எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 10 மே, 2019

ஐப்பசி மாசப் பிறப்பும் துலாஸ்நானமும்.

ஐப்பசி மாசப் பிறப்பும் துலாஸ்நானமும்.

ஐப்பசி மாதத்தில் காரைக்குடிக்குப் பக்கத்தில் இருக்கும் கொத்தங்குடியில் ஐப்பசி துலா ஸ்நானம் செய்யும் சந்தர்ப்பம் ஒருமுறை அமைந்தது. காலை முதல் பஸ் பிடித்து என் உறவினர் ஒருவரோடு  சென்று அங்கே உள்ள கோயில் ஊரணியில் முழுக்குப் போட்டது  இன்னும் பசுமையாய் நினைவு இருக்கிறது.
கோயிலில் உள்ள நாகங்கள் உண்மையான பக்தி உள்ளவர்களின் கண்ணுக்கு நிஜ நாகங்களாகவே தெரியும் என்று அவர் சொன்னதை உண்மையாக எடுத்துக் கொண்டு நாகங்கள் சிலைகளை உத்து உத்துப் பார்த்துக் கொண்டு ஒரு வித பயத்தோடு ( நீரில் நனைந்த குளிர் நடுக்கத்தோடு) பிரகாரம் சுற்றி வந்ததையும் மறக்க இயலாது.

இந்த முறை உறவினர்கள் சிலர் தலைக்காவிரிக்குச் செல்வதாக அழைத்தும் செல்ல இயலவில்லை. குடகில் இருக்கும் தலைக்காவிரிக்குச் சென்று ஐப்பசி துலா ஸ்நானம் செய்வதும் ரொம்ப விசேஷம். துலா ராசிக்குரிய ஐப்பசியை பீடை மாதம் என்றும் அந்த மாதம் முழுதும் சூரியோதயத்துக்கு முன்பு காவிரியில் நீராடுவது விசேஷம் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவின் 63 கோடி தீர்த்தங்களும் தங்களிடம் சேர்ந்துவிட்ட பாவம் நீங்க ஐப்பசி மாதம் காவிரியை நாடி வருவதாக ஐதீகம்.

காவிரியில் நீராடியபிறகு துலா புராணத்தைப் படிப்பார்கள். ஐப்பசி கடைசி இரு நாட்கள் காவிரியில் நீராடுவது வெகு சிறப்பு. கும்பகோணத்தில் இருந்தபோது எதிர்த்தாற்போலத்தான் டபீர் படித்துறை. கொஞ்சம் தள்ளிச் சென்றால் பழைய மார்க்கெட்டும் அதன் பக்கம் துலா ஸ்நானப் படித்துறையும் உண்டு.

மிகப் பழைமை வாய்ந்த முகப்போடு இருக்கிறது இந்த துலா ஸ்நானப் படித்துறை. காசு கொடுத்து இந்தப் படித்துறையில் குளிக்க வேண்டும். கீல் பிடித்த கதவு எந்நேரமும் திறந்து கிடக்கிறது.

மூத்திரச் சந்தில் மாடுகள் சுற்றி வர ஒரு விதப் பழைய வாடையோடு மேலே மரங்கள் முளைத்த முகப்போடு இருக்கிறது.

மக்கள் குளிக்கும் இடத்தைத் தாங்களும் தூய்மையாக வைத்துக் கொள்வதில்லை. நகராட்சியும் போதிய பராமரிப்பு செய்வதில்லை. இதில் குளித்தால் பீடை போய் ஏதேனும் வியாதி வரக்கூடும். முதலில் நம் நாட்டில் காவிரி வரவில்லை எனப் புலம்புவதை விட அது வரும் சமயங்களில் குப்பை இல்லாமல் அசுத்தம் செய்யாமல் வைத்திருந்தாலே போதும்.

