எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

அறுபடை முருகன் கோயில்கள் :- சுவாமிமலை/திருவேரகம்

 அறுபடை முருகன் கோயில்கள் :- சுவாமிமலை/திருவேரகம்

ஈசனோடு பேசியது போதுமே
என்னோடும் பேசுசாமி நாதனே
ஆசையோடு தமிழெடுத்துப் பாடினேன்
ஐயாஉன் திருவடியை நாடினேன்


கண்சீறும் பொறியூறி பிறந்தவா
கமலத்தில் அன்று நீயும் தவழ்ந்தவா
தண்ணீரில் சளியுனக்குப் பிடிக்குமே
சரவணத்துப் பொய்கைவிட்டு எழுந்துவா 


கடலோரம் நிற்பவனே சண்முகா
கடல் நீரால் உடல் அரிக்கும் அல்லவா
நடமாடும் மயிலேறி இங்குவா
நல்ல மனக் கோயிலுண்டு தங்கவா

குன்றத்திலே கல்யாணம் ஆனதால்
குவலயத்தை நீமறத்தால் நியாயமா
குன்றத்தையும் விட்டிறங்கி ஓடிவா
கொஞ்சு தமிழ் இசைகேட்டு ஆடிவா

பன்னிரண்டு கண்களாடுந் தெய்வமே
என்னை மட்டும் காணமனம் இல்லையோ
உன்னை விட்டு யாரை இனி நம்புவேன்
சண்முகனே என்னுடனே வம்புஏன்

ஒன்றிரண்டு விழியேனும் திறந்திடு
ஓரவிழிப் பார்வையேனும் புரிந்திடு
என்றுமுனை நம்பிநின்றேன் வரங்கொடு
ஏற்றமுடன் யான் வாழ வரங்கொடு. 


-- நன்றி பஜனை.காம். 

 அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா,

நாடறியும் நூறுமலை நானறிவேன் சுவாமிமலை.
கந்தன் ஒரு மந்திரத்தை..
கந்தன் ஒரு மந்திரத்தை
தந்தையிடம் சொன்ன மலை.. சுவாமி மலை.

கந்தன் திருநீறணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்.
சிறுவயதில் மன்னார்குடியில் இருந்து ஒவ்வொரு கிருத்திகைக்கும் அப்பா டாக்சி எடுத்து குடும்பத்தோடு அழைத்துச் சென்று சுவாமிமலை சுவாமிநாத சுவாமியை தரிசனம் செய்துவைப்பார்.
தமிழ் வருடத்தின் 60 படிகள் கொண்ட குட்டி மலையில் சென்று அந்த சுவாமிநாதனை அதிகாலைக் குளிரில் தரிசிக்கும் சுகம் அற்புதம். மாபெரும் கோயிற்கதவுகள். மிகப் சந்நிதியில் அருள்பாலிக்கும் அழகு முருகனைக் காணக் கண்கோடி வேண்டும்.

இது திருப்புகழில் உள்ள திருவெழுக்கூற்றிக்கை என்னும் முருகனைப் புகழ்ந்து பாடும் இரதவடிவப் பாடல் ஆகும். இது சுவாமிமலை கோயில் சுவரில் படி இறங்கும் இடத்தில்  வரையப்பட்டுள்ளது. இதை சுவாமிமலை திருப்புகழ் என்றும் சொல்கிறார்கள். அருணகிரி நாதர் எழுதிய இந்த திருவெழுக்கூற்றிருக்கை போல ஓரிரு கவிகளே  இம்மாதிரிப் பாடல்களை ( சம்பந்தப் பெருமான் கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில்)  இயற்றி இருக்கிறார்கள். இதை கௌமாரம் எனும் இணைய தளத்திலும் காணலாம்.  

