எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 6 ஆகஸ்ட், 2020

இரணியூரில் குபேர ஹோமமும் பச்சைக் குங்குமமும்.

இரணியூரில் குபேர ஹோமமும் பச்சைக் குங்குமமும்.

இரணியூரில் வளர்பிறை அஷ்டமி விசேஷம். தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு உகந்ததுபோல் வளர்பிறை அஷ்டமி குபேரனுக்கு உகந்தது என்கிறார்கள். ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவியை குபேரன் வணங்கி அருள் பெற்ற ஸ்தலம் என்பதால் விசேஷம். நாமும் அவரை வணங்கினால் அருளும் பொருளும் வழங்கி செழிப்படைய வைப்பார் என்பது நம்பிக்கை

இந்த ஹோமம் ஓவ்வொரு மாதமும் வளர்பிறை அஷ்டமியில் அங்கே இருக்கும் யாக/ஹோம மண்டபத்தில் நிகழ்கிறது. முன்பே இதற்குப் பதிவு செய்திருக்கிறார்கள். எங்கள் உறவினரின் அழைப்பின்பேரில் சென்றிருந்தோம்.

வாழையிலையில் இரு கும்பங்கள் வைக்கப்பட்டு அதில் மாவிலைத் தோரணம் தேங்காய் வைத்து குபேரனைப் பிரதிஷ்டை செய்து ஹோமத்தை ஆரம்பிக்கிறார் அர்ச்சகர். ஆளுயர விளக்கு ஏற்றப்பட்டுள்ளது. சங்கல்பம் செய்துகொண்டு பூஜையைச் செய்கிறார்.
பலாமர சமித்துகளும் இன்னும் வன்னி போன்றவற்றின் சமித்துகளும் நெய் ஊற்றி ஹோமத்தில் சூடம் ஏற்றி வைத்து பிரதிக்ஞை செய்து ஆரம்பிக்கப்படுகிறது.

மந்திரங்களை திரும்பிச் சொல்லியபடி ஹோம திரவியங்களை அர்ப்பணிக்கிறார்கள். ஹோம ஜ்வாலை குபேரன் போல் குதிரையில் ஆவாஹனம் செய்த நிலையில் எழும்புகிறது பார்த்து ஆச்சர்யமாகிறது.
அந்த யாக சாலையிலேயே பச்சை வஸ்திரமும், அங்கவஸ்திரமும் அணிந்த குபேரனும் அவர் ஆவாஹனம் செய்யும் வாஹனமான  வெண்புரவியும்  ஒரு கூண்டுக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

பூர்ணாகுதி நடைபெறுகிறது.
அதன் பின் ஹோமத்துக்கு நிவேதனம் ( ஹோமபலி - அவிர்பாகம் ) வாங்கியவுடன் தியானம் செய்கிறார். அதன்பின் தீப தூபம் காட்டி நிறைவு செய்கிறார். அனைவரும் ஹோமத்தை சுற்றி வந்து குபேரன் சந்நிதிக்குச் செல்கிறோம்.


அங்கே இருக்கும் பிரகாரச் சுவரில் கிழக்குப் பகுதியில் வடக்குப் பார்த்து குதிரை வாகனத்தில் வாளேந்திக் காட்சி அளிக்கிறார் குபேரன். பச்சை இவர்க்கு உகந்த நிறம் என்பதால் பச்சைவஸ்திரம் அணிவிக்கப்பட்டு பச்சை விளக்கில் வித்யாசமாகக் காட்சி தருகிறார்.

எல்லா சந்நிதிகளில் தீபம் காட்டப்பட்டு குபேரன் சந்நிதிக்கு வருகிறோம். அங்கே பலவித பூஜா திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு முடிவில் இந்த ஹோம நீரால் அபிஷேகிக்கப்பட்டுத்  தீபதூபம் காட்டப்படுகிறது.  கீழேயே நவக்ரஹ சந்நிதி. குபேரன் சந்நிதிக்கு ஏறிச்செல்ல இரும்பு ஏணிப்படிகள் உள்ளன. அதில் ஏறி குபேரனுக்கு அர்ச்சனை செய்து தீபாராதனை காட்டுகிறார் அர்ச்சகர்.
ஹோமம் செய்பவர்களுக்குப் பரிவட்டம் கட்டப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டுப் பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன.
வடை, அப்பம், சர்க்கரைப் பொங்கல் போன்றவை படைக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டாலும் எனக்கு விபூதி சந்தனத்துடன் வழங்கப்பட்ட அந்த பச்சைக் குங்குமம் ஏனோ கவர்ந்துகொண்டேயிருந்தது.

