எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

இளையாற்றங்குடிக்கோவிலில் அபூர்வ ஓவியங்கள்:- .நர்த்தன நடராஜரும், கங்காதரரும்.

இளையாற்றங்குடிக்கோவிலில் அபூர்வ ஓவியங்கள்:- .நர்த்தன நடராஜரும், கங்காதரரும்.

இளையாற்றங்குடிக் கைலாசநாதர்கோயில் காரைக்குடியில் இருந்து 27 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இது பற்றி விரிவாக இன்னொரு இடுகை எழுதுவேன். இப்போது அங்கே கண்டு தரிசித்த தெய்வத்திருவுருவங்களின் ஓவியங்கள் சில உங்கள் பார்வைக்கு.
நர்த்தன நடராஜர். கைலாசநாதரும் நித்யகல்யாணி அம்மையும்.
வாயிலிலேயே இன்னொரு ப்ரம்மாண்ட நடராஜர் பின்னர்  வருகிறார்.

ஸ்ரீ கைலாசநாதரின் பாதாரவிந்தங்களைச்  சரணடைந்து கையில் ஏந்தி மகிழும் நந்திதேவர்.

இடபாரூடரும் , பிட்சாடனர்  & அன்னபூரணியும்.
சுற்றிலும் வரந்தையில் சிங்கங்கள். 
குட்டி தேவதை, தேவிகளின் ஆட்டபாட்டங்கள். 
இன்னும் சில கந்தர்வரின் துணை நடனம்.
நாகங்கள், தன்வந்திரி
தேவதைகள், வட்டத்தாமரைகள்,  காலபைரவர்.
கின்னர் கிம்புருடர், முருகன் வள்ளி தெய்வானை.
தூண் வரந்தைகளோடு விதம் விதமான வட்டத்தாமரைகள்.
அன்னபூரணி அம்பாள். வள்ளி திருமணம்


இந்திராதி தேவர்கள் இளையாற்றங்குடி வந்து கைலாயநாதர், நித்யகல்யாணி அம்பாளை தரிசனம் செய்யும் காட்சி. 
மிக அற்புதமான அபூர்வமான ஓவியம் இது. இதில் நீலப்பட்டில் நின்றுகொண்டே வீணை வாசிக்கும் சரஸ்வதியும் வெண்பட்டணிந்து நின்றுகொண்டு அருள்பாலிக்கும் லக்ஷ்மியும் விநாயகரும் கொடிக்கம்பத்தில் மேல் விதானத்தில் காட்சி .அளிக்கின்றனர்.
நீண்ட முன்வாயில் நடையில்  இதன் உத்தரங்களிலும் ஓவல் வளையத்துள் வனப்பான ஓவியங்கள் அழகூட்டுகின்றன.

இந்த ஓவல் வளையங்களுக்குள் இயற்கைக் காட்சிகளும் பூக்களும் சோலையும் சூரிய உதயமும் வெகு அழகு. 
காஸ்மிக் டான்சர் நடராஜர் என்பார்கள். இங்கே அதி ப்ரகாசத்தோடு நடனமாடுகிறார் நடராஜர். பக்கத்துணையாய் சிவகாமி அம்மை, வியாக்கிரபாதர், பதஞ்சலி முனிவர்.   

நீலவிதானத்து நித்திலப்பூம்பந்தற் கீழ் மீனாக்ஷி திருக்கல்யாணம். 

மீனாக்ஷி ஜனனம்.


மீனாக்ஷி திக்விஜயம்
பகீரதனுக்காக கங்கையை வரவழைத்த கங்காதரர். 

இத்தகு கவின்மிகு ஓவியங்களைக் காணவே நீங்கள் இளையாற்றங்குடி செல்லவேண்டும். மிக அருமையான அமைதியான ஊர் & கோவில்.

1 கருத்து:

  1. Thenammai Lakshmanan28 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 7:32
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.