எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 10 ஆகஸ்ட், 2020

திரு உத்திரகோசமங்கை

திரு உத்திரகோசமங்கை

ராமேஸ்வரம் செல்லும் வழியில் இக்கோயிலுக்குச் செல்லாதவர்கள் குறைவு. ஆதியில் தோன்றிய  சிவன் கோயில் என்று இதைச் சொல்கிறார்கள். இந்த உத்திரகோசமங்கை மண்ணை மிதித்தாலே முக்தி என்கிறார்கள்.
மாபெரும் ஏழுநிலை, ஐந்துநிலை கோபுரங்கள். நீண்ட பிரகாரங்கள். பல சுற்று அமைந்திருக்கின்றன இப்பிரகாரங்கள். நிறைய தனிச்சந்நிதிகள்.


இறைவன் மங்களநாதர் சுயம்பு மூர்த்தி  இறைவி  மங்களநாயகி/மங்களேஸ்வரி/மங்களாம்பிகை  . சிவபெருமான் பார்வதிக்கு பிரணவ மந்திரங்களை உபதேசம் செய்த ஸ்தலம் என்பதால் உருத்திர+கோச+மங்கை என்றழைக்கப்படுகிறது. மாணிக்க வாசகருக்கு சிவன் தானே குருவாகி உபதேசித்த இடம் என்றும் கூறப்படுகிறது.


இக்கோயிலின் வாயிலிலேயே முருகன் இடப்புறமும் விநாயகர் வலப்புறமும் காட்சி அளிக்கிறார்கள். 
இது பாண்டிய நாட்டின் பழம்பெரும் ஸ்தலங்களில் ஒன்று. மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது என்பது பழமொழி. இவ்வாலயத்தை ஐந்துமுறை வலம் வந்து வணங்கினால் பாவம் தீர்ந்து நோய் நொடி இல்லாமல் செல்வம் பெருகுமாம். தம்பதியர் ஒற்றுமை பலமாகுமாம்
இக்கோயிலுக்கும் மெக்காவுக்கு சுரங்கப்பாதை இருப்பதாக இந்த போர்டுகள் சொல்கின்றன.
இங்கே பைரவர் வழிபாடும், உமாமகேஸ்வரன் வழிபாடும் சிறப்பு. கோயில் புனருத்ராதாரணத்தில் இருக்கிறது.

இராமாயணத்துக்கு முன்னரே இவ்வாலயம் இருந்தது என்ற கருத்து நிலவுகிறது. மண்டோதரி இத்தலத்து ஈசனை வணங்கியே ராவணனைக் கரம்பிடித்தாளாம்.
இது சிவராஜதானியாகும். மாணிக்கவாசகர் " பார் மேலே சிவபுரம் போல் கொண்டாடும் உத்திரகோசமங்கை ஊர் " என்று திருவாசகத்தில் பாடுவதன் மூலம் இவ்வூரின் பெருமை விளங்கும்.
சூரியன் சந்திரன் செவ்வாய் மட்டுமே இங்கே நவகிரகங்களில் இடம்பெற்றுள்ளன. மாணிக்க வாசகர் இந்த ஸ்தலத்தில் சிவலிங்க வடிவமாக காட்சி தருகிறார்.
 நீத்தல் விண்ணப்பம், திருப்பொன்னுஞ்சல் ஆகிய திருவாசகப் பகுதிகள் இங்கே பாடப்பட்டதாம். 
ஸ்தலவிருட்ஷம் இலந்தைமரம். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாம்.

சிவனின் 64 திருவிளையாடல்களையும் இங்கே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். திருவிளையாடலில் வலைவீசி சுறாமீனைப் பிடிக்கும் திருவிளையாடல் நடைபெற்ற ஸ்தலம் இதுவாகும். இந்த இறைவிக்கு ஈசன் ஆனந்த திருத்தாண்டவம் ஆடிக்காட்டினாராம்.
ஆதியும் அந்தமுமில்லாத சிவனின் அடிமுடி அறிந்ததுபோல் தாழை போய் சொன்னதால் இந்தக் கோயிலிலும் தாழம்பூவுக்கு சிவ பூஜையில் இடமில்லை. அனால் இங்கே ஆதி சிவன் என்பதால் அந்த அடிமுடி அறியும் நிகழ்வுக்கு முன்னே உருவான கோயில் என்பதால் இங்கே  பூஜையில் தாழம்பூவும் இடப்பெறுகிறது.

கிட்டத்தட்ட 5000 ஆண்டுகள் முற்பட்டது என்கிறார்கள்.  ஆதி சிதம்பரம் எனவும் அழைக்கப்படுகிறது. எனவே இந்த சிவன் ஆதி நடராஜர் என அழைக்கப்படுகிறார்.

மங்கள தீர்த்தம், அக்கினி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், பொய்கைத் தீர்த்தம்,வியாச தீர்த்தம், சீதள தீர்த்தம் என ஆறு தீர்த்தம் உள்ள ஒரே கோயில் இது.
இங்கே இருக்கும் மரகத நடராஜருக்கு சந்தனக் காப்பீட்டு வைத்திருக்கிறார்கள். வருடம் ஒரு முறைதான் அந்த சந்தனாக்காப்பு நீக்கப்பட்டு சுவாமி தரிசனம் தருவார். 32 மூலிகை அபிஷேகம் நடைபெறும். இங்கே ஸ்படிக லிங்கமும் உள்ளது.இந்த சந்தனப் பிரசாதம் அனைத்து நோய்நொடிகளையும் தீர்க்க நல்லதாம். 

வாதவூரடிகள், காகபுஜண்டர், மயன், வேதவியாசர், மிருகண்டு  ஆகியோர் வணங்கிய தலம் இவ்வூர்.நாங்களும் வணங்கி ஆதிசிவனின் அருள்பெற்று வந்தோம்.

1 கருத்து:

  1. G.M Balasubramaniam12 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 4:10
    நாங்களும் சென்றிருக்கிறோம்

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan21 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 9:09
    அருமை பாலா சார். கருத்துக்கு நன்றி :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.