வெகு சிறப்பான மதிய உணவு அங்கேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததும், ஹோமம் முடிந்ததும் எங்கள் அனைவருக்கும் தன் இல்லத்திலிருந்தே வரவழைத்து அம்சமான பில்டர் காபியை ஹோமம் செய்த சிவாச்சாரியாரே தன்  கையால் வழங்கியதும் சிறப்பு.

ஹோமம் முடிந்ததும் அர்ச்சகர் தெரிவித்த தகவல் என்னைக் கவர்ந்தது. " பணத்தைப் போற்றி வைத்துக் கொள்பவனுக்கே பணம் சேரும் ". " வரவு செலவைக் கண்காணித்து இறுக்கப் பிடித்து வைப்பவனை விட்டுப் பணம் போகாது. செல்வம் சேர்ந்துகொண்டே இருக்கும்" என்பதுதான் அது. !


///ஓம் ஹ்ரீம் க்ளீம் சௌம் ஸ்ரீம் கும் குபேராய
நரவாகனாய யக்ஷ ராஜாய தன தான்யாதிபதியே
லக்ஷ்மி புத்ராய ஸ்ரீம் ஓம் குபேராய நமஹ.////

///

1.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மகா அஷ்ட ஐஸ்வர்ய சம்பத்து ஆதிக்க மகா குபேர
மங்கள சர்வ பாக்கிய சுதர்சன சங்கு சக்கர பத்ம கதாயுத லட்சுமி நாராயண தேவாய
நமஹ!

2.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்,க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் அஷ்ட ஐஸ்வர்ய சம்பத்து யோக அம்ச குபேர சக்கரவர்த்தி தேவாய நமஹ!

3. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ ராஜ வசீகர யோக குபேர தன தானிய சம்பத்து வசிய ஐஸ்வரிய குபேர தேவாய நமஹ!

4.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மனோ தைரிய வாக்கு ஞான வசிய வீர குபேர தேவதாயை நமஹ!

5.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ தேஜோ லட்சண கீர்த்தி வசிய மகா ஜய விஜய குபேர தேவாய நமஹ!

6.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ காரிய சித்தி வசிய ஜய குபேர தேவாய நமஹ!

7.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மகா ஜய விஜய அம்ச குபேர சக்கரவர்த்தி தேவதாய நமஹ!

8.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தன குபேர தேவாய நமஹ!

9.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஞான குபேர தேவாய நமஹ!

10. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வீர குபேர தேவாய நமஹ!

11.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் யோக குபேர தேவாய நமஹ!

12.ஓம் ஸ்ரீம் ஹரீம் க்லீம் சர்வ சௌபாக்கிய குபேர தேவாய நமஹ!

13.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தேஜஸ் குபேர தேவாய நமஹ!

14.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ ஜன வசிய குபேர தேவாய நமஹ!

15.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் காந்த சக்தி தேவாய நமஹ!

16.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஜய விஜய தேவாய நமஹ!---

என்று இம் மந்திரத்தினை காலை மாலை வேளையில் பூஜையில் ஜெபம் செய்து வர சகல கிரக தோசங்களும் பாபமும் தீர்ந்து அஷ்ட ஐஸ்வர்யமும் லட்சுமி கடாட்சமும்,பெயர் புகழும் உண்டாகி செல்வந்தனாய் வாழ்வார்கள்.///

-- நன்றி ஓம் சாய் ராம்

டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.

1. அஷ்ட பைரவர்களும் 108 உக்கிர பைரவர்களும்.

2. துர்க்கை உள்ளே லெக்ஷ்மி வெளியே.

3. இராசிகளை ஆளும் இரணியூர் நீலமேகப் பெருமாளும் கனகவல்லித் தாயாரும். 

4. ஊருணிகள் - திருக்கோயில் புஷ்கரணிகளும் தாமரை பூத்த தடாகங்களும்.

5. இரணிக்கோயில் கோபுரங்களும் திருச்சுற்று மதிலில் பள்ளிகொண்டபெருமாளும் நான்முகனும். 

6. இரணிக்கோயில் படிச்சிற்பங்கள்.

7. இரணிக்கோயில் தூண்சிற்பத் திருமூர்த்தங்கள்

8. விருத்தன் திருமணமும் விடையேறு பாகன் திருவிளையாடல்களும்.


9. காமதேனுவும் கீதோபதேசமும் பட்டாபிஷேகமும்.

10. இரணியூரில் குபேர ஹோமமும் பச்சைக் குங்குமமும்.

1 கருத்து:

  1. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University10 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 2:53
    குபேர ஹோமம் கண்டோம். நன்றி.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan10 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 11:59
    nandri Jambu sir.


    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.