எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 20 ஜூன், 2019

சம்மர் +முருகன்+நரசிம்மர் ரெசிப்பீஸ் & கோலங்கள்.

சம்மர் +முருகன்+நரசிம்மர் ரெசிப்பீஸ் & கோலங்கள்.



1.பைனாப்பிள் ஸ்மூத்தி
2.லெமன் ஜிஞ்சர் இன்ஃப்யூஸ்ட் வாட்டர்.
3.ஃப்ரூட் பாப்சிக்கிள்
4.ஃபலூடா
5.கிங் கேஸர்
6.லிட்சி புட்டிங்
7.பீட்ரூட் மில்க்‌ஷேக்
8.முந்திரி மாவுருண்டை.
9.மிக்ஸட் கோசம்பரி
10.கோதுமை மாவிளக்கு




1.பைனாப்பிள் ஆரஞ்ச் ஸ்மூத்தி

தேவையானவை :- பைனாப்பிள் துண்டுகள் – 10, பைனாப்பிள் ஆரஞ்ச் ஜூஸ் – 1 கப், வனிலா யோகர்ட் – அரை கப், தண்ணீர் – அரை கப், சர்க்கரை – 2 ஸ்பூன், ஐஸ் துண்டுகள் – 2

செய்முறை:-
பைனாப்பிள் துண்டுகளுடன் பைனாப்பிள் ஆரஞ்ச் ஜூஸ்,வனிலா யோகர்ட்,தண்ணீர், ஐஸ்துண்டுகள் சேர்த்து அடிக்கவும்.மென்மையாக அடித்துக் கண்ணாடிக் கோப்பைகளில் பரிமாறவும்.


2.லெமன் ஜிஞ்சர் இன்ஃப்யூஸ்ட் வாட்டர். :-

தேவையானவை:-
2 லிட்டர் கொள்ளளவு உள்ள பெரிய கண்ணாடி ஜாடி - 1, வெதுவெதுப்பான தண்ணீர் – 6 கப், எலுமிச்சை – 1, வெள்ளரிக்காய் – 1, இஞ்சி – 1 இஞ்ச் துண்டு, புதினா – 1 கைப்பிடி.

செய்முறை:-
கண்ணாடி ஜாடியில் எலுமிச்சையைத் தோலோடு குறுக்காகத் துண்டுகள் செய்து போடவும். அதில் வெள்ளரித்துண்டுகளையும் துருவிய இஞ்சியையும் சேர்க்கவும். புதினாவை இலைகளாக ஆய்ந்து போட்டு வெதுவெதுப்பான தண்ணீர் 6 கப் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊறவிடவும். ஆறியதும் குடிக்கக் கொடுக்கவும். எனர்ஜி தருவதோடு வெயிட் குறைக்கும்.கோடையையும் சமாளிக்க உதவும்.


3.ஃப்ரூட் பாப்சிக்கிள்:-

தேவையானவை :-
ஸ்ட்ராபெர்ரி – 6, கிவி – 1, பீச் – 1, நாவல்பழம் – 24. ஆப்பிள் ஜூஸ் – 6 கப் ( சர்க்கரை சேர்த்து அரைத்து வடிகட்டியது ). பாப்சிக்கிள் மோல்ட். அல்லது டம்ளர்கள் – 6. ஐஸ்குச்சி அல்லது மரக்குச்சிகள் – 6.

செய்முறை:-
பழங்களைச் சுத்தம் செய்து சிறுதுண்டுகளாக்கிக் கொள்ளவும். பாப்சிக்கிள் மோல்ட் அல்லது டம்ளர்களில் பழத்துண்டுகளைப் போடவும். இதில் ஆப்பிள் ஜூஸை ஊற்றவும் . மூடி வைத்து ஃப்ரீசரில் 8 மணி நேரம் உறைய விடவும். பாப்சிக்கிள் மோல்ட் அல்லது டம்ளர்களை வெளிப்புறமாக சாதா நீர் ஊற்றிப் பிரித்து பாப்சிக்கிளைக் குச்சியுடன் சேர்த்து சாப்பிடக் கொடுக்கவும்.