இது முதலில் ஓரெழுத்தில் ஆரம்பித்து பிறகு 1,2, 1 என்றும், 1, 2, 3, 2, 1 என்ற வரிசையிலும் ஏழு வரை அமையும். இதேபோல் கீழிருந்தும் ஒன்றிலிருந்து ஆரம்பித்து முடியும். அப்படி வாசித்துப் பாருங்கள். அற்புதமாக இருக்கிறதல்லவா. மாபெரும் கவி முயற்சி. கடுமையான மொழிப்பயிற்சியும் இறையருளும் இருந்தால் மட்டுமே இம்மாதிரிப் பாடல் இயற்ற இயலும்.  சுவாமிநாத சுவாமிக்கு அரோகரா !
முருகன் ஓம் என்னும் பிரணவத்தின் உட்பொருளை தந்தைக்கு உபதேசித்ததால் இவர் தகப்பன்சாமி என அழைக்கப்படுகிறார். அவ்வாறு விளக்கும் இந்த ஓவியமும் சுதைச்சிற்பமும் கொள்ளை அழகு. !
 படிகளில் நேத்திர  விநாயகர் சந்நிதி , கீழே சுந்தரேஸ்வரர் மீனாக்ஷி சந்நிதி ஆகியன உள்ளன. திருக்கல்யாண மண்படமும் உள்ளது.

அழகுச் சிறுவன் முருகனை அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையனைத் தரிசித்த பிறகு ஐந்தாம் படைவீட்டுக்குப் படையெடுத்தோம். அதுதாங்க திருத்தணி. சென்னைக்குப் போய் திருத்தணியையும் அதன் பின் வல்லக்கோட்டை, மருதமலை, குன்றக்குடி  ஆகிய தலங்களையும் வணங்கலாம் வாங்க.

அருணகிரிநாதர் திருப்புகழ்.  சுவாமிமலை

 தானனத் தனந்த ...... தனதான
     தானனத் தனந்த ...... தனதான

......... பாடல் .........

காமியத் தழுந்தி ...... யிளையாதே
     காலர்கைப் படிந்து ...... மடியாதே

ஓமெழுத்தி லன்பு ...... மிகவூறி
     ஓவியத்தி லந்த ...... மருள்வாயே

தூமமேய்க் கணிந்த ...... சுகலீலா
     சூரனைக் கடிந்த ...... கதிர்வேலா

ஏமவெற் புயர்ந்த ...... மயில்வீரா
     ஏரகத் தமர்ந்த ...... பெருமாளே.

-- நன்றி கௌமாரம்.

