ஹோம குண்டங்களில் தெய்வக் காட்சியைக் காணலாம். ஹோமம் செய்யும்போது கண் கலங்கி ஓடும் அளவு நெருப்பே இல்லாமல் புகை வரக் கூடாது. )
அந்த யாகசாலைக் காட்சிகள் உங்கள் பார்வைக்காக .
ஒவ்வொரு சாமிக்கும் தனித்தனி யாக சாலை. ஒவ்வொரு காவல் தெய்வமும் கூட.
ராஜகோபுரத்துக்கான யாக சாலை வாயிலில் அம்மையப்பன் அழகாகக் காட்சி அளித்தார்கள்.
ஸ்ரீ விநாயகருக்கு எதிரே ஐந்து முக ஹோமகுண்டம்.
ஸ்ரீ சுப்ரமணியருக்கு அறுமுக ஹோமகுண்டம்.
ஸ்ரீ துர்க்கைக்கு வேல்/ இலை அமைப்பில் ஹோமகுண்டம்.
ஸ்ரீ பெருமாளுக்கு வட்ட வடிவிலான ஹோம குண்டம்.
சதுர வடிவில் பரிவார ஹோம குண்டம்.
விமானத்துக்கு வட்ட வடிவ ஹோம குண்டம்.
நவக்ரஹங்களுக்கு சதுர வடிவில் ஹோம குண்டம்.
ஸ்ரீ பைரவருக்கு எண்கோண வடிவில் ஹோம குண்டம்.
பிள்ளையார்பட்டிப் பிச்சைக் குருக்கள் தலைமை வகித்தார். கண்டனூர் சாமியாடிச் செட்டியார் அவர்களும் மற்ற மடங்களின் ஆதீனங்களும் கலந்து கொண்டார்கள்.
நாங்கள் கிளம்பியபோது யாரோ ஒருவரின் ( தேச மங்கையர்க்கரசியா என ஞாபகம் இல்லை ) உபன்யாசம் நடைபெற்றது. லேட்டாகச் சென்றதால் பல பலகாரங்கள் கிடைக்கவில்லை. இட்லி, உப்புமா , கந்தரப்பம் போன்றவை கிடைத்தன. உண்டுவிட்டுக் கிளம்பினோம். இது உணவு வழங்கிய தெருவில் இருந்த வீடு. லௌட் ஸ்பீக்கரும் ட்யூப் லைட்டும் ஊர் முழுக்க மாட்டி இருந்தார்கள். கார் ட்ரைவரை அழைக்கக் கூட முடியவில்லை. அவ்வளவு சத்தம் ஊரெங்கும். ட்யூப் லைட் தேவைதான். இவ்ளோ லௌட் ஸ்பீக்கர் தேவையா என அடுத்த கும்பாபிஷேகங்களில் யோசிக்க வேண்டும்.
மறுநாள் கும்பாபிஷேகத்துக்குப் போக முடியாது என்பதால் ( மறுநாள் எங்கள் மாத்தூர் பிரம்மோத்ஸவத்தில் கலந்து கொள்ள வேண்டும் எனவே ) அதற்குமுன் உள்ளே சென்று சாமியை வணங்கிவிட்டுத்தான் வந்தோம். வண்ண வண்ணச் சிலைகளாகத் தூண்கள் தோறும்காட்சியளித்த பல்வேறு தெய்வத் திருவுருவங்களையும் அடுத்த இடுகைகளில் தருவேன்.
திண்டுக்கல் தனபாலன்29 ஜூன், 2020 ’அன்று’ முற்பகல் 11:22
பதிலளிநீக்குயோசித்தால் புரியும்... அதிகமாக யோசித்தால் அனைத்தும் வீண் வேண்டும் தோன்றலாம்...
பதிலளிநீக்கு
வெங்கட் நாகராஜ்30 ஜூன், 2020 ’அன்று’ பிற்பகல் 12:08
படங்கள் நன்று.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan12 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 1:19
ஆம் டிடி சகோ
நன்றி வெங்கட் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!