4.ஃபலூடா:-

தேவையானவை :-
வேகவைத்த ஸ்பாகெட்டி – 1 கப், திக் பால் – 2 கப், சர்க்கரை – அரை கப், வனிலா ஐஸ்க்ரீம் – 6 ஸ்கூப், ரோஸ் எசன்ஸ் – 6 டேபிள் ஸ்பூன், சப்ஜா விதை – 2 டீஸ்பூன் ( நீரில் ஊறவைக்கவும். ), நொறுக்கப்பட்ட ஐஸ் – 1 கப்

செய்முறை:-
பாலில் சர்க்கரை சேர்த்துக் காய்ச்சி நன்கு குளிர வைக்கவும்.ஆறு ஃபலூடா க்ளாஸ்களை எடுத்து அதில் சப்ஜா விதைகளையும் வேகவைத்த ஸ்பாகெட்டியையும் போடவும். இதில் ஒரு டேபிள் ஸ்பூன் ரோஸ் எசன்ஸையும் ஒரு கைப்பிடி நொறுக்கப்பட்ட ஐஸையும் போடவும். குளிர வைத்த பாலை ஊற்றி வனிலா ஐஸ்க்ரீம் ஒரு ஸ்கூப்போட்டு உடனே பரிமாறவும்

5.கிங் கேஸர்:-

தேவையானவை :-
பால் – 4 கப், சீனி – கால் கப், லிக்விட் க்ளுக்கோஸ் – 2 டீஸ்பூன், குங்குமப்பூ – 2 சிட்டிகை, பாதாம் பொடி – 1 டேபிள் ஸ்பூன், ஃப்ரெஷ் க்ரீம் – கால் கப். பாதாம் எசன்ஸ் – சில சொட்டுகள்.

செய்முறை:-
பாலில் சீனி குங்குமப்பூ பாதாம் பொடி போட்டு நன்கு குறுகக் காய்ச்சி ஆறவிடவும். ஆறியதும் லிக்விட் குளுக்கோஸ், பாதாம் எசன்ஸ், ஃப்ரெஷ் க்ரீம் போட்டு நன்கு அடித்து ஐஸ்க்ரீம் கப்புகளில் ஊற்றி 8 மணி நேரம் குளிர்வித்துப் பரிமாறவும்.


6.லிட்சி புட்டிங்:-

தேவையானவை :-
பால் – 2 கப், தோல் கொட்டை நீக்கி சுத்தம் செய்து சிறிதாக நறுக்கிய லிட்சி – 1 கப், மில்க் மெயிட் – அரை கப், கஸ்டர்ட் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன், ஃப்ரெஷ் க்ரீம் – அரை கப், ஜெலட்டின் – 3 டீஸ்பூன்.

செய்முறை:-
பாலில் கஸ்டர்ட் பவுடரைப் போட்டு நன்கு கட்டியில்லாமல் கரைத்து அடுப்பில் வைத்து கண்ணாடி போல் ஒட்டாமல் வரும்வரை கிளறவும். இறக்கி வைத்து அதில் மில்க் மெயிடைச் சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு டேபிள் ஸ்பூன் வெந்நீரில் ஜெலட்டினைப் போட்டுக் கரைத்து கஸ்டர்ட் கலவையில் ஊற்றி நன்கு கலக்கவும். வெதுவெதுப்பான பின் இதில் ஃப்ரெஷ் க்ரீமை அடித்து ஊற்றி நன்கு கலக்கி லிட்சியைச் சேர்க்கவும். புட்டிங் மோல்டுகளில் ஊற்று ஃப்ரிஜ்ஜில் 8 மணி நேரம் குளிர விடவும். பரிமாறவும்.

7.பீட்ரூட் மில்க்‌ஷேக்:-

தேவையானவை:-
பீட்ரூட் – 1, திக் பால் 4 கப், சர்க்கரை – கால் கப், ஃப்ரெஷ் க்ரீம் – 1 டேபிள் ஸ்பூன், ஃப்ரூட் எசன்ஸ் – சில சொட்டுகள். ஐஸ் துண்டுகள் – 4.