அறுபடை முருகன் கவசங்கள் சுவாமிமலை

இரண்டாவது கவசம் – ஸ்வாமி மலை கவசம்
ஓமெனும் பிரணவம் உரைத்திடச் சிவனார்
காமுற உதித்த கனமறைப் பொருளே
ஓங்கார மாக உதயத் தெழுந்தே
ஆங்கார மான அரக்கர் குலத்தை
வேரறக் களைந்த வேலவா போற்றி
தேராச் சூரரைத் துண்டதுண் டங்களாய்
வேலா யுதத்தால் வீசி அறுத்த
பாலா போற்றி பழநியின் கோவே
நான்கு மறைகள் நாடியே தேடும்
மான்மரு கோனே வள்ளி மணாளனே
நானெனும் ஆணவம் நண்ணிடா(து) என்னைக்
காணநீ வந்து காப்பதும் கடனே
காளி கூளி கங்காளி ஓங்காரி
சூலி கபாலி துர்க்கை யேமாளி
போற்றும் முதல்வா புனித குமாரா
சித்தர்கள் போற்றும் தேசிகா போற்றி
ஏகாட் சரமாய் எங்கும் தானாகி
வாகாய் நின்ற மறைமுதற் பொருளே
துதியட் சரத்தால் தொல்லுல(கு) எல்லாம்
அதிசய மாக அமைத்தவா போற்றி
திரியட் சரத்தால் சிவனயன் மாலும்
விரிபா ருலகில் மேன்மையுற் றவனே
சதுரட் சரத்தால் சாற்றுதல் யோகம்
மதுர மாய் அளிக்கும் மயில்வா கனனே
பஞ்சாட் சரத்தால் பரமன் உருவத்தால்
தஞ்சமென் றோரைத் தழைத்திடச் செய்தென்
நெஞ்சகத்(து) இருக்கும் நித்தனே சரணம்
அஞ்சலி செய்த அமரரைக் காக்கும்
ஆறு கோணமாய் ஆறெழுத் தாகி
ஆறுசிரமும் அழகிய முகமும்
ஆறிரு செவியும் அகன்ற மார்பும்
ஆறிரு கண்ணும் அற்புத வடிவும்
சரவணை வந்த சடாட்சரப் பொருளே
அரனயன் வாழ்த்தும் அப்பனே கந்தா
கரங்கள்பன் னிரண்டில் கதிரும் ஆயுதத்தால்
தரங்குலைந்(து) ஓடத் தாரகா சுரன்முதல்
வேரறச் சூர்க்குலம் முடித்து மகிழ்ந்தோய்
சீர்திருச் செந்தூர்த் தேவசே னாதிபதி
அஷ்ட குலாசலம் யாவையும் ஆகி
இஷ்டசித்திகள் அருள் ஈசன், புதல்வா
துஷ்டசங் காரா சுப்பிர மணியா
மட்டிலா வடிவே வையாபுரித் துரையே
எண்கோ ணத்துள் இயங்கிய நாரணன்
கண்கொள்ளாக் காட்சி காட்டிய சடாட்சர
சைவம் வைணவம் சமரச மாகத்
தெய்வமாய் விளங்கும் சரவண பவனே
சரியை கிரியை சார்ந்தநல் யோகம்
இரவலர்க்(கு) அருளும் ஈசா போற்றி
ஏதுசெய் திடினும் என்பால் இரங்கிக்
கோதுகள் இல்லாக் குணமெனக் கருளித்
தரிசனம் கண்ட சாதுவோ(டு) உடன்யான்
அர்ச்சனை செய்ய அனுக்ரகம் அருள்வாய்
பில்லிவல் வினையும் பீனிச மேகம்
வல்ல பூதங்கள் மாயமாய்ப் பறக்க
அல்லலைப் போக்கிநின் அன்பரோ(டு) என்னைச்
சல்லாப மாகக் சகலரும் போற்ற
கண்டு களிப்புறக் கருணை அருள்வாய்
அண்டர் நாயகனே அருமறைப் பொருளே
குட்டிச் சாத்தான் குணமிலா மாடன்
தட்டிலா இருளன் சண்டிவே தாளம்
சண்டமா முனியும் தக்கராக் கதரும்
மண்டை வலியொடு வாதமும் குன்மமும்
சூலைகா மாலை சொக்கலும் சயமும்
மூலரோ கங்கள் முடக்குள் வலிப்பு
திட்டு முறைகள் தெய்வச் சாபம்
குட்டல் சோம்பல் கொடிய வாந்தியம்
கட்டிலாக் கண்ணோய் கண்ணேறு முதலா
வெட்டுக் காயம் வெவ்விடம் அனைத்தும்
உன்னுடைய நாமம் ஓதியே நீறிடக்
கன்னலொன் றதனில் களைந்திடக் கருணை
செய்வதுன் கடனே செந்தில் நாயகனே
தெய்வநா யகனே தீரவே சரணம்!
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!!!

நன்றி விதை & விருட்சம் 

டிஸ்கி :- இதையும் பாருங்க. 

அறுபடை முருகன் கோயில்கள். - திருப்பரங்குன்றம்.

அறுபடை முருகன் கோயில்கள். :- பழமுதிர்ச்சோலை

(தொ. பரமசிவனின் அழகர் கோயில் - ஒரு பார்வை.)

அறுபடை முருகன் கோயில்கள் :- திருச்செந்தூர்.

அறுபடை முருகன் கோயில்கள் :- பழனி/திருஆவினன்குடி

அறுபடை முருகன் கோயில்கள் :- சுவாமிமலை/திருவேரகம் 

அறுபடை முருகன் கோயில்கள் :- திருத்தணி. 

1 கருத்து:

  1. Thenammai Lakshmanan21 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 9:15
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

    Professor D.Raja Ganesan Ph.D11 டிசம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 7:24
    சுவாமிமலை பக்தர்கள் என்ற என் முக நூல் பக்கத்திற்கு இன்று ஒரு பதிவிடலாம் என்று தேடிய போது தன்கள் blog' ஐக் கண்டேன். எளிகமையான ஆழமான பாடல்கள். வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.