ஆடி 18 க்காக., பின் ஆடியில் கர்நாடகாவில் தண்ணீர் தளும்ப தளும்ப அணை நிரம்பியவுடன் வேறு வழியில்லாமல் திறந்துவிட அங்கே மேட்டூரிலும் தண்ணீர் நிறைந்ததால் மதகைக் திறக்க காவிரி முழுவதும் ஒரே பாலீதீன் குப்பைகள் மிதக்க சாக்கடை நீர் போல வந்தது.

மாயூரத்தில் காவிரியில் துலாஸ்நானம் செய்வது சிறப்பென்றாலும் முடியாதவர்கள் ஐப்பசியில் ஒரு நாள் காவிரியில் தீர்த்தமாடலாம். அல்லது இருக்கும் இடத்தில் கிடைக்கும் நீரையே காவிரியாக நினைத்து நீராடலாம்.

 அதிக்ரூர மஹாகாய கல்பாந்ததஹனோப
பைரவாய நமஸ்துப்யம் அனுக்ஞாம் தாதுமர்ஹஸி
 

கங்கே ச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு

 

கங்கா கங்கேதி யோ ப்ரூயாத் யோஜனானாம் சதைரபி
முச்யதே ஸர்வபாபேப்ய: விஷ்ணுலோகம் ஸ கச்சதி.”


இதில் இரண்டாவது ஸ்லோகத்தை பூஜையின் போதும் நதிகளில் ஸ்நானத்தின் போதும் சொல்வது வழக்கம்.

திரிவேணி சங்கமத்தில் நதிகளுக்குப் பூஜை செய்வார்கள். முக்கூடலில் ஸ்நானம் செய்வதும் நன்று.

---- எங்கே கிளம்பிட்டீங்க பக்கத்துல இருக்கிற கோயில் புஷ்கரணி, ஆறு , குளம், கடல்ல குளிக்கிறதுக்கா. அதுக்கு முன்னே அந்த இடங்களில் குப்பைகளைப் போட மாட்டோம்னு முடிவு பண்ணிக்குங்க. அங்கே இருக்கிற பஞ்சாயத்து/ நகராட்சிகளில் சொல்லி அந்த இடத்தை முதலில் சுத்தமா பராமரிக்கச் சொல்லுங்க. நீரின்றி  அமையாது உலகு.

1 கருத்து:

  1. திண்டுக்கல் தனபாலன்18 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 10:41
    முடிவில் சொன்னது நடக்க வேண்டும்...

    விளக்கத்திற்கு நன்றி சகோதரி...

    பதிலளிநீக்கு

    பெயரில்லா18 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 10:49
    வணக்கம
    படமும் நன்று விளக்கமும் நன்று வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

    வை.கோபாலகிருஷ்ணன்18 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:59
    படங்களும் விளக்கங்களும் வெகு அருமை.

    //“ அதிக்ரூர மஹாகாய கல்பாந்ததஹனோப
    பைரவாய நமஸ்துப்யம் அனுக்ஞாம் தாதுமர்ஹஸி

    கங்கே ச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி
    நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு

    கங்கா கங்கேதி யோ ப்ரூயாத் யோஜனானாம் சதைரபி
    முச்யதே ஸர்வபாபேப்ய: விஷ்ணுலோகம் ஸ கச்சதி.”//

    இவைகள் மிகவும் சந்தோஷமும் புண்ணயமும் நீண்ட ஆயுளும் அளிக்கும் மகத்தான ஸ்லோகங்கள். ஸ்நானம் செய்யும் போது தினமுமே சொன்னால் நல்லது.

    பதிலளிநீக்கு

    'பரிவை' சே.குமார்18 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 10:57
    படங்களும் பகிர்வும் அருமை.
    கடைசியில் அருமையான கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள்...

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan26 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:01
    நன்றி தனபால் சகோ

    நன்றி ரூபன்

    நன்றி வைகோ சார்

    நன்றி குமார்.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan26 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:02
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.