செய்முறை:-
பீட்ரூட்டைத் தோல் சீவி முழுதாக குக்கரில் வேகவைத்து எடுத்துத் துண்டுகள் செய்யவும். பாலில் சர்க்கரையைப் போட்டுக் கரையவிட்டு ஆறவைக்கவும். ஃப்ரூட் எசன்ஸை சேர்க்கவும். மிக்ஸியில் ப்ளெண்டரில் பீட்ரூட்டையும் ஃப்ரெஷ்க்ரீமையும் போட்டு முதலில் அரைக்கவும். அதன் பின் பாலையும் ஐஸ்துண்டுகளையும் போட்டு நன்கு விப் செய்து உயர கண்ணாடிக் கோப்பைகளில் ஊற்றிப் பரிமாறவும்.

8.முந்திரி மாவுருண்டை. :-

தேவையானவை:-
முந்திரி – கால் கப், பாசிப்பருப்பு – கால் கப், கடலை மாவு – கால் கப், நெய் – கால் கப், சர்க்கரை – அரை கப்

செய்முறை:-
முந்திரியை வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்து வைக்கவும். பாசிப்பருப்பைப் பொன்னிறமாக வறுத்துப் பொடிக்கவும். சர்க்கரையைப் பொடித்து வைக்கவும். நெய்யில் முதலில் கடலைமாவைப் போட்டு நன்கு வாசம் வந்து சிவக்கும் வரை மிதமான தீயில் வறுக்கவும். அதில் பொடித்த முந்திரி, பயத்த மாவு, சர்க்கரைப் பொடி சேர்த்து நன்கு கலக்கி சூட்டுடன் உருண்டை பிடிக்கவும்.


9.மிக்ஸட் கோசம்பரி:-

தேவையானவை:-
பாசிப்பருப்பு – அரை கப், காய்கறிக் கலவை – அரை கப் ( துருவிய வெள்ளரி, காரட், பீட்ரூட், புடலை ), எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன், கொத்துமல்லித்தழை – ஒரு கைப்பிடி, தேங்காய்த்துருவல் – 1 டேபிள் ஸ்பூன். உப்பு – கால் டீஸ்பூன்

செய்முறை:-
பாசிப்பருப்பை அரைமணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும். இதில் துருவிய காய்கறிக் கலவை, உப்புப் போட்டு, எலுமிச்சை சாறு, தேங்காய்த்துருவல், கொத்துமல்லித்தழை கலந்து உபயோகிக்கவும்.

10.கோதுமை மாவிளக்கு:-

தேவையானவை:-
சம்பா கோதுமை – 1 கப், நெய் – கால் கப், சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:-
சம்பா கோதுமையைப் பொரியரிசி போலப் பொன்னிறமாக வாசம் வரும்வரை வறுத்துப் பொடித்துச் சலிக்கவும். இந்த மாவில் முக்கால்  பங்கு நெய்யை ஊற்றி சர்க்கரை சேர்த்துத் தேவையான தண்ணீர் தெளித்து மாவாகப் பிசைந்து தீபங்கள் செய்யவும். தீபத்தில் மிச்ச நெய்யை ஊற்றிப் பஞ்சுத் திரிப் போட்டு விளக்கேற்றவும். 

டிஸ்கி :- இந்த ரெசிப்பீஸ் 20.5.2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை. 

டிஸ்கி ;- 2 :- சித்ரா பௌர்ணமி ரெசிப்பீஸையும் கோலத்தையும்  பாராட்டிய  ராஜேஸ்வரி கண்ணன், நெய்வேலி, இரா. வளையாபதி, தோட்டக்குறிச்சி, சு. இலக்குமணசுவாமி, திருநகர் ஆகியோருக்கு மனம் நிறைந்த நன்றிகள். !!!

1 கருத்து:

  1. வெங்கட் நாகராஜ்9 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 7:34
    தேவையான நேரத்தில் சரியான பகிர்வு. நன்றி.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan22 ஜூன், 2016 ’அன்று’ பிற்பகல் 8:29
    நன்றி வெங்கட் சகோ

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan22 ஜூன், 2016 ’அன்று’ பிற்பகல் 8:29
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

நவக்ரஹக் கோலங்கள்.

 நவக்ரஹக் கோலங்